குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மீன ராசி
( பூரட்டாதி 4 உத்திரட்டாதி ரேவதி)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு 11-ஆம் இடத்தில் லாப குருவாக பெயர்ச்சி ஆகிறார்.
குருபகவான் உங்கள் ராசிக்கு பதினோராம் இடத்திலிருந்து – உங்கள் ராசிக்கு 3 மிடம் முயற்சி தைரியம் வீரியம் இளைய சகோதரம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும், உங்கள் ராசிக்கு 5 மிடம் ருண ரோக பூர்வபுண்ணியம் குழந்தை பாக்கியம் மனம் டெக்னிக்கல் சார்ந்த கல்வி என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும், உங்கள் ராசிக்கு 7 மிடம் களத்திரம் நண்பர்கள் தூர பயணம் எதிராளி ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.
நிதி நிலைமை:
லாப வரவுகள் அதிகரிக்கும் வங்கிகளில் சேமிப்புகள் உயரும் எல்லாவகையான முதலீடுகளும் பெருகும் கிடுகிடுவென நிதிநிலைமை பெருகும் வர வேண்டிய பெரிய தொகை கைக்கு வந்து சேரும்.
திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :
உங்கள் களத்திர ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் திருமணம் நடந்தேறும் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடந்தேறும் முதிர் கன்னி களுக்குத் திருமணம் நடந்தேறும் காலம் விருப்பத்துக்கு ஏற்ப வரன்கள் வந்துசேரும்/அமையும். கணவன் மனைவி இடையே நீண்ட நாட்களாக இ ருந்த பிரச்சனைகள் தீரும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேரும் காலகட்டம் குழந்தை பாக்கியம் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் பூர்வீகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.
கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:
கடன்கள் தீரும் நோய்கள் குறையும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும் அறுவைச்சிகிச்சையின் மூலம் பெரிய / முதிர்ந்த நோய்கள் தீரும் காலகட்டம்.
தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் பதவி மாற்றம் துறை மாற்றம் சம்பள உயர்வு பதவி உயர்வுகள் கிடைக்கும் காலம் உயரதிகாரி முழு ஒத்துழைப்பு கிடைக்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் மிகப்பெரிய பதவிகள் கிட்டும் காலம் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மிக மிக லாபகரமான காலகட்டம் வியாபாரங்கள் அதிகரிக்கும் லாபம் அதிகரிக்கும் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும் தொழில் வியாபார விருத்தி உண்டாகும் வங்கிகளில் எதிர்பார்த்து கொண்டிருந்த கடன்கள் கிடைக்கும் தொழில் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு இருப்புகள் கூடும் உற்பத்திகள் கூடும் இருப்பில் இருந்த அனைத்து பொருட்களும் விற்றுத் தீரும் புதிய கூட்டுத் தொழில் ஏற்படும் கால கட்டம்.
வீடு வண்டி வாகன வசதிகள்:
புதிய வீடு வண்டி வாகன வசதிகள் ஏற்படும் பழைய வீடு வண்டி வாகனங்கள் மற்றும் காலகட்டம் புதிய வீடு மனை வாங்கும் கால கட்டம் வீடுகளை விஸ்தரிக்கும் கால கட்டம்.
மாணவ மாணவியர்களுக்கு:
மாணவ மாணவிகளுக்கு சிறப்பான காலகட்டம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் பெறும் காலகட்டம் டெக்னிக்கல் சம்பந்தமான தொழில் படிப்பவர்களுக்கு மிக சிறப்பான காலகட்டம் மாணவிகள் தேர்ச்சி அடையும் காலகட்டம் விரும்பிய மேற்படிப்புகள் அமையும்.
பெண்களுக்கு:
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும் புதிய வேலை வாய்ப்புகள் அமையும் வேலை செய்யும் பெண்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு பணிமாற்றம் இடமாற்றம் கிடைக்கும் நல்ல காலம் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு நடைபெறும் காலகட்டம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
நல்ல மகசூல் கிடைக்கும் லாபங்கள் அதிகரிக்கும் பணப்பயிர் மூலம் லாபங்கள் கிட்டும் விளைவித்த பொருட்கள் அனைத்தும் விற்றுத் தீரும் கையில் பணம் இருப்பு கூடும் மிக சிறந்த காலகட்டம்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகன் வழிபாடு நன்மையளிக்கும்.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.
Comments are closed.