விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023

0

Disclaimer: இவைகள் யாவுமே பொதுவான பலன்களே. உங்கள் ஜனன ஜாதகத்தின் கிரக நிலையை பொறுத்தும் தசா புத்திகளை பொருத்தும் ஜாதக வலுவை பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்சிகளையும் பொருத்தும் பலன்களில் மாற்றங்கள் இருக்கும் எனவே எந்த காரியத்தை செய்யும் முன்பு உங்களுடைய ஜோதிடரிடம் அல்லது என்னிடம் ஜாதகத்தை காண்பித்து முடிவு செய்வது சிறப்பை தரும்

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023:

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி (22.04.2023) சனிக்கிழமை சூரிய உதயாதி 43.30 நாழிகைக்கு இரவு 11:26 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்

திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023:

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி (21.04.2023) வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி 58.14 நாழிகைக்கு மறுநாள் விடியற்காலை 05:14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 5 மிடமான பாக்கிய ஸ்தானத்திலிருந்து கொண்டு பாக்கிய குருவாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் பலவித நன்மைகள் மகிழ்ச்சிகள் குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உறவுகளில் விருத்தி குரு உபதேசம் உபாசனை பாட்டனார் வழியில் நன்மைகள் பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்திருப்பார் இது போன்ற சுப நிகழ்வுகள் அனைத்தும் நடந்தேறி இருக்கும்.
இனி அடுத்த ஒரு வருட காலம் உங்கள் ராசிக்கு 6 மிடத்தில் ருணரோக சத்துரு ஸ்தானம் எனப்படும் இடத்திற்கு ருணரோக சத்துரு குருவாக பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் உங்கள் 2, 12 & 10 ஆகிய இடங்களை இனி பார்வை செய்வார்.

ஜோதிட கட்டுரை

ருணரோக சத்ரு குரு
இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மிக மோசமான காலமாக அமையும்
“சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தலை பூண்டதும்” என்பது ஜோதிட பாடல்
“தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு தார்வேந்தர் பகையுண்டு ரோகமுண்டு என்பர்”
இக்காலத்தில் தரையில் கிடக்கும் தங்கத்தை தன் கைபட்டு எடுத்தால் பித்தளையாக மாறிவிடும் அந்த அளவுக்கு யோகம் எதிர்மறையாக செயல்படும்.

கடன் தொல்லைகள் அதிகரிக்கும் கடன் வாங்கும் சூழ்நிலைகள் ஏற்படும் தேவையில்லாத கடன்கள் உண்டாகும்
எதிரிகள் தொந்தரவு அதிகரிக்கும் எதிரிகளால் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டமாக இருக்கும். வழக்குகளில் கவனம் தேவை தேவையற்ற வழக்குகள் ஏற்பட்டும் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டிய காலகட்டம்
உடல் நலத்தில் மிகுந்த எச்சரிக்கை அவசியம் திடீர் மருத்துவச் செலவுகள் உடல்நல பாதிப்புகள் தேவையில்லாத தொந்தரவுகள் ஏற்படும் சரியான உணவு உறக்கம் அவசியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் தேவையற்ற பயணங்கள் தவிர்க்க வேண்டும்.
உணவு கட்டுப்பாடு அவசியம் தேவை வெளியிடங்களில் தீட்டு வீடுகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டியது அவசியம். ஃபுட் பாய்சன் ஆகா வாய்ப்புகள் உண்டு.
வீட்டில் பொருட்கள் களவு போகும் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போக வாய்ப்பு உண்டு
எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் உண்டாகும் எனவே திட்டமிட்டு செயல்படுவது நன்மையை தரும்
தேவையில்லாத இழப்புகள் எதிர்பாராத இழப்புகள் திட்டமிடாத இழப்புகள் சந்திக்கும் காலகட்டம்
எல்லாவற்றிலும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டிய காலகட்டம்

Jothida Rathna Chandrasekaran Post

எதிர்பாராத இடமாற்றங்கள் விரும்பத்தகாத இடமாற்றங்கள் வேலை மாற்றங்கள் டிபார்ட்மெண்ட் மாற்றங்கள் வேலைகளில் பலவித தொந்தரவுகள் ஏற்படும் காலகட்டம்
தொழில் செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையிடனும் கவனம் இருக்க வேண்டும். தொழில் வழியில் நஷ்டங்கள் இழப்புகள் மூடும் நிலை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மாற்றலாம் என்ற சிந்தனையும் ஏற்படும்
தேவையான தேவைக்கேற்ப தன வரவுகள் வந்து சேரும்
புதிய உறவுகள் வரவுகள் ஏற்படும்
சுப விரயங்கள் அதிகரிக்கும் அதனால் கடன் ஏற்படும்
எதிர்பாராத திடீர் வெளிநாடு பயணங்கள் வேலைகளில் மாற்றங்கள் ஏற்படும் அதனை ஏற்றுக்கொண்டு நடப்பது தொந்தரவுகள் இருந்தாலும் சிறப்பாக அமையும்
தூர பயணங்களில் செலவுகள் அதிகரிக்கும் அதனால் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்
கண் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை செலவுகள் ஏற்படும்.
கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் செலவுகள் ஏற்படும்

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு பாலபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட வழிபட சிறப்பு
பிராமண குழந்தைகளுக்கு படிப்பு செலவு செய்ய பலவித நன்மைகள் வந்து சேரும்
சன்னியாசிகளுக்கு அன்னதானம் அளித்து வஸ்திர தானம் செய்ய பலவித தொல்லைகள் குறையும்

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More