General Benefits of Guru Peyachi 2022 Rishaba Rasi

குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023 ரிஷப ராசி

ரிஷப ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி லாப குருவாகிறார்.

லாப குருவாகி உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ஐந்தாம் பார்வையாகவும் ஐந்தாம் இடத்தை ஏழாம் பார்வையாகவும ஏழாம் இடத்தையும் 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார் அதனால் கீழ்கண்ட சுப பலன்கள் மேற்கண்ட காலத்தில் நடந்தேறும்.

இது யோகம் தரும் இடம் லாபஸ்தானம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும் இக்காலத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் புதிய முயற்சிகள் ஆரம்பிக்கலாம்.

  • உத்தியோகம் வியாபாரம் தொழில் வழியில் வரவேண்டிய லாபங்கள் மிக எளிதாக கைக்கு வந்து சேரும் லாபங்கள் அதிகரிக்கும்.
  • உத்தியோகஸ்தர்கள், அரசு ஊழியர்கள் பதவி உயர்வுகள் /சம்பள உயர்வுகள்/ பதவி உயர்வுடன் கூடிய சம்பள உயர்வுகள்/ விரும்பிய இடமாற்றம் துறை மாற்றங்கள்/ விரும்பிய ஊர் மாற்றங்கள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பரிபூரண ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மூலம் நன்மைகள் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
  • தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய லாபங்களை சந்திக்கும் காலகட்டம். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய உகந்த காலகட்டம். புதிய தொழில் வியாபாரங்களையும் தொடங்கும் காலகட்டம். Export-import செய்பவர்கள் மிகுந்த ஆதாயம் கிடைக்கும்.
  • பங்குசந்தைகளில் உள்ளவர்களுக்கு மிகுந்த ஆதாயம் கிடைக்கும் காலகட்டம்.
  • விவசாய பெருமக்களுக்கு இந்த காலகட்டத்தில் அமோக விளைச்சல் ஏற்பட்டு எதிர்பாராத லாபம் வரவுகள் பயிர்கள் மூலம் வந்து சேரும்.
  • புதிய எழுத்து ஒப்பந்தங்கள் ஏற்படும்.
  • இளைய சகோதரர்களின் வழியிலிருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடிவுக்கு வரும்.
  • வரன் பேச்சுவார்த்தைகள் முடிவாகி திருமணம் நடந்தேறும் சுபகாரியங்கள் நடந்தேறும் காலகட்டம்.
  • நீண்ட நாட்களாக பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரும் காலகட்டம்/ கணவன் மனைவி இடையே ஒற்றுமை அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
  • காதல் வெற்றி பெறும் காதல் திருமணம் கைகூடும் காலகட்டம்./இளைஞர்களுக்கு புதிய காதல் ஏற்படும் காலகட்டம்
  • நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • தூர பயணங்கள் / வெளிநாடு பயணங்கள் உண்டாகும்.
  • பொதுஜன தொடர்புகள் மூலம் நன்மைகள் வந்து சேரும்

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
அந்தணர்களுக்கு அல்லது அந்தனர் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் படிப்புக்குத் தேவையான உதவிகள் செய்வது நன்மையளிக்கும்.

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்.

Blog at WordPress.com.

%d