குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023 மகர ராசி
மகர ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் தைரியம் வீரியம் இளைய சகோதரம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 3ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 3 மிட குருவாகிறார்.
3 மிட குருவாகி களத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 7 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும்
பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும்
லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய
11 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப & அசுப பலன்கள் நடந்தேறும்.
“தீதிலா தொரு மூன்றிலே
துரியோதனன் படை மாண்டதும்”
என்பது ஜோதிடப் பாடல்
“தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு மூன்றில் தார்வேந்தர் பகையும் உண்டு,ரோகமும் உண்டு”
என்பது புலிப்பாணி பாடல்
- இதன் பொருள் நம்மை சுற்றி உள்ள உற்றார் உறவினர் நட்பு பதவி பணம் முதலிய படைகள் அழியும் பொருள் விரயம் ஏற்படும்.
- உற்றார் உறவினர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்
- நட்புகள் வழியில் எச்சரிக்கை அவசியம்
- இளைய சகோதரர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்
- முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை
- பண விஷயங்களில், கொடுக்கல் வாங்கலில், முதலீடுகள் செய்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
- நீண்ட நாட்களாக பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் நாள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும்
- திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். நீண்ட நாட்களாக திருமணத்துக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடந்தேறும். முதிர்கன்னி களுக்குத் திருமணம் நடந்தேறும் காலகட்டம்.
- அடிக்கடி தூர பயணங்கள் ஏற்படும்
- புதிய நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். பொதுஜன தொடர்புகள் அதிகரிக்கும். நீங்கள் சந்திக்கும் நபர்கள் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும்.
- குழந்தை பாக்கியம் ஏற்படும் கால கட்டம். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அமையும். இரண்டாவது மூன்றாவது குழந்தை பாக்கியமும் அமையும் வாய்ப்பு உண்டு.
- தந்தையின் உடல்நலம் சரியாகும். தந்தையின் மூலம் நன்மைகள் ஏற்படும் காலம். தந்தை வழியில் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் மற்ற இதர வகையான நன்மைகள் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- பாக்கியங்களும் நன்மைகளும் நிறைந்த காலகட்டம்.
- உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் இவர்களுக்கு லாபகரமான காலகட்டம். பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் ஊர்மாற்றம் அமையும்.
- நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த நல்ல பணி நல்ல வேலைகள் அமையும் காலகட்டம்.
- தொழில் செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிமிதமான லாபங்கள் வந்து சேரும். வியாபார அபிவிருத்தி தொழில் அபிவிருத்தி ஏற்படும். விரிவாக்கம் விஸ்தரிப்பு அவையும் காலகட்டம். ஒன்றுக்கு மேற்பட்ட தொழிலைத் தொடங்கும் காலகட்டம்.
- புதிய பொன் பொருள் ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். விலையுயர்ந்த பொருட்கள் சேரும் காலகட்டம். நினைத்ததையெல்லாம் வாங்கும் காலகட்டம்.
- உங்கள் ஆசை அபிலாசைகள் முழுவதுமாக நிறைவேறும் காலகட்டம். மூத்தவர்கள், சகோதரர்கள் சகோதரிகள் மூலம் நன்மைகளும் ஆதாயங்களும் வந்துசேரும்.
- நீண்டகாலமாக நிறைவேறாமல் இருந்த புனித யாத்திரைகள், தீர்த்த யாத்திரைகள்,. கோவில் வழிபாடுகள் குலதெய்வ வழிபாடுகள் நடக்கும், பூர்வீகத்தில் உள்ள கோயில் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
- வீட்டில் சுபகாரியங்கள் நடந்தேறும். சுபச் செலவுகள் அதிகரிக்கும்
- எதிலும் ஆதாயங்கள் அதிகமாக கிடைக்கும் காலகட்டம்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
வேத பாடசாலையில் படிக்கும் பிராமணர் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்வது நலம்.
யானைக்கு அடிக்கடி கரும்பு வாங்கி தர சிறப்பு
எச்சரிக்கை:
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்