General Benefits of Guru Peyachi 2022 Kanni Rasi

குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023 கன்னி ராசி

கன்னி ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் களத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 7ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி சப்தம குருவாகிறார்.

சப்தம குருவாகி லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் உங்கள் ராசியை ஏழாம் பார்வையாகவும் தைரியம் வீரியம் இளைய சகோதரம் என்று சொல்லக்கூடிய மூன்றாம் இடத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப பலன்கள் நடந்தேறும்.

  • திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடந்தேறும் காலகட்டம்
  • காதல் வெற்றி பெறும், காதல் வெற்றியாகி திருமணம் கைகூடும் காலகட்டம்
  • நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணங்கள் இக்காலத்தில் எளிதில் நிறைவேறும்
  • மனைவியால் யோகம் ஏற்படும்
  • நீண்ட நாட்களாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர காலகட்டம், சண்டை சச்சரவுகள் நீங்கும் பிணக்குகள் தீரும் பிரிவினை வழக்குகள் முடிவுக்கு வந்து ஒன்று சேரும் காலகட்டம்.
  • புதிய உறவுகள் வலுப்படும்
  • புதிய தொழில்கள், கூட்டு தொழில்கள் வலுப்பெறும் அல்லது தொடங்கும் காலகட்டம்
  • சொந்தம் சுற்றத்தில் இருந்த பிணக்குகள் நீங்கும் அதன் வழியில் சுபச் செலவுகளும் ஏற்படும்
  • செல்வாக்கு அந்தஸ்து கௌரவம் மரியாதை உயரும்
  • கூட்டுத்தொழில் வழியில் லாபங்கள் அதிகரிக்கும்.
  • மனதில் நினைத்த சுப காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும்
  • மூத்த சகோதரர்கள் வழியில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
  • அன்யோன்யம் அதிகரிக்கும் மூத்தவர்கள் உடல்நலம் சரியாகும் காலகட்டம்.
  • உங்கள் உடல்நலனில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்வுக்கு வரும் நிவாரணங்கள் கிடைக்கும்.
  • உங்கள் உடலின் தேஜஸ் கூடும் வசீகரம் அதிகரிக்கும்
  • உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் காலகட்டம்.
  • எழுத்து ஒப்பந்தங்கள் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த எழுத்து ஒப்பந்தங்கள் சுமூகமாக முடிவடையும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் நன்மைகள் வந்து சேரும்.
  • சகோதரர்கள் வழியிலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்வு கிட்டி பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும் .
  • உங்கள் தைரியமும் வீரியமும் அதிகரிப்பு
  • உத்தியோகம் தொழில் வியாபாரம் அரசு ஊழியர்களுக்கு இது ஒரு நன்மையான காலகட்டமாக அமையும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
அந்தணர்களுக்கு அல்லது அந்தனர் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் படிப்புக்குத் தேவையான உதவிகள் செய்வது நன்மையளிக்கும்.
ஒருமுறை யானைக்கு கரும்பு கட்டு வாங்கித்தர பல பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் அல்லது கோவிலில் ஒரு நாள் ஆகாரத்துக்கு பணம் கட்டினால் சிறப்பு

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்

Blog at WordPress.com.

%d bloggers like this: