General Benefits of Guru Peyachi 2022 Dhanu Rasi

குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023 தனுசு ராசி

தனுசு ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் தாய் வீடு வண்டி வாகனம் சுக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 4ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 4 மிட குருவாகிறார்.

4 மிட குருவாகி அட்டம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 8 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும்
கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும்
அயன போக சுகம் விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய
12 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப & அசுப பலன்கள் நடந்தேறும்.

“தருமபுத்திரர் நாலிலே
வனவாசம் அப்படிப் போனதும்”
என்ற பாடலின் படி

  • நான்காம் இடமான பூமி வீடு வண்டி வாகனம் சுகம் தாய் கல்வி இந்த வகையில் குறைபாடுகள் ஏற்படும்.
  • தாயாரின் உடல் நல பாதிப்புகள் அதிகப்படும் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
  • வண்டி வாகனங்களில் அடிக்கடி பழுதுகள் ஏற்படும் தேவையில்லாத அர்த்தமற்ற செலவுகள் ஏற்படும். திடீர் பழுது காரணமாக அவதிகள் ஏற்படும். வண்டி வாகன பயணத்தில் மிக மிக எச்சரிக்கை அவசியம். பழைய வண்டிகளை மாற்றி புதிய வண்டிகளை வாங்கிக் கொள்வது சிறப்பு
  • பூமி மனை வீடு இவைகளில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம். புதிய சொத்துக்கள் வாங்குவதில் மிகுந்த கவனமும் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். வீடு மாற்றங்கள் உண்டாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் வேறு இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டிய காலகட்டங்கள். நிலத்தகராறு நிலத்தில் உள்ள பிரச்சனைகள் அதிகமாக சந்திக்கும் காலகட்டம்.
  • சுகக் கேடுகள் அதிகரிக்கும். இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. நெஞ்சு சார்ந்த வலி வேதனைகள் ஏற்படும்.
  • பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனம் தேவை. விரும்பிய கல்வி கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். தேர்வு நேரங்களில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்
  • வியாபாரிகள் தொழிலதிபர்கள் புதிய இயந்திரங்களை நிறுவி வகையில் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை. அடிக்கடி இயந்திரப் பழுதுகள் ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும். எனவே புதிய இயந்திரங்களை மாற்ற சிறப்பு.
  • வங்கி இருப்பு கரையும் காலகட்டம். பண சங்கடங்கள் ஏற்படும். புதிய முதலீடுகள் பிரச்சனைகளை தரும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
  • உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். மறைமுகப் பிரச்சனைகள் தொந்தரவுகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.
  • பங்கு சந்தையில் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம்.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வாழும் காலகட்டம் இது.
  • அடிக்கடி தூர பயணங்கள் ஏற்படும் வேலை நிமித்தமாக.
  • அரசு ஊழியர்கள் உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடங்களில் இடமாற்றம் உண்டாகும் புதிய பதவிகள் பொறுப்புகள் கிடைக்கும். கௌரவப் பதவிகள் வந்து சேரும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும் காலகட்டம்.
  • தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வியாபாரங்கள் தொடங்கும் காலகட்டம். இருக்கும் தொழிலில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். விரிவாக்கங்கள் நடைபெறும் காலகட்டம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு நன்மைகள் கூடிவரும்.
  • தண்ட விரைய செலவுகள் குறையும் காலகட்டம். சுப விரயங்கள் ஏற்படும்.
  • நிம்மதியான உறக்கம் ஏற்படும். அயன சயன போகம் இவற்றில் குறைபாடுகள் நீங்கும்.
  • திருமணம் நடந்தேறும் காலகட்டம்
  • . நீண்ட நாட்கள் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலகட்டம். கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் தீரும்.
  • குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலகட்டம்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
வேத பாடசாலையில் படிக்கும் பிராமணர் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்வது நலம்.
யானைக்கு அடிக்கடி கரும்பு வாங்கி தர சிறப்பு

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்

Blog at WordPress.com.

%d bloggers like this: