குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023 கும்ப ராசி

525

கும்ப ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் தனம் குடும்பம் வாக்கு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 2 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி தன குருவாகிறார்.

தன குருவாகி ருன ரோக சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும்
அட்டம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 8 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும்
கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய
10 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப பலன்கள் நடந்தேறும்.

 • தன வரவுகள் அதிகரிக்கும். கையில் தாராள பணப்புழக்கம் ஏற்படும்.
 • உங்கள் வாக்கிற்கு மரியாதை ஏற்படும். உங்கள் சொல்படி அனைவரும் நடக்கும் காலகட்டம்
 • ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்படும். படிப்பில் இருந்த சுனக்கங்கள் நீங்கும்.
 • உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும் புதிய முயற்சிகள் கைகூடும் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும்
 • உடல் நலம் முழுமையாக சரியாகும். நீண்ட நாட்களாக நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு பரிபூரன சுகம் கிட்டும். மருத்துவமனையில் இருந்தவர்கள் நோயால் விடுபட்டு வீட்டிற்கு வந்து சேரும் காலகட்டம் மருத்துவச் செலவுகள் குறையும்.
 • கடன் பிரச்சினைகள் முற்றிலுமாக முடிவுக்கு வரும். கடன்கள் அனைத்தும் தீரும். அதிக வட்டி தொகைக்கு வாங்கிய கடன்கள் வங்கிகள் மூலம் குறைவான வட்டியில் வாங்கி அடைக்கும் காலகட்டம். புதிய வங்கிக் கடன்கள் கிடைக்கும்.
 • எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் மறையும். எதிரிகள் இல்லை என்ற நிலை உருவாகும்.
 • நீண்ட நாட்களாக நடந்து கொண்டு நடந்து கொண்டிருந்த வழக்குகள் முடிவுக்கு வரும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
 • புதிய வேலைவாய்ப்புகள் அமையும். நீண்டகாலமாக வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அமையும். புதிய வேலைக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் கௌரவப் பதவிகள் வந்து சேரும்.
 • தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் வியாபாரம் மேன்மையடையும் புதிய தொழில் தொடங்கும் காலம் கட்டம் விஸ்தரிப்பு ஏற்படும். விரிவாக்கம் ஏற்படும். புதிய கூட்டுத் தொழில் அமையும் . கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான காலகட்டம்.
 • அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கௌரவப் பதவிகள் புதிய புதிய பொறுப்புகள் வசதி வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆதாயமும் வந்து சேரும். மேலதிகாரிகளின் ஆதாயங்கள் கிடைக்கும்.
 • பங்குசந்தைகளில் உள்ளவர்களுக்கு லாபகரமான காலகட்டமாக இருக்கும்.
 • மறைமுக நோய்கள் நீங்கும் காலகட்டம். மறைமுக உறுப்புகளில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
 • எதிர்பாராத லாபங்கள் ஆதாயங்கள் வந்து சேரும்.
 • நீண்ட கால முதலீடுகள் தொடங்கும் காலகட்டம்
 • அனைத்து காரியங்களும் சுபமாக நடக்கும் காலகட்டம் மிக சிறப்பான காலகட்டம்

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
வேத பாடசாலையில் படிக்கும் பிராமணர் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்வது நலம்.
யானைக்கு அடிக்கடி கரும்பு வாங்கி தர சிறப்பு

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More