(உத்திராடம் 2,3,4 திருவோணம் அவிட்டம் 1,2)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் ஜென்ம குருவாக பெயர்ச்சி ஆகிறார்.
“ஜென்ம ராமர் சீதை வனத்திலே சிறை வைத்ததும்” என்பதுபோல உங்களுக்கு இது ஒரு வனவாச காலமாகும்.
குருபகவான் உங்கள் ராசியில் இருந்து –
உங்கள் ராசிக்கு 5 மிடம் பஞ்சம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய பூர்வ புண்ணியம் குழந்தை பாக்கியம் மனம் டெக்னிக்கல் சார்ந்த கல்வி ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 7 மிடம் களத்திரம் நட்பு எதிராளி பயணங்கள் தூர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 9 மிடம் பாக்கியஸ்தானம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.
நிதி நிலைமை:
நிதி நிலமை சுமாராக இருக்கும் பணவரவுகள் தாமதமாகும் சேமிப்புகள் கரையும் கையிருப்பு குறையும் தண்டச் செலவுகள் ஏற்படும் கொடுக்கல்-வாங்கலில் மிக மிக கவனம் தேவை கொடுத்த பணம் திரும்பி வருவதில் பிரச்சனைகள் ஏற்படும் பணம் கொடுப்பது தவிர்க்க வேண்டிய காலகட்டம் வேண்டாத/ தேவையற்ற முதலீடுகளில் கவனம் தேவை தனியார் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் வட்டிக்கு ஆசைப்பட்டு தனியாரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் பணம் தொடர்பான ஜாமீன் கையெழுத்தை தவிர்க்க வேண்டும் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் தேவையில்லாத பண விஷயங்களில் தவிர்ப்பது நல்லது பணமுடை ஏற்படும்.
திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :
வரன் முடிவாகும் திருமணம் நடந்தேறும் காலம் மருத்துவத்தின் மூலம் குழந்தை பாக்கியம் உண்டாகும் காலகட்டம் வாரிசுகள் அமையும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்துக்கு ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சந்தான விருத்தி கிட்டும் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:
உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தையும் 9-ஆம் இடத்தையும் குரு பகவான் பார்வை செய்வதால் ஆரோக்கியம் ஏற்படும் கிடைக்கும் மனநலம் சரியாகி உடல் ஆரோக்கியம் பெருகும் மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிட்டும் கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்.
தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:
வேலை நிமித்தமாக தூர பயணங்கள் வெளிநாடு பயணங்கள் உண்டாகும் இந்த காலகட்டத்தில் வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைத்தால் செல்வது மிக மிக சிறப்பு வேலையில் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும் வேலையில் கடுமை உண்டாகும் வேலை இழப்புகள் ஏற்படும் உயர் அதிகாரிகளின் தொந்தரவு உண்டாகும் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படும் வேலையின் கடுமை அதிகரிக்கும் சக ஊழியர்களின் தொந்தரவுகள் உண்டாகும் விரும்பத்தகாத இடமாற்றம் பணிமாற்றம் உண்டாகும் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவியும் கிடைக்காது.
வியாபாரம் தொழில் செய்பவர்கள் கவனத்துடன் வியாபாரத்தையும் தொழிலையும் மேற்கொள்வது சிறப்பு வியாபாரத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டிய காலகட்டம் தொழில் வியாபாரத்தை விஸ்தரிப்பு செய்வதை தள்ளிப் போட வேண்டும் புதிய தொழிலில் தொகையை முடக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டிய காலகட்டம் புதிய கூட்டு ஒப்பந்தங்கள் முத்து தொழில் செய்வதை முடிந்தவரை இந்த ஒரு வருட காலம் தள்ளிப்போடுவது சிறப்பு.
வீடு வண்டி வாகன வசதிகள்:
புதிய வீடு வண்டி வாகனங்கள் அமையும் தேவைக்கேற்ற அளவுக்கு மட்டும் அமைத்துக் கொள்வது சிறப்பு தேவைக்கு சக்திக்கு அதிகமற்ற வகையில் வீடு வண்டி வாகனங்களை அமைத்துக் கொள்ள வேண்டாம் விஸ்தரிப்பு களை தவிர்க்க வேண்டும் புதிய வண்டி வாகனங்கள் வாங்குவதில் கவனம் தேவை.
மாணவ மாணவியர்களுக்கு:
படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் டெக்னிக்கல் துறை சார்ந்த படிப்பில் உள்ளவர்களுக்கு நல்ல காலகட்டம் படிப்பில் இருந்த மரத்தில் நீங்கும் கவனத்துடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெறும் காலம்.
பெண்களுக்கு:
வேலையில் உள்ள பெண்களுக்கு வேலைகளில் கவனம் தேவை தேவையில்லாத தொந்தரவுகள் தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும் பதவி உயர்வு சம்பள உயர்வு தடைபடும் உடல்நலம் மனநலம் பெருகும் சந்தான விருத்தி ஏற்படும் கால கட்டம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் நீண்ட நாட்களாக வரன் தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வரன் முடிவாகி திருமணம் நடந்தேறும் வேலை நிமித்தமாக வெளிநாடு பயணங்கள் உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
மகசூல் குறையும் எதிர்பார்த்த கடன் தொகைகள் கிடைப்பதில் தடை தாமதம் உண்டாகும் அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது பூச்சிகளின் தொந்தரவுகள் அதிகரிக்கும் உற்பத்தி செய்த பொருட்கள் விலை போகும் பிரச்சனைகள் ஏற்படும் பண வரவுகள் தாமதப்படும்.
பொதுவான பலன்கள்:
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது தந்தையுடன் மனக்கசப்பு இருந்தாலும் முதலீடுகளில் பாதிப்புகள் ஏற்படும் வேலையில் மந்தப் போக்கு ஏற்படும் சகோதர வழிகளில் வருத்தங்கள் உண்டாகும்.
“ஓணான் வேலிக்கு இழுக்க தவளை தண்ணீருக்கு இழுக்க”
என்ற பழமொழியை போல் வாழ்க்கை நிகழ்ச்சி இருக்கும் திருமணத்தில் தடை யுடன் தாமதம் ஏற்பட்டு முடிவாகும் கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் உண்டாகும் வாங்கலில் கவனம் உடல்நலக் குறைவும் உண்டாகும்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு ஒரு முறை வியாழக்கிழமையில் அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட பலவித தடைகள் நீங்கும்.
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்ற சிறப்பு.
குருமார்களுக்கு அல்லது குரு ஸ்தானத்தில் உள்ள அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய துரித வளர்ச்சி ஏற்படும்.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.