குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2020 to 2021 கன்னி ராசி

குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கன்னி ராசி

(உத்திரம் 2,3,4 அஸ்தம் சித்திரை 1 2)

குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி 5 மிடம் என்று சொல்லக்கூடிய பூர்வீகம் குழந்தை பாக்கியம் மகிழ்ச்சி ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.
5-ஆம் இடம் என்பது புத்திர குரு உபதேசம் உபாசனை மகிழ்ச்சி திட்டம் தாய்மாமன் பாட்டனார் பூர்வ புண்ணியம் என்பதை குறிக்கும் காலத்தில் மன மகிழ்ச்சியான செயல்கள் நடைபெறும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் திருமணம் நடந்தேறும் காலகட்டம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 5 மிடத்தில் இருந்து
உங்கள் ராசிக்கு 9 மிடம் தந்தை, பாக்கியம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 11 மிடம் லாபம், ஆசை அபிலாசைகள் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசியை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.

நிதி நிலைமை:

குருபகவான் உங்கள் ராசியில் இருந்து 11-ம் இடத்தை பார்வை செய்வதால் லாபங்கள் அதிகரிக்கும் நிதி நிலைமை சீரடையும் எப்பொழுதும் கைகளில் பணம் புழங்கும் கால கட்டம் வங்கி இருப்பு முதலீடுகள் உயரும் மிக சிறப்பான காலகட்டம்.

திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :

உங்கள் ராசிக்கு 5-ஆம் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவதாலும் ராசியை பார்ப்பதாலும் 11-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் நீண்ட நாட்கள் தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணங்கள் நடைபெறும் காலகட்டம் உங்கள் விருப்பப்படி வரன் அமையும். குழந்தை பாக்கியம் உடனடியாக நடைபெறும் நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த காலத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் பாக்கிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் ஆண் வாரிசுகள் ஏற்படும் கால கட்டம்.

கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:

உங்கள் ராசியையும் பாக்கிய ஸ்தானத்தையும் 11-ஆம் இடத்தையும் ஒரு சேர குருபகவான் பார்ப்பதால் உடல்நிலையில் இருந்த பிரச்சனைகள் முழுவதுமாக நீங்கி சுகம் கிடைக்கும் உடல் நலத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும் ஆரோக்கியம் முற்றிலும் சீர்படும் நீண்ட நாட்களுக்கு நோயால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிட்டும். லாபம் அதிகரிப்பதால் கடன் பிரச்சனைகள் தீரும் எதிரி பிரச்சனைகள் முடிவுக்கு வரும் எல்லா வகையான கடன்களும் தீரும்.

தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் சம்பள உயர்வு கூடுதல் பொறுப்புடன் கூடிய வசதிகள் கிடைக்கும் புதிதாக வேலைக்காக காத்துக்கொண்டிருந்த மாணவ மாணவிகளுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் உயரதிகாரிகளின் ஆதரவுகள் செலுத்தும் சன்மானங்கள் பெரும் காலகட்டம் எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மிக மிக சிறப்பான காலம் லாப வரவுகள் அதிகரிக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அபிவிருத்திகள் செய்யும் காலகட்டம் புதிய புதிய ஆர்டர்கள் வந்து சேரும் வங்கிக் கணக்குகளில் இருப்பு தொகை கூடும் விரும்பிய எதிர்பார்த்துக் கொண்டிருந்த வங்கி கடன் தொகைகள் வியாபார விருத்திக்காக கிடைக்கும் ஏற்றுமதி தொழிலில் லாபங்கள் வந்து சேரும் அடுத்த வருடம் நிலையான வருமானங்கள் வந்து சேரும் புதிய புதிய புதிய பொருட்கள் வணிக மூலம் லாபம் இருமடங்காக வந்து சேரும் எதிரிகளின் போட்டி குறையும் ஏற்கனவே இருந்த கடன்கள் அடையும் காலகட்டம்.

வீடு வண்டி வாகன வசதிகள்:

புதிய வீடு வண்டி வாகன வசதிகள் ஏற்படும் கால கட்டம் நீண்ட நாட்களாக வீடு கட்டும் திட்டம் நிறைவேறும் கட்டிடங்களை விரிவாக்கும் அல்லது மராமத்து செய்யும் காலகட்டம்.

மாணவ மாணவியர்களுக்கு:

விரும்பிய மேற்படிப்புகள் அமையும் காலகட்டம் நினைத்த துறையில் வெற்றிகளை சாதிக்கலாம் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெரும் காலகட்டம் டெக்னிக்கல் துறை படிப்புகளில் சாதிக்கும் காலகட்டம் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் இந்த காலகட்டம் நன்றாக இருக்கும்.

பெண்களுக்கு:

வேலையில் உள்ள பெண்களுக்கு விரும்பிய பதவி மாற்றங்கள் இடமாற்றம் அமையும் புதிதாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் காலகட்டம் புதிய வேலை வாய்ப்புகள் வந்துசேரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த வேலைகளில் சேரும் காலம் இருக்கும் வேலையில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு:

மகசூல் அதிகரிக்கும் தன லாபங்கள் இருக்கும் மடங்காக அதிகரிக்கும் எதிர் பார்த்து இருந்த கடன் அடையும் அரசு வழியில் உதவிகள் கிடைக்கும் சரியான நேரத்தில் அரசின் உதவிகள் வந்து சேரும் வங்கிக்கடன்கள் கிடைக்கும் ஏற்கனவே இருந்த விவசாய கடன்கள் தீரும்.

பொதுவான பலன்கள்:

தந்தை வழியில் இருந்த கசப்புகள் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.
பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள், தாத்தாவின் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
தூர தேசங்களில் வேலைவாய்ப்புகள் அமையும்.
சுப தகவல்கள் வந்து கொண்டே இருக்கும் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும் .
மன மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகன் வழிபாடு.
அனாதை ஆசிரமங்களுக்கு தேவையான உதவிகள்.
குழந்தைகளுக்கு எழுத்து உபகரணங்கள் வாங்கி கொடுப்பது.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: