குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்குமான பொது பலன்
குரு பெயர்ச்சி பலன்களை பார்ப்பதற்கு முன்பு, உங்கள் சுய ஜாதக அமைப்பே முதலில் பேசும் .உங்களுக்கு யோக தசைகள் நடந்தால், கோட்சார அமைப்பு கெட்டிருந்தாலும் பெரிய அளவிற்கு கெடுதல் செய்ய முடியாது.
( அஷ்டமச்சனி, ஏழரைச்சனி கொஞ்சம் பாதிக்கும்). மற்றபடி, குரு பெயர்ச்சி எல்லாம் எறும்பு கடித்தது போல் தான் இருக்கும். கொஞ்சம் படிப்பினையை கொடுக்கும்.
இந்த குரு பெயர்ச்சியில் யோகம் பெறும் ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி, தனுசு மீனம் இந்த ஐந்து ராசிகளும் நல்ல யோக பலனை அடைகின்றனர் .அதாவது இதுவரை இருந்த நிலையில் இருந்து ஒரு படி மேல்.
ஒரு ஜாதகத்தில் திசை 50 சதவீதமும், புத்தி 20 சதவீதமும் ,அந்தரம் 5 சதவீதமும் பலனை எடுத்து செய்யும். மீதமுள்ள 25 சதவீதத்தில் சனி, குரு ராகு கேது பெயர்ச்சி மற்ற கிரகங்களின் பெயற்சிகளின் பலன் அமையும்.
ஏழரை , அஷ்டம சனி நடக்கும் போது கிட்டத்தட்ட 50 சதவீத பலனை இவை ஆக்கிரமித்து விடும். மற்றபடி கோச்சார அமைப்புகளின் பலனை நீங்கள் உணர்வதற்கு முன் அவை கடந்து விடும். அல்லது சிறிதளவு உணரப்படும்.
டிவியிலும், யூடியூபிலும், பத்திரிக்கைககளிலும் இதை மிக மிக மிகைப்படுத்தி வெளியிடுகின்றனர்.
சரி பொதுபலனை பார்க்கும் போது , குரு பகவான் ஜாதகத்தில் தன காரகன் என்றும் புத்திரகாரகன் என்று ஜோதிடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளார். சுப கிரகங்களில் முதல் சுபர் குருவே.
அந்த குரு பகவான் இன்று மகரத்தில் நீச்சம் அடைந்து ,நீசபங்கம் ஆகி பலன் நடத்தவுள்ளார். குரு பெயர்ச்சி நேரம் திருக்கணிதப்படி இன்று(20.11.2020) மதியம் 1.23Pm. ஒரு சுப கிரகம் நீசம் அடைவது நல்ல பலன் கிடையாது . அதுவே நீசமாகி, நீச பலன் என்பது நல்ல பலனே.
உலக அளவில் பொருளாதார மந்தம் ஏற்படும். தங்கம் விலை குறையும். பணப்புழக்கம் சீராக இருக்காது. பணவீக்கம் அதிகரிக்கும்.
பணத்தை சிக்கனமாக செலவழிப்பது நல்லது. சில இடங்களில் கடவுள் சார்ந்த பிரச்சினைகள் உண்டு. குழந்தைகள் நலன் பேணப்பட வேண்டும்.
மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு நீசம் ஆவதால் தொழில் சார்ந்த அமைப்புகளில் கவனம் தேவை. பத்தில் குரு பதவியை பறிக்கும் என்பதால் தொழில் சார்ந்த அமைப்புகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கொடுக்கல்-வாங்கலில் கவனம். வியாபாரத்தை விரிவுபடுத்த இது நல்ல காலம் அல்ல.
ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
கடந்த மூன்று ஆண்டுகளாக அஷ்டமச்சனி, கடந்த வருடம் அட்டம குரு என்ற கெடுதலான பலன்கள் நீங்கி ஆனந்தமயமான வாழ்க்கை ஆரம்பிக்க இருக்கிறது. ஒரே வரியில் சொல்வதென்றால் ரிஷப ராசிக்காரர்களுக்கு 2021 வருடம் நல்ல யோகமான வருடம்.
மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
அஷ்டம சனி, அஷ்டம குரு இரண்டும் இணைவதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒன்றுக்கு மூன்று தடவை யோசித்து செயல்படுவது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களை வாங்க வேண்டாம். தேவை இல்லாத பஞ்சாயத்துக்களில் தலையிட வேண்டாம். படிப்பில் கவனம் தேவை. ஒரு வரி பலன் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்.கவனம்.
கடக ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
கடந்த காலகட்டங்களில் ஏற்பட்ட கடன்கள் அடையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் தேடினால் திருமணம் கைகூடும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. நண்பர்கள் உதவுவர். பொருளாதார மந்த நிலை மாறி, பணவரவு ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி யோகமே.
சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
உடல் நலத்தில் கவனம் தேவை .சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். கடன் வாங்குவதும் அளவோடு இருக்கட்டும். தேவை இல்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் வாங்கி கடனை அடைக்க வேண்டாம். சேமிப்பு முக்கியம். எனினும் சனி பலமாக உள்ளதால் பெரிய அளவில் குறைகள் இல்லை.
கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
கடந்த இரண்டு வருடங்களாக குரு, சாதகமற்ற நிலையிலிருந்து விலகி சந்தோசத்தை கன்னி ராசிக்கு அள்ளிக் கொடுக்கப்போகிறார் லாபங்கள் அதிகரிக்கும். பணப்புழக்கம் நல்ல சீரான அளவில் இருக்கும்.நீண்ட நாள் குழந்தையை எதிர்பார்த்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். செய்தொழிலில் நல்ல லாபம் உண்டு.
துலா ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
வேலை சார்ந்த விஷயங்களில் சிலருக்கு இடமாற்றம், தொழில் மாற்றம் உண்டு. சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். விரயங்கள் ஏற்பட்டால் சுப விரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. வரவுக்கும் செலவுக்கும் ஏற்ற வருமானம் உண்டாகும். குடும்பத்தை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு புதிய தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டால் அளவு முதலீடு செய்து கொள்வது .
விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
பணவரவில் தடுமாற்றம் உண்டு குழந்தைகள் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தாரோடு அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் விரிவாக்கம் தற்போது வேண்டாம். ஆடம்பர பொருட்களை வாங்கி அல்லல்பட வேண்டாம். சிலருக்கு கடன் வாங்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் தேவை அறிந்து அளவோடு வாங்கிக் கொள்வது மட்டும் நல்லது. கொடுக்கல் வாங்கலிலும் கவனம் தேவை.
தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
தனவரவு தாராளமாக இருக்கும் .தடை எல்லாம் நீங்கும். ஏழரை சனி முடிவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இதுநாள் வரை இருந்த பணக் கஷ்டங்கள் எல்லாம் தீரும். குடும்ப ஒற்றுமை மேம்படும் .திருமணம் தடைப்பட்டோருக்கு திருமணம் நடக்கும் . குழந்தைப்பேறும் ஏற்படும். நீண்ட நாள் பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று ஒன்று சேர்வர். அனைத்திலும் ஆனந்தமான வருடம் . இருந்தாலும் 71/2 சனி தொடர்வதால் அடக்கி வாசிப்பது நல்லது.
மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
ஜென்ம குரு, ஜென்ம சனி. சில காலம் எல்லா விஷயங்களிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. தற்போதைய கோட்சார நிலைகள் எதுவும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எல்லா விஷயங்களிலும் கவனம் . தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். இருந்தாலும் சனியை குரு சுபத்துவ படுத்துவதால் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையவே செய்யும். புது முயற்சிகள், முதலீடுகள் இப்பொழுது வேண்டவே வேண்டாம். எல்லாவற்றிலும் கவனம்.
கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
விரய ஸ்தானத்தில் குரு ,சனி. கையில் உள்ள காசை சுப விரயமாக மாற்றி கொள்ளுங்கள். புதிய முதலீடுகள் கண்டிப்பாக கூடவே கூடாது. அகலக்கால் வைக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் இட்டால் நீங்கள் தான் அடைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பனாக இருந்தாலும் நாலடி தள்ளி வைப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் ஏற்பட்டாலும் சாதகமான பலனாக இருக்காது. A to Zஎல்லா விஷயங்களிலும் கவனம் தேவை.
மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள்:
பருத்தி சேலையாய் காய்த்தது என்பதற்கு சிறந்த உதாரணம் நீங்கள்தான் .தொட்டது எல்லாம் துலங்கப் போகிறது. 12 ராசியில் யோகம் பெறும் முதல் ராசி நீங்கள்தான். கோட்சார அமைப்பில் 11-ல் சனி, குரு மூன்றில் ராகு. உங்கள் சுய ஜாதகம் நல்ல யோக அமைப்பில் இருந்தால், கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பதுபோல் பண மழை கொட்டும். என்ஜாய் பண்ணுங்க.
குரு பெயர்ச்சியாகும் இன்று (20.11.2020) கந்தசஷ்டி என்பதால், முடிந்தவர்கள், குரு ஸ்தலமான திருச்செந்தூர் சென்று வரவும். நல்ல யோகமான பலன் உண்டு.
மற்றவர்கள் அருகிலுள்ள முருகன் ஆலயத்திற்குச் சென்று முருகனை வழிபட்டு, குருவிற்கு உங்கள் பெயரில் ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
திருச்செந்தூர் முருகனை தினசரி வழிபட்டு வர, தீராத வினையெல்லாம் தீரும். குருவினால் ஏற்படும் தொல்லைகளும் நீங்கும்.
ஓம் நமசிவாய
Comments are closed.