குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கடக ராசி
(புனர்பூசம் 4, பூசம் ஆயில்யம்)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் 6 ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி 7 மிடம் களத்திரம் எதிரி தூர பயணம் என்று சொல்லக்கூடிய களத்திர ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.
இந்த காலகட்டத்தில் திருமணம் நடந்தேறும் மனைவியால் யோகம் புதிய உறவுகள் தொழில் வழி கூட்டுகள் சொந்தம் சுற்றத்தில் சுபச்செலவு செல்வாக்கு அந்தஸ்து கௌரவம் மரியாதை உயரும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 7 மிடத்தில் இருந்து,
உங்கள் ராசிக்கு 11 மிடம் என்று சொல்லக்கூடிய லாபம் ஆசை அபிலாசைகள் மூத்த சகோதரர்கள் விருப்பங்கள் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசியை 7 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 3 மிடம் என்று சொல்லக்கூடிய தைரியம் வீர்யம் இளைய சகோதரம் ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.
நிதி நிலைமை:
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் எதிர்பாராத லாபங்கள் அதிக லாபங்கள் வந்து சேரும் எல்லா வகையிலும் விரும்பிய அனைத்தும் நிறைவேறும் காலம் உங்கள் பண வசதி கிறுகிறுவென்று உயர்வடையும் எடுத்த காரியங்கள் அனைத்திலும் லாபங்கள் வந்து சேரும் தொழில் வழியில் அதிர்ஷ்ட வகையில் லாப வரவுகள் இருந்து கொண்டே இருக்கும் வங்கி இருப்பு சேமிப்பு கூடும்.
திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :
உங்கள் ராசியை குரு பகவான் பார்ப்பதால் திருமணம் விரைவாக முடிவாகும் அல்லது நடந்தேறும். நீண்டநாள் நடக்காமல் இருந்த திருமணங்கள் நடந்தேறும் முதிர் கன்னிகள் ஆண்களுக்கு திருமணம் கூடிவரும் காலம் விரும்பிய வகையில் மணமகன் அல்லது மணமகள் அமையும் மனதுக்கு விரும்பிய வரன் அமையும் நீண்ட நாட்களாக தாமதப்பட்டு கொண்டிருந்த குழந்தை பாக்கியமும் நிறை வேறும் காலகட்டம் ஆசைகள் அனைத்தும் பூர்த்தியாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும் மிக மிக சிறப்பான காலகட்டம்.
கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியம் முழுவதும் சரியாகும் நோய்கள் முழுவதுமாக நீங்கும் கடன் பிரச்சனைகள் நீங்கும் கடன்கள் அடைபடும் எதிரி தொந்தரவுகள் குறையும் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும் நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் மாறி சுகம் கிட்டும் நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்வது குறையும்.
தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றம் விரும்பிய பதவி மாற்றம் உண்டாகும். மேலதிகாரிகளின் அரவணைத்து சலுகைகள் கூடும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் இதுவரை எதிரியாக இருந்தவர்கள்கூட ஒத்துழைப்பார்கள் அரசு அதிகாரிகளுக்கு நல்ல பதவி பொறுப்புகள் வந்து சேரும் காலகட்டம் தனியார் துறையில் உள்ளவர்களுக்கு பெரிய பதவிகள் புதிய புதிய பொறுப்புகள் கௌரவப் பொறுப்புகள் வந்து சேரும்.
தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு இந்த காலகட்டம் மிக மிக சிறந்த காலகட்டமாகக் லாபங்கள் அதிகரிக்கும் தொழில் விருத்தி அடையும் தொழில் நிறுவனங்கள் விஸ்தரிப்பு செய்யப்படும் காலம் உற்பத்திகள் கூடி லாபங்கள் அதிகரிக்கும் இருப்புள்ள சரக்குகள் விற்றுத் தீரும் எதிர்பார்த்த நன்மைகள் எல்லாம் தொழிலில் கிடைக்கும் தொழிலாளர்களிடமும் இருந்த பிரச்சனைகள் தீரும் நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடன்கள் வந்துசேரும் தொழில் வியாபார அபிவிருத்திக்கு வங்கிக்கடன்கள் கிடைக்கும் பழைய கடன்கள் அடையும் நிறுவனத்தின் கணக்குகளில் வங்கி இருப்பு கூடும் எதையும் சமாளிக்கும் காலகட்டம் வெளிநாட்டு ஏற்றுமதி செய்யக் கூடிய நிலை ஏற்படும் காலகட்டம் வேலை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கும்.
வீடு வண்டி வாகன வசதிகள்:
ஆசைப்பட்ட வகையில் புதிய வீடு வண்டி வாகன வசதிகள் வந்துசேரும் பழைய வண்டி வாகனங்களை விற்று புதிய வண்டி வாகனங்கள் எடுக்கும் காலம் வீடுகள் விஸ்தரிப்பு கள் நடைபெறும் / மராமத்து வேலைகள் நடைபெறும் காலகட்டம்
மாணவ மாணவியர்களுக்கு:
மாணவ மாணவியர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வெற்றிபெறும் காலகட்டம் நல்ல மதிப்பெண்கள் நல்ல தேர்ச்சி அடையும் காலம் விரும்பிய துறையில் மேற்படிப்புக்கு சேரும் காலகட்டம் பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்
பெண்களுக்கு:
வேலையில் உள்ள பெண்களுக்கு விரும்பிய பதவி மாற்றங்கள் பதவி உயர்வுகள் சம்பள உயர்வுகள் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு புகழ் உண்டாகும் காலகட்டம் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீர்ந்து சுமூகமான படும் உடலில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் உடல் நலம் பெறும் காலகட்டம் புதிய வேலைவாய்ப்புகள் அமையும்
விவசாயிகளுக்கு:
விளைச்சல் மகசூல் பெருகும் லாபங்கள் அதிகரிக்கும் எதிர்பார்த்ததை விட அதிகமான விளைச்சல் கிடைக்கும் பணப் பயிர்களில் கொள்ளை லாபம் கிடைக்கும் எதிர்பாராத லாபங்கள் வந்து சேரும் அரசு வழியில் கடனுதவிகள் மற்ற உதவிகள் சரியான நேரத்தில் வந்து சேரும்
பொதுவான பலன்கள்:
அடுத்த ஒரு வருடம் உங்களுக்கு பொன்னான காலம் எல்லாவிதமான தொந்தரவுகளும் கஷ்டங்களும் நீங்கி சுபிட்சம் பெறும் காலகட்டம்
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையில் வழிபட சிறப்பு.
குருபகவான் வழிபாடு
வறுமையில் உள்ள பெண்களுக்கு திருமண உதவி செய்ய (மாங்கல்யம் வஸ்திரம் வாங்கி தர)
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.
Comments are closed.