2019 குரு பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி
குரு பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி – 65/100.
தனுசு ராசியை பொறுத்த வரை குருபகவான், ராசி அதிபதியாகவும், நாலாம் அதிபதியாகவும் வருவார்.
இதுநாள்வரை 12ம் இடமான விருச்சிகத்தில் நின்று விரயத்தை கொடுத்துக் கொண்டிருந்த குரு பகவான் தற்போது ராசியில் உள்ள சனி பகவானுடன் இணைந்து 7ம்வீட்டில் இருக்கும் ராகுவை பார்ப்பதால் ராகு மற்றும் சனியால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும்.
அதேநேரத்தில் தனுசு ராசியைப் பொறுத்தவரை இன்னும் ஏழரைச் சனி தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.
பொதுவாக ஜென்ம ராமர் வனத்தினிலே சீதையை சிறை வைத்ததும் என்ற ஒரு பாடல் ராமாயணத்தில் உண்டு.
எம்பெருமான் ஸ்ரீமன் ஸ்ரீராமனின் ஜாதகத்தில் ஜென்மத்தில் குரு வந்தபோது சீதையைத் தேடி வனத்தில் அலைந்தார் என்பது அதன் பொருள்.
குரு பொதுவாக ஜென்மத்தில் வரக்கூடாது.
ஆனால் இந்த விதி தனுசு ராசிக்காரர்களுக்கு முழுமையாக பொருந்தாது ஏனென்றால் ராசிக்கு அவரே அதிபதி.
இங்கு ராசி அதிபதியாகிய குருபகவான் ராசியிலேயே ஆட்சி பெறுவது ஒரு விதத்தில் நல்லதே.
குரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9-ஆம் இடங்களைப் பார்த்து புனிதப்படுத்துவார்.
குரு பார்வை பெறும் இடங்கள் அனைத்தும் சிறப்பான இடங்கள் என்பதால் இதுநாள்வரை பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லாமலிருந்தது. இனி பிரச்சனைகளை சமாளிக்க கூடிய அளவிற்கு மனவலிமையும், பொருள் வளமும் கூடும்.
அதேநேரத்தில் ஏழரைச்சனி தொடர்வதால் அகலக்கால் வைக்க வேண்டாம்.
குரு 5-ஆம் பார்வையால் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்கும். பெரியோரின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
ஏழாம் இடத்தை பார்ப்பதால் திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் தடையின்றி நடைபெறும்.
ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பதால் நீண்ட நாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த சொத்து வழக்குகள் முடிவுக்கு வரும். ஆன்மீக எண்ணம் அதிகரித்து ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் நிலை உருவாகும்.
அடுத்த சில மாதங்களில் சனி பகவான் 2-ஆம் இடமான தன, குடும்ப , வாக்கு ஸ்தானத்திற்கு செல்வதால் பணம் சார்ந்த விஷயங்களில் மிக மிக எச்சரிக்கை தேவை. யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
மாணவர்கள் சிரத்தையுடன் படிப்பது நல்லது.
வேலை பார்க்கும் இடத்தில் வெறுப்பை உமிழ வேண்டாம்.
குடும்பத்தில் அவ்வப்போது குண்டு வெடித்தாலும் மிகவும் எச்சரிக்கையுடன் வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும். இல்லையென்றால் குடும்பத்தில் விரிசல் உண்டாகும்.
எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
பொதுவாக இந்த குருபெயர்ச்சி ,முன் இருந்த நிலைமைக்கு பரவாயில்லை.
இப்பொழுது பிரச்சனை சமாளிக்கும் நிலையை மட்டுமே கொடுக்கும் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் வேண்டாம்.
14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல்10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.
இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.
30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணவிஷயத்தில் கவனம் தேவை. 01 .6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.
தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி சனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழரைச் சனியுடன் தொடர்வதால் இன்னும் சில காலங்களுக்கு கொஞ்சம் பொறுமையுடன் இருப்பது நல்லது.
பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
திருச்செந்தூர் முருகனை தினசரி நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வரவும்.
Comments are closed.