குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 தனுசு ராசி
(மூலம் பூராடம் உத்திராடம் 1)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் ஜென்ம குருவாக இருந்து பெயர்ச்சியாகி 2 மிடம் என்று சொல்லக்கூடிய தனம் குடும்பம் வாக்கு நேந்திரம் கல்வி ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 2 மிடத்தில் இருந்து
உங்கள் ராசிக்கு 6 மிடம் ருண ரோக சத்ரு சர்வீஸ ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 8 மிடம் ஆயுள் மருத்துவம் ரகசியம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 10 மிடம் கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.
நிதி நிலைமை:
உங்கள் ராசிக்கு குரு பகவான் 2-ஆம் இடத்திற்கு வருவது தன வரவை அதிகரிக்கும் உங்களுக்கு தேவையான தொகைகள் வந்து கொண்டே இருக்கும் சேமிப்புகள் கூடும் வங்கி இருப்பு கூடும் கடந்த ஒரு வருடமாக இருந்து வந்த பிரச்சனைகள் முழுவதும் தீர்வுக்கு வரும்.
திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :
வரன் முடிவாகும் திருமணம் நடந்தேறும் காலம் மருத்துவத்தின் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும் காலகட்டம் வாரிசுகள் அமையும் காலகட்டம் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சந்தான விருத்தி கிட்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:
உங்கள் ராசிக்கு 6-ஆம் இடத்தையும் 8-ஆம் இடத்தையும் குரு பகவான் பார்வை செய்வதால் கடன்கள் விரைவாக அடைபடும் எதிர்பார்த்த கடன்களும் கிடைக்கும் ஆரோக்கியம் ஏற்படும் கிடைக்கும் புதிய மருத்துவத்தின் மூலம் நீண்ட நாட்கள் நோய்கள் முடிவுக்கு வரும் படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகள் நோயிலிருந்து விடுபட வாய்ப்புகள் உண்டாகும் உடல் நலம் பூரண குணமடையும்.
தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:
உங்கள் கர்ம ஸ்தானத்தையும் சர்வீஸ் ஸ்தானத்தையும் குருபகவானின் பார்வை விழுவதால்
புதிதாக வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் அமையும்ஏற்பட்டவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையும் வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வந்து சேரும் ஏற்கனவே வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.
இடமாற்றங்களும் விரும்பிய ஊர் மாற்றங்களும் கிடைக்கும் கௌரவப் பதவிகள் கிடைக்கும் புதிய பொறுப்புகள் வந்து சேரும் புதிய புராஜக்ட்டை தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழில் வியாபார விருத்தி ஏற்படும். புதிய தொழில்கள் தொடங்கும் காலகட்டம். இருக்கும் தொழிலில் மேன்மைகள் உண்டாகும் விரும்பிய புதிய தொழில்கள் செய்யும் காலகட்டம். உற்பத்திகள் கூடும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த வங்கிக் கடன் கிடைத்து தொழிலில் வியாபாரத்தில் விரிவாக்கங்கள் செய்யும் காலகட்டம். புதிய புதிய பொருட்களை கண்டுபிடித்து சந்தைப்படுத்தும் காலகட்டம் எல்லா வகையான தொழிலிலும் மேன்மை கிட்டும்.
வீடு வண்டி வாகன வசதிகள்:
புதிய வண்டி வாகன வசதிகள் பெருகும் பழைய வண்டி வாகனங்களை மாற்றும் காலம் வண்டி வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும் புதிய வீடு மனை நிலம் வாங்கும் காலகட்டம் அதில் முதலீடு செய்யும் நேரமாக இது அமையும்.
மாணவ மாணவியர்களுக்கு:
படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் மறதி கள் ஏற்படுவது குறையும் படிப்பில் நாட்டம் அதிகரிக்கும் எதிர்பார்த்த நல்ல படிப்புகள் மேற்படிப்புகள் மதிப்பெண்கள் கிடைக்கும் காலகட்டம் எனவே கவனமாக இருந்து வெற்றி பெறலாம.
பெண்களுக்கு:
வேலையில் உள்ள பெண்களுக்கு விரும்பிய பதவி மாற்றங்கள் இடமாற்றம் அமையும் புதிதாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் காலகட்டம் புதிய வேலை வாய்ப்புகள் வந்துசேரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த வேலைகளில் சேரும் காலம் இருக்கும் வேலையில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு:
மகசூல் அதிகரிக்கும் உற்பத்தி பெருகும் எதிர்பார்த்த வருமானங்கள் வந்து சேரும் விரைவாக விளைபொருட்கள் விற்று தீரும் நல்ல காலம் புதிய பயிர் வகைகளில் உற்பத்தி பெருக்கம் அதிகரிக்கும்.
பொதுவான பலன்கள்:
தனம் வித்தை வாக்கு வளர்ச்சியடையும்.
தாராள பணப்புழக்கம் ஏற்படும்.
செல்வாக்கும் சொல்வாக்கும் கூடும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும்.
புதிய முயற்சிகள் கைகூடும்.
முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனை வழிபட சிறப்பு.
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்ற சிறப்பு.
குருமார்களுக்கு அல்லது குரு ஸ்தானத்தில் உள்ள அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய துரித வளர்ச்சி ஏற்படும்.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.
Comments are closed.