குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023 மேஷ ராசி

337

மேஷராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி விரைய குருவாகிறார்.

விரைய குருவாகி உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தை ஐந்தாம் பார்வையாகவும் ஆறாம் இடத்தை ஏழாம் பார்வையாகவும எட்டாம் இடத்தையும் 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார் அதனால் கீழ்கண்ட அசுப மற்றும் சுப பலன்கள் மேற்கண்ட காலத்தில் நடந்தேறும்.

“வன்மையுறிருந்த ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும்”
என்ற பாடலுக்கு ஏற்ப

  • பதவி இழப்பு, தொழில் துறைகளில் நஷ்டம், எதிர்பாராத விபத்து இப்படி அசுப
  • பலன்களும் ஏற்படும்
  • விரைய குரு என்பதால் சுப விரயங்களும் இதில் அடங்கும் அதன்படி சுப விரயச் செலவுகள் ஏற்படும்
  • புதிய வீடு கட்டுதல் அல்லது இருக்கும் வீட்டை விரிவாக்குதல் அல்லது புதிய வீட்டுக்கு மாறுதல் போன்ற சுப செலவுகள் ஏற்படும்
  • திருமணங்கள் கூடிவரும் காலகட்டம் திருமண செலவுகள் ஏற்படும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்
  • புதிய பொன் பொருள் சேர்க்கைகள் ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும் அதற்குண்டான செலவுகள் உண்டாகும்.
  • நீண்ட கால நோய்கள் மருத்துவத்தின் மூலம் சரியாகும், விபத்து ஏற்பட்டு உடல்நலம் சரியாகும் நோய்கள் நீங்கும்
  • மருத்துவச் செலவுகள் அதிகரித்து உடல் நலம் சரியாகும், நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தவர்கள் மருத்துவச் செலவுகள் மூலம் சரியாகும் காலகட்டம்
  • நீண்ட நாட்களாக இதய அறுவை சிகிச்சைகள் செய்ய காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் நடந்தேறும். இருதய அறுவை சிகிச்சை ஏற்பட்டு அல்லது சிகிச்சை மேற்கொள்பவர்கள் சுகம் பெறும் காலகட்டம்.
  • மருத்துவத்தின் மூலம் உடல் நலம் முழுவதும் தேறிவரும் காலகட்டம்.
  • மறைமுக பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
  • எதிரிகள் தொந்தரவு குறையும்

Jothida Rathna Chandrasekaran Post

பரிகாரம்:

யானைக்கு கரும்பு கட்டு வாங்கித் தருவது
குருமார்களுக்கு அல்லது குருகுலத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்வது
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More