குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2020 to 2021 கும்ப ராசி

குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 கும்ப ராசி

(அவிட்டம் 2,3 சதயம் பூரட்டாதி 1,2,3)

குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

தற்போது உங்கள் ராசிக்கு 12-ஆம் இடத்தில் விரைய குருவாக பெயர்ச்சி ஆகிறார்

“வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும்” என்ற பாடல் படி பதவி இழப்புகள், தொழில்துறையில் நஷ்டம், எதிர்பாராத விபத்து, இப்படி பலன் ஏற்பட்டாலும் சுப செலவும் அடங்குவதால் வீடு மனை கட்டுதல் திருமணம் பொன் பொருள் சேர்க்கை புதிய பொன் ஆபரணம் சேர்க்கை உண்டாகும்

குருபகவான் உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் இடத்திலிருந்து

உங்கள் ராசிக்கு 4 மிடம் மனை வீடு வண்டி வாகனம் மேற்படிப்பு தாய் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்

உங்கள் ராசிக்கு 6 மிடம் ருண ரோக சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்

உங்கள் ராசிக்கு 8 மிடம் ஆயுள் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்

நிதி நிலைமை:

நிதி நெருக்கடிகள் ஏற்படும் தண்டச் செலவுகள் ஏற்படும் முதலீடுகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் நிதி நிறுவனத்தில் வெளியிடங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் சொத்துக்களில் முதலீடு செய்வதில் கவனம் தேவை நிதி வரவுகள் தாராளமாக இருக்காது வரவுக்கு அதிகமான செலவுகள் ஏற்படும் கொடுக்கல்-வாங்கலில் மிக மிக கவனம் தேவை சேமிப்புகள் கரையும்

திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :

குருபகவான் 4ஆம் இடத்தைப் பார்ப்பதால் வரன் பேச்சுவார்த்தைகள் நடக்கும் திருமணம் நடந்தேறும் காலம் குழந்தை பாக்யம் தடைபடும் அல்லது தாமதப்படும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் வந்து நீங்கும் சுபகாரியங்கள் நடந்தேறும் காலகட்டம் சுபச்செலவுகள் ஏற்படும் உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைகளுக்கு சுப காரியங்கள் நடந்தேறும்

கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:

உங்கள் ராசிக்கு ஆறாம், எட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் நோய்கள் பறந்தோடும் மருத்துவச் செலவுகள் மூலம். நோய் சம்பந்தமான அறுவைச்சிகிச்சை சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும் அதில் நிவாரணம் கிடைக்கும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் மேம்படும் நீண்டநாள் உடல் பிரச்சனைகள் மருத்துவத்தின் மூலம் தீர்வுக்கு வரும் மர்ம உறுப்புகளில் இருந்து நோய்கள் நீங்கும் நீண்ட நாட்களாக விடை கிடைக்காத நோய்களுக்கு மருத்துவ செலவுகள் மூலம் நீங்கும்

தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகளில் இருக்கும் நிலை தொடரும் தேவையில்லாத பிரச்சினைகளில் போய் மாட்டிக் கொள்ள வேண்டாம் புதிய வேலைவாய்ப்புகள் அமைவதில் சிக்கல்கள் விரும்பிய இடமாற்றம் துறை மாற்றங்கள் கிடைப்பதில் கால தாமதங்கள் உண்டாகும் மேலதிகாரிகளின் தொந்தரவுகள் ஏற்படும் பலவித சங்கடங்களை சந்திக்கும் காலகட்டம் அரசு பணியில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம்

தொழில் வியாபாரம் மந்த நிலையில் இருக்கும் அதிகப்படியான செலவுகள் உண்டாகும் புதிய இயந்திரங்கள் அல்லது புதிய உற்பத்தி முறைகளில் கவனம் தேவை தேவையற்ற முதலில் செய்வதை தவிர்க்க வேண்டிய காலகட்டம் விஸ்தரிப்பு செய்வது புதிய முதலீடுகளை செய்வது தவிர்க்க வேண்டும் கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் இழப்புகளை சந்திக்கும் காலகட்டம் ஏமாற்றங்கள் நிறைய கிடைக்கும் ஆகையால் கவனமாக இருந்து செயல்பட வேண்டும் எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவு எடுப்பது சிறப்பு

வீடு வண்டி வாகன வசதிகள்:

உங்கள் ராசிக்கு 4-ஆம் இடத்தை குரு பகவான் பார்வை செய்வதால் புதிய மனை வீடு வண்டி வாகனம் சொத்துக்கள் முதலியவைகளில் சுப விரைய செலவு செய்வது நன்மையைத் தரும் புதிய வீடு கட்டுவது விஸ்தரிப்பு செய்வது மராமத்து செய்வது ஆகியவை மேற்கொள்ளும் காலகட்டம் பழைய வண்டி வாகனங்களை விற்று புதிய வண்டி வாகனங்களை அமைத்துக் கொள்வதை சுபச்செலவுகள் செய்வது விரயத்தை தவிர்க்கும் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் உங்கள் உடல் மன நலத்திற்கு தேவையான செலவுகளும் ஏற்படும் காலகட்டம்

மாணவ மாணவியர்களுக்கு:

மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு உகந்த காலகட்டம் ஆகும் விரும்பிய கல்வி கிடைக்கும் தேர்ந்தெடுக்கும் துறை சுலபமாக கிடைக்கும் படிப்பில் கவனம் நாட்டம் அதிகரிக்கும் நல்ல மதிப்பெண்கள் பெறும் காலம் ஆரம்ப கல்வியில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் வெளிநாடு படிப்பு மேற்கொள்பவர்கள் அதிகப்படியான செலவுகள் செய்யும் காலகட்டமாக இருக்கும்

பெண்களுக்கு:

வேலையில் உள்ள பெண்களுக்கு வேலைகளில் கவனம் தேவை தேவையில்லாத தொந்தரவுகள் தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும் பதவி உயர்வு சம்பள உயர்வு தடைபடும் மர்ம உறுப்புகளில் இருந்த மறைமுக பிரச்சனைகள் மருத்துவத்தின் மூலம் தீர்வுக்கு வரும் உடல்நலத்தில் அக்கரை செலுத்தி உடல் நலன் பேணும் காலகட்டம் நோய்கள் நீங்கும் எதிரி பிரச்சனைகள் முடிவுக்கு வரும் குழந்தைப்பேறு மருத்துவத்தின் மூலம் அமையும் திருமணம் நடந்தேறும் காலகட்டம்

விவசாயிகளுக்கு:

மகசூல் குறையும் எதிர்பார்த்த கடன் தொகைகள் கிடைப்பதில் தடை தாமதம் உண்டாகும் அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது பூச்சிகளின் தொந்தரவுகள் அதிகரிக்கும் உற்பத்தி செய்த பொருட்கள் விலை போகும் பிரச்சனைகள் ஏற்படும் பண வரவுகள் தாமதப்படும்

பொதுவான பலன்கள்:

நீண்டகாலமாக நோயினால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவத்தின் மூலம் அதிகப்படியான செலவுகள் உண்டாகி நலம்பெறும் காலகட்டம்

மறைமுக எதிரி பிரச்சனைகள் தீரும்

ஆயுள் கண்டம் நீங்கும் காலம்

நீண்ட நாட்களாக வர வேண்டிய பெரிய தொகை வந்து சேரும்

எதிலும் கவனமாக இருந்து செயல்பட வேண்டிய காலகட்டம்

அதிகப்படியான சக்திக்கு மீறிய தண்டச் செலவுகள் ஏற்படும்

எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடன்கள் கிடைக்கும்

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு ஒரு முறை வியாழக்கிழமையில் அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட பலவித தடைகள் நீங்கும்

வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்ற சிறப்பு

யானைக்கு அடிக்கடி கரும்பு கட்டு வாங்கி தருவது பல சங்கடங்களை தீர்க்கும்

மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: