குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023 கும்ப ராசி

0 207

மீன ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகி ஜென்ம குருவாகிறார்.

ஜென்ம குருவாகி பூர்வ புண்ணியம் குழந்தை பாக்கியம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 5 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும்
ருண ரோக சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 7 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும்
பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய
9 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப பலன்கள் நடந்தேறும்.

‘ஜென்ம ராமர் சீதை வனத்திலே சிறை வைத்ததும்”

என்பதற்கேற்ப

இது உங்களுக்கு வனவாச காலம் ஆகும் எனவே உங்களுக்கு இது பாதகமான காலமாக இருக்கும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் தந்தையுடன் மனகசப்பு முதலீட்டில் பாதிப்பு வேளையில் மந்தப் போக்கு சகோதர வழி வருத்தம் ஏற்படும் காலகட்டம்.

“ஓணான் வேலிக்கு இழுக்க தவளை தண்ணீருக்கு இழுக்க”

என்பது பழமொழி போல் வாழ்க்கை நிகழ்ச்சி இருக்கும்.

  • திருமணங்கள் தடைபடும் காலம்
  • கணவன் மனைவி உறவில்
  • விரிசல் ஏற்படும்
  • கொடுக்கல்-வாங்கலில் தடை தாமதங்கள் உண்டாகும்
  • உடல்நிலை குறைவு அடிக்கடி ஏற்படும்.
  • இருந்தாலும் 5,7,9 ஆகிய இடங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால். கவனமாக இருந்தால் மேற்கண்ட கடுமையான பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
  • வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு செயல்படுவது வேலை பிரச்சனையும் குடும்பத்தில் ஏற்படப்போகும் பிரச்சனைகளையும் தீர்க்கும்
  • திருமணம் நிறைவேறுவதில் பலவித சங்கடங்கள் தடைகள் ஏற்பட்டு திருமணம் முடிவாகும். பிறருக்கு திருமணம் முடிவாகி தடைபடும் அல்லது கால தாமதப்படும். சிலருக்கு உடனடியாக நடந்தேறும்.
  • குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம்.
  • புதிய முதலீடுகளில் கவனம் தேவை
  • விரும்பத்தகாத இடமாற்றங்கள் வேலை மாற்றங்கள் வேலை இழப்புகள் ஏற்படும் காலம்.
  • வேலை நிமித்தமாக தூர பயணங்கள் வெளிநாடு பயணங்கள் ஏற்படும் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவது நல்லது.
  • தொழில் வியாபாரத்தில் பலவித சங்கடங்களை சந்தித்து காலகட்டம்

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும்.

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More