குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 மேஷ ராசி
(அஸ்வினி பரணி கார்த்திகை 1)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் 9 ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி 10 மிடம் என்று சொல்லக்கூடிய கர்ம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
“பத்தாமிட குரு பதி குலைய செய்யும்”
“அந்தனன் பத்தில் நின்றால் அவதிகள் பல உண்டு”
“ஈசனாரொரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்”
என்று பழங்கால ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது பத்தில் குரு வருவது சிறப்பில்லை கஷ்டங்களைத் தரும். பத்தில் குரு வரும் காலத்தில் பதவி பறிபோகும். தொழில் வழியில் போட்டி பொறாமைகள் ஏற்படும் வேலை இழப்பீடுகள் இடமாற்றங்கள் அலைச்சலை மற்றும் தொழில் வழி சங்கடங்களை தரும் என்று பொருள்.
குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருந்து
உங்கள் ராசிக்கு 2 மிடம் என்று சொல்லப்படக்கூடிய வாக்கு தனம் குடும்பம் நேந்திரம் ஆரம்பக் கல்வி ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 4 மிடம் என்று சொல்லக்கூடிய மனை வீடு வண்டி வாகனம் தாயார் ஸ்தானத்தை 7 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 6 மிடம் என்று சொல்லக்கூடிய ருண ரோக சத்ரு அடிமைத் தொழில் ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.
திருமணம், குழந்தை பாக்கியம்:
உங்கள் ராசிக்கு 2,4 மிடம் என்று சொல்லக்கூடிய குடும்ப ஸ்தானங்களை பார்ப்பதால் திருமணம் நடைபெறும் காலகட்டம். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரும் காலகட்டம். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கடன், நோய்கள், உடல் ஆரோக்கியம்:
உங்கள் ராசிக்கு 6 மிடம் என்று சொல்லக்கூடிய ருண ரோக சத்ரு ஸ்தானம் பார்வை செய்வதால் உடல் சம்பந்தமான நோய்கள் தீரும் கடன் பிரச்சனைகள் தீரும் எதிர் தொந்தரவுகள் மறையும் தேவையில்லாத பிரச்சனைகள் மறையும் நீண்டகாலமாக இருந்து வந்த நோய்கள் தீரும்
தொழில் வியாபாரம், வேலை வாய்ப்பு:
உங்கள் ராசிக்கு 10ம் இடத்துக்கு குரு பகவான் வருவதால்
அரசு வேலையில் உள்ளவர்களுக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள்,
டி பிரமோஷன், வேலைகளில் சிக்கல்கள், உயர் அதிகாரிகளின் தொந்தரவுகள், அரசின் கெடுபிடிகள், வேலை இழப்புகள், தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டாகும் எனவே மிக மிக கவனமாக இருக்க வேண்டும்
அடிமைத் தொழில் செய்பவர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு வேலை இழப்புகள், பதவி இடமாற்றங்கள், வேலை இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் ஏற்படும். பணிச் சுமைகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். ஊதிய உயர்வு சம்பள உயர்வு தாமதப்படும். மேலதிகாரிகளின் தொந்தரவுகள் ஒத்துழைப்பின்மை ஏற்படும் சக ஊழியர்களின் தொந்தரவுகள் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் பொறுமையுடன் இருக்கும் இடத்தில் வேலை பார்ப்பது அல்லது இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது சிறப்பு.
தொழில் வியாபாரம் நடத்துபவர்கள் இந்த காலகட்டத்தில் மிக மிக கவனமாக எதையும் கையாள வேண்டும் தொழிலில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தை விஸ்தரிப்பு விரிவாக்கம் செய்வதை தடுக்க வேண்டிய காலகட்டம். கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிக முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டிய காலகட்டம். அரசு சம்பந்தமான பாக்கிகளை உடனுக்குடன் செலுத்தி பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும்
வீடு வண்டி வாகன வசதிகள்:
உங்கள் ராசிக்கு 4-ஆம் இடத்தை இது பகவான் பார்ப்பதால்
புதிய மனை வீடு வாங்கும் காலகட்டம். பழைய வண்டிகளை மாற்றி புதிய வண்டி வாகன வசதிகள் வாங்கும் காலகட்டம். வங்கியில் சேமிப்புகள் கூடும்.
மாணவ மாணவியர்களுக்கு:
உங்கள் ராசிக்கு 2,4 மிடம் என்று சொல்லக்கூடிய ஆரம்பக் கல்வி மற்றும் மேற்கல்வி ஸ்தானத்தைப் பார்ப்பதால் ஆரம்பக் கல்வி மற்றும் மேற்படிப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இந்த வருடத்தில் படிப்பு நல்ல முறையில் அமையும் நல்ல மதிப்பெண்கள் பெற்று விரும்பிய மேற்படிப்புகள் அமையும் விரும்பிய கல்லூரியில் சேர்க்கும் வாய்ப்புகள் அமையும்
பெண்களுக்கு:
பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் நோய்கள் நீங்கும். நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மருத்துவத்தின் மூலம் குழந்தைப் பேறு உண்டாகும் காலகட்டம். கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் சுமுக தீர்வு வரும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலகட்டம். நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கூடி வரும் காலகட்டம்.
விவசாயிகளுக்கு:
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டம் விளைச்சலுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும் விளைச்சலில் நஷ்டங்கள் ஏற்படும் காலம்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையில் ஒரு தடவை பால் அபிஷேகம் செய்ய சிறப்பு.
வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபட சிறப்பு.
யானைக்கு ஒரு கட்டு கரும்பு வாங்கி தர சிறப்பு.
அந்தணர்களுக்கு தேவையான உதவி செய்வது சிறப்பு.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.
Comments are closed.