கடக ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி பாக்கிய குருவாகிறார்.
பாக்கிய குருவாகி உங்கள் ராசியை ஐந்தாம் பார்வையாகவும்
- முயற்சி தைரியம் வீரியம் இளைய சகோதரம் என்று சொல்லப்படும் மூன்றாம் இடத்தை ஏழாம் பார்வையாகவும
- பாக்கியம், பூர்வ புண்ணியம் குழந்தை பாக்கிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
- அதனால் கீழ்கண்ட சுப பலன்கள் மேற்கண்ட காலத்தில் நடந்தேறும்.
- “ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு” என்பது ஜோதிட மொழி வழக்கு
- 9-ஆம் இடம் என்பது திரிகோணம் ஆகும். இது மிகமிக ராஜயோகமான இடம் ஆகும். இது பாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே பாக்கியங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும், கௌரவம் மதிப்பு செல்வாக்கு ஏற்படும் காலகட்டம். வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும். கடன்கள் அனைத்தும் தீரும். பொருளாதாரப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம் சுபகாரியம் புத்திர பாக்கியங்கள் ஏற்படும்.
- மேற்படிப்பு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மேற்படிப்புகள் அமையும் காலம். விரும்பிய மேற்படிப்புகள் அமையும் கிடைக்கும்.
- வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மிக விரைவில் வேலைவாய்ப்புகள் அமையும்.
- நீண்ட நாட்களாக திருமணம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடந்தேறும் காலகட்டம்
- அனைத்து விதமான பாக்கியங்களும் சேரும். புதிய பொருட்கள் சேர்க்கை ஏற்படும். வீட்டு உபயோக பொருட்கள் சேரும். புதிய நகை ஆபரணங்கள் வெள்ளிப் பொருட்கள் வைர நகைகள் சேரும் காலகட்டம்.
- நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் தீரும்
- குடும்பத்தில் சுப காரியங்கள் அடிக்கடி நடக்கும்
- பொருளாதாரப் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும்
- தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்
- வெளிநாடு உல்லாச பயணங்கள் உண்டாகும்
- நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் கால கட்டம்
- உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தேடித்தரும்
- புதிய சொத்துக்கள் குறித்த எழுத்துக் ஒப்பந்தங்கள் ஏற்படும்
- இளைய சகோதரர்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும் காலகட்டம். அவர்களிடம் இருந்த பிரச்சனைகள் சுமூக தீர்வு கிட்டும்
- பங்குசந்தையில் உள்ளவர்கள் அதிகமான ஆதாயங்களை பெறும் காலகட்டம்.
- உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் விரும்பிய இடமாற்றங்கள் / பதவி மாற்றங்கள் / ஊர் மாற்றங்கள் கிடைக்கப்பெறும்
- பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். அதுகுறித்த சகோதரர்களிடம் இருந்த பிணக்குகள் மாறி எழுத்து ஒப்பந்தங்கள் ஏற்படும்.
- விவசாயப் பெருமக்களுக்கு விளைச்சல் கூடும் விளைச்சலில் நல்ல லாபங்கள் கிடைக்கும் பணப் பயிர்களில் அதிகமான லாபங்களை எதிர் பார்க்கலாம்.
- பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். மாதவிடாயிலிருந்து குளறுபடிகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் கால கட்டம், நீண்ட காலம் மருத்துவத்தின் மூலம் அந்த பாக்கியம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
- அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் பொறுப்புகள் மேலிட ஆதரவுகள் கிடைக்கும் காலகட்டம் அதன்மூலம் வருமானம் அதிகரிக்கும் மதிப்பு மரியாதை கூடும் பலருக்கு கௌரவப் பதவிகள் பெரிய பதவிகள் வந்து சேரும்
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
அந்தணர்களுக்கு அல்லது அந்தனர் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் படிப்புக்குத் தேவையான உதவிகள் செய்வது நன்மையளிக்கும்.
எச்சரிக்கை:
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்