2019 குரு பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி
குரு தற்போது கோட்சாரத்தில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு 5/11/19ல் ஐப்பசி 18/19 அன்று அதிகாலை 5.17க்கு மாற்றம் அடைகிறார்.
குரு தற்போது பெயர்ச்சியாகும் இடம் மிக மிக நல்ல இடம். எத்தனை மிக வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்.
விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் – 92/100.
விருச்சிக ராசிகாரர்களை வீர தீர சூரனாக மாற்றப்போகும் குருபெயர்ச்சி இது என்றால் அது மிகையல்ல.
காரணம் ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் என்பது இன்றியமையாத தேவை.
பணம் படைத்தவன் முகத்தில் இருக்கும் தேஜஸ் பணம் இல்லாதவனிடம் இருப்பதில்லை.
நவகிரகங்களில் குருவுக்கு மட்டுமே தன காரகன் என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
அதிலும் விருச்சிக ராசிக்கு குருபகவான் பூரண முதல் சுபர் ஆவார்.
விருச்சிக ராசிக்கு குரு பகவான் 2, 5 அதிபதியாக வருவார். ஆதலால் விருச்சிகத்திற்கு முதல் சுபரும் குருவே.
வளங்களை கூட்டி, வறுமையை ஓட்டி, வாழ்க்கையை காட்டி, வசதியை நீட்டிக்க வருகிறார் குரு பகவான்.
அப்படிப்பட்ட குரு பகவான் தனது ஆட்சி மூலத்திரிகோணமாகிய தனுசு வீட்டில், இரண்டாம் இடமான, தன ஸ்தானத்தில் ஆட்சி பெறுவது மிக மிக மிக சிறப்பு.
விருச்சிக ராசிக்காரர்களில் 95/100 பேர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி உள்ளனர்.
காரணம் 2011ஆண்டு இறுதியில் இருந்து இன்றுவரை ஏழரைச்சனி நடக்கின்றது. விருச்சிக ராசிக்கு சனியின் தண்டனை கடுமையாகவே இருக்கும்.
காரணம் விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய்க்கு சனி முழு பகைவர்.
குருபெயர்ச்சியால் முதல்தரமான யோகத்தை அனுபவிக்க இருக்கும் ராசியில் கண்டிப்பாக முதலிடத்தில் விருச்சிக ராசியே உள்ளது.
12 வருடத்திற்கு பிறகு குரு தன்னுடைய தனுசு வீட்டில் அமர உள்ளது மிகச் சிறப்பான பணப்புழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
2020 ஜனவரி மாதம் முதல் ஏழரைச் சனியும் முழுமையாக விலவகுது கண்ணா மூன்று லட்டு திங்க ஆசையா என கேட்கும் அளவிற்கு யோகமாகும்.
இன்னும் ஒரு வருடத்திற்கு நீங்கள் எந்த பந்து போட்டாலும் அசால்டா, அல்டிமேட்டா 6 அடிப்பீங்க.
மரத்துப்போன இதயத்திற்கு மருந்து போட்டது போல் இந்த குரு பெயர்ச்சி, உங்களுக்கு பாலைவனத்தில் சோலைவனமாக பூக்க இருக்கிறது.
2020 ஆம் ஆண்டு சிறப்பான ,தரமான நல்ல சம்பவங்களை உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்கலாம்.
உங்களுடைய சுய ஜாதகத்தில் நல்ல தசா புத்திகள் நடக்குமாயின் நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் நிச்சயமாக வெற்றி கொடியை சிகரத்தில் நாட்டுவீர்கள்.
இந்த குரு பெயர்ச்சி பலனை படிக்கும் பலர் கண்களில் தற்போது ஆனந்த கண்ணீர் வரலாம். ஆம் வேதனையின் விளிம்பிற்கே சென்ற அவர்களுக்கு சாதனையை செய்ய வைக்கும் இந்த குருபெயர்ச்சி.
தனுசில் ஆட்சி பெற்ற குரு பகவான் 6, 8 & 12-ஆம் இடத்தைப் பார்ப்பார்.
வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
எட்டில் ராகு இருந்து எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் வெளிநாட்டு வேலை வாசம் அமையும். சுய ஜாதகம் ஒத்துழைக்கும் பட்சத்தில்.
இடம் மாற்றம், தொழில் மாற்றம் ஏற்பட்டால் தயக்கமின்றி தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள் அதனால் நன்மையே.
தொழில் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் தொழில் சிறப்படையும்.
குடும்ப ஸ்தானத்தில் குரு ஆட்சி பெறுவதால் திருமணமாகி, குழந்தை பாக்கியம் அமைந்து ஒரு வருடத்திற்கு உள்ளே குடும்பம் அமைய வாய்ப்பு உண்டு
நீண்ட காலமாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து காத்து இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் அமையும்.
மருத்துவ செலவுகள் மட்டுபடும்.
புதிய பதவியும், அதனால் சம்பள உயர்வும், போனஸும் ஊக்கத் தொகையும் கிடைக்கும். சக தொழிலாளர் உதவுவர்.
ஏழரை சனி காலத்தில் நல்ல வேலையில் இருந்தவருக்கு வேலை இழப்பு, தொழில் நட்டம் போன்ற கடுமையான எதிர்மறை அமைப்புகள் நடந்திருக்கும்.
அடிப்படை ஜீவாதாரமான வேலை இழப்பு ,தொழில் நட்டம் இருந்தால் எதைத்தான் சாதிக்க முடியும்.
குருப்பெயர்ச்சிக்குப் பின் நல்ல வேலை அமையும் .தொழிலில் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவோ, முதலீடுகளை செய்யவோ ஏற்ற நேரம் இது.
மாணவர்கள் மாநில அளவில் சாதிக்கும் வாய்ப்பு உண்டு.
ஏழரை சனி ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு படிப்பினையை கொடுத்து விட்டு சென்றிருக்கும்.
தோல்வியடைந்தவனுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கும்.
அவமானப்பட்டவனுக்கு மட்டுமே சாதிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும்.
அந்த நல்ல காலகட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வந்துவிட்டது.
பட்டைய கிளப்புங்க இனி
14 .12 .2019 முதல் 10.1.2020 வரை குரு அஸ்தமனமாக இருப்பதால் இக்காலகட்டங்களில் பணம் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதுபோல் நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 14.12.2019 முதல் 10.1.2020 வரை இந்த இடைப்பட்ட நாளை செயற்கை கருத்தரிப்பிற்கு பயன்படுத்த வேண்டாம்.
இந்த காலகட்டங்களில் நீங்கள் செய்யும் முயற்சி தோல்வியில் முடியலாம்.
30.3.2020 முதல் குரு அதிசாரமாக மகர ராசிக்கு செல்வதால் பணவிஷயத்தில் கவனம் தேவை. 01 .6 .2020 வரை இந்நிலை நீடிக்கும்.
தனுசு ராசியில் மூலம் 4 பாதம், பூராடம் 4 பாதம் உத்திராடம் 1 பாதம் நட்சத்திரங்கள் உள்ளன.
மொத்தத்தில் சொல்லியடிக்கும் கில்லியாக உங்களை மாற்றப் போகிறது வரும் குருப்பெயர்ச்சியும் சனிப்பெயர்ச்சியும்.
பரிகாரம்
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
திருச்செந்தூர் முருகனை தினசரி நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வரவும்.
Comments are closed.