விருச்சிக ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் பூர்வ புண்ணியம் குழந்தை பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 5ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 5 மிட குருவாகிறார்.
5 மிட குருவாகி பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும்
லாபம் ஆசை அபிலாசைகள் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும்
உங்கள் ராசியை 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப பலன்கள் நடந்தேறும்.
- 5-ஆம் இடம் என்பது புத்திரம், குரு உபதேசம், உபாசனை, மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், பூர்வ புண்ணியம் இவைகளை குறிக்கும். இக்காலத்தில் மன மகிழ்ச்சியான செயல்கள் நடைபெறும்.
- திருமணமாகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் நிறை வேறும் காலகட்டம். முதிர்கன்னி களுக்கும் திருமணம் நடந்தேறும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும் காலகட்டம். இரண்டாவது திருமணம் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் நிறை வேறும் காலகட்டம்.
- கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அல்லது பிரிவுகள் மறைந்து ஒன்று சேரும் காலகட்டம்.
- பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேரும் காலகட்டம்.
- காதல் செய்பவர்கள் காதலில் வெற்றி பெறும் காலம் திருமணம் நடந்தேறும். பெற்றோர்களின் ஆதரவும் கிடைக்கும்
- திருமணமானவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் ஏற்படும்.
- நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் அமையும்.
- பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் குழந்தை பாக்கியம் கிட்டும்.
- நீண்டகால ஆசைகள் கோரிக்கைகள் நிறைவேறும்
- உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்
- புனித யாத்திரைகள் தீர்த்த யாத்திரைகள் நிறைவேறும் காலகட்டம். தூரதேச பயணங்கள் ஏற்படும்
- தடைபட்டிருந்த குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாடுகள் முறையாக நடந்தேறும். குலதெய்வ கோயில் கட்டும் பணியும் அல்லது மராமத்துப் பணிகள் மேற்கொள்ளும் காலகட்டம். அதற்குண்டான சுபச் செலவுகளும் இருக்கும்.
- புதிய குருமார்களின் உபதேசம் கிட்டும்.
- உபாசனை தெய்வத்தின் அருள் கிடைக்கும்
- தாய்மாமன் பாட்டனார் வழியில் நன்மைகள் வந்து சேரும் ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்.
- சுப நிகழ்வுகள் குடும்பத்தில் நடந்தேறும்
- பலவித பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
- எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும்
- மிக சிறப்பான காலகட்டம்
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
வேத பாடசாலையில் படிக்கும் பிராமணர் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்வது நலம்.
ஒருமுறை யானைக்கு கரும்பு கட்டு வாங்கித்தர பல பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் அல்லது கோவிலில் ஒரு நாள் ஆகாரத்துக்கு பணம் கட்டினால் சிறப்பு
எச்சரிக்கை:
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்