குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023 மிதுன ராசி

0 268

மிதுன ராசி குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 10மிட குருவாகிறார்.

10மிட குருவாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானம் எனும் இரண்டாம் இடத்தை இடத்தை ஐந்தாம் பார்வையாகவும்

குடும்பம் என்று சொல்லப்படும் நான்காம் இடத்தை ஏழாம் பார்வையாகவும

ருண ரோக சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் இடத்தையும் 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட சுப பலன்கள் மேற்கண்ட காலத்தில் நடந்தேறும்.

“10மிட குரு பதி குழையச் செய்யும்”
“அந்தணன் பத்தில் நின்றால் அவதிகள் பல உண்டு”
“ஈசன ரொரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்”

இப்படி குருபகவான் 10-ல் வரும்போது சிறப்பு இல்லாதது, கஷ்டங்களையும் தரும். பத்தில் குரு வரும்போது பதவி பறிபோகும். எனவே தொழில் வகையில் போட்டி பொறாமை ஏற்படும் வேலை இழப்பீடு மாறுதல் அலைச்சல் என்று தொழில் வழி சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்.

 • உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றும் அடிமை தொழில் செய்பவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வேலை இழப்புகள் ஏற்படும்/பதவிகள் பறிபோகும்/ பதவி உயர்வு கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும்/ சம்பள உயர்வு தடைபடும்/ விரும்பத்தகாத துறை மாற்றங்கள்/ விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஊர் மாற்றங்கள் ஏற்படும்/ பணிச்சுமை அதிகரிக்கும்/மேலதிகாரியின் நடவடிக்கைகளுக்கு ஆட்பட நேரிடும்/ பதவி குறைப்பு நடவடிக்கை உண்டாகும்/ வழக்கு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
 • தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்படும். வியாபாரம் தொழில் மேன்மை இருக்காது. நஷ்டங்களை சந்திக்கும் காலகட்டம், தொழில் மாற்றங்கள் ஏற்படும், தொழில் வியாபாரத்தை மூடும் நிலமைக்கு பிரச்சனைகளை சந்திக்கும் காலம். தேவையற்ற அரசு தொந்தரவுகள் ஏற்படும்.
 • தேவைக்கேற்ப பணம் வந்துகொண்டே இருக்கும். சீட்டு பணங்கள் சேமிப்பு பணங்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நீங்கள் சீட்டு நடத்துபவர்கள் ஆக இருந்தால் மிக கவனத்துடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம். பண முடையில் சிக்க வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும்
 • வாக்குகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்
 • விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும்
 • வரன் பேச்சுவார்த்தைகள் முடிவாகி திருமணம் நடந்தேறும் காலகட்டம்.
 • புதிய சொத்துக்கள் வண்டி வாகன வசதிகள் ஏற்படும். வீடுகளில் மராமத்து பணிகள் /விரிவாக்கம் செய்யும் காலகட்டமாக இருக்கும். வசதி குறைவான வீட்டிலிருந்து வசதியான இடத்திற்கு மாறும் காலகட்டம். வாடகை வீட்டிலுள்ளவர்கள் ஒத்திக்கு வசதியான இல்லத்திற்கு மாறும் காலகட்டமாக அமையும் அல்லது புதிய வாடகை வீட்டுக்கு செல்லும் கட்டாயம் ஏற்படும்.
 • வண்டி வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்
 • உடல்நல பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த நோய்கள் விலகும் காலகட்டம். இருதய அறுவைச் சிகிச்சைகள் ஏற்பட்டு நலமாகும் காலம்.
 • நிரந்தர சொத்துக்களின் இது இருந்த பல பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். வங்கி இருப்பு கூடும்.
 • தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய இயந்திரங்களை கடன் வாங்கி நிறுவும் காலகட்டம். எனவே சரியான திட்டமிட்டு கடன் வாங்குவது நன்மையை தரும்.
 • வங்கியில் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு கடன் வசதிகள் கிடைக்கும்.
 • புதிய வேலை வாய்ப்புகளுக்கு வாய்ப்புகள் உண்டு கவனமாக பரிசீலனை செய்து மாற வேண்டிய காலகட்டம்.
 • சேவைத் துறையில் பணிபுரிபவர்கள் நன் மதிப்புகள் பெறும் காலம்
 • விவசாய பெருமக்கள் பலவித தொந்தரவுகள் சந்திக்கும் காலகட்டம். உரத்தட்டுப்பாடுகள் ஏற்படும். பூச்சிகள் தொந்தரவால் விளைச்சல் பாதிக்கப்படும் அதனால் வருமானம் இழப்புகள் ஏற்படும். சில பெருத்த நஷ்டங்களை சந்திக்கும் காலகட்டம். சிலர் விவசாயத்தையே விட்டு சென்று விடலாம் என்ற மனநிலைக்கு போகும் காலகட்டம். எனவே பொறுமை காக்க வேண்டிய அவசியம் உள்ள காலம்
 • பெண்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம் வேலை இழப்புகள் வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் பணிச் சுமைகள் ஆகியவற்றை சந்திப்பீர்கள். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம்
 • மாணவ மாணவியர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல மதிப்பெண்களையும் விரும்பிய கல்விகளையும் மேற்படிப்பு களையும் பெறும் காலகட்டம்.
 • நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் காலகட்டம்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
அந்தணர்களுக்கு அல்லது அந்தனர் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் படிப்புக்குத் தேவையான உதவிகள் செய்வது நன்மையளிக்கும்.

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்

Leave A Reply

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More