(மிருகசீரிடம் 3,4 திருவாதிரை புனர்பூசம் 1,2,3)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் 7 ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி 8 மிடம் என்று சொல்லக்கூடிய ஆயுள் புதையல் மர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு அட்டம குருவாக பெயர்ச்சி ஆகிறார்.
“இன்மை எட்டினில் வாலி பட்டம் இழந்து போம்படியானது”
இதன் பொருள் எந்தவகையிலும் இறப்பு என்பது இருந்தே தீரும் அட்டம குரு தொட்டது துலங்காது என்பார்கள்.
“கேளப்பா எட்டுக்கு வேசி கள்ளன் கெடுதியுள்ள மனைவியும் பகை நோயால் கண்டம் ஆளப்பா பகையுடன் பொருள்சேதம் அப்பனே அவமானம் கொள்வான்” – புலிப்பாணி பாடல்
இதன் பொருள் புகழ் பொருள் உயிர் இழப்பீடு ஆகியவைகளுக்கு வாய்ப்புகள் உண்டு முயற்சிகள் தடைபடும் சுபகாரிய தடை விரும்பத்தகாத இடமாற்றம் பிள்ளைகளால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு.
குருபகவான் உங்கள் ராசிக்கு 8 மிடத்தில் இருந்து
உங்கள் ராசிக்கு 12 மிடம் என்று சொல்லக்கூடிய அயன சயன போகம் ரகசியம் வெளிநாடு பயணம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 2 மிடம் என்று சொல்லக்கூடிய தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தை 7 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 4 மிடம் என்று சொல்லக்கூடிய வீடு வண்டி வாகனம் தாயார் சுகம் ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.
திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :
உங்கள் ராசிக்கு 12,2,4 ஆகிய இடங்களைப் பார்ப்பதால் திருமணம் நடந்தேறும் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும் குழந்தை பாக்கியம் தாமதமாகும் நீண்ட நாட்களாக பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலகட்டம்.
கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:
அட்டம குரு என்பதால் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகள் ஏற்படும் கடன் நிலைகள் கூடும் கடன் பிரச்சனைகள் வந்து சேரும் உடல் நலத்தைப் பேணுவது மிக மிக அவசியம் பொருள் இழப்புகள் ஏற்படும் புகழ் இழப்புகள் ஏற்படும்.
தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:
வேலைவாய்ப்பில் தொழில் வியாபாரத்தில் மிகவும் சங்கடமான காலங்கள் புதிய வேலைவாய்ப்பு முயற்சிகள் தடைபடும் தொழில் விரிவாக்கம் வியாபார விரிவாக்கததில் பிரச்சனைகள் ஏற்படும் தொழில் சம்பந்தமான கடன்கள் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும் எதிர்பார்த்த உற்பத்திக் குறையும் வியாபாரத்தில் சுணக்கம் உண்டாகும் லாபங்கள் கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் நஷ்டங்கள் ஏற்படும் எதிர்பார்த்த வேலைகளில் பிரச்சனைகள் ஏற்படும் வேலைகளில் வேலை செய்யும் இடங்களில் சங்கடங்கள் தேவையில்லாத இடமாற்றங்கள் வேலை இழப்புகள் உண்டாகும் மேல் அதிகாரிகளின் தொந்தரவுகள் சக அதிகாரிகளின் தொந்தரவுகள் உண்டாகும் தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்க வாய்ப்புண்டு.
வீடு வண்டி வாகன வசதிகள்:
புதிய வீடு வண்டி வாகன வசதிகள் அமைவதில் தடை தாமதங்கள் உண்டாகும் புதிய சொத்துக்களை வாங்கும் போது எல்லா வகையிலும் சரி பார்த்து வாங்குவது சிறப்பு புதிய வீடு கட்டுபவர்களுக்கு எதிர்பார்த்த பட்ஜெட் தொகையை விட அதிகமாக வாய்ப்புண்டு எனவே கவனமுடன் செயல்பட வேண்டும் வங்கி கணக்கில் உள்ள தொகையில் கவனம் வேண்டும் வண்டி வாகனங்கள் அடிக்கடி பழுதாகும் செலவு ஏற்படும் எனவே புதிய வண்டிகளை வாங்குவது சிறப்பு சீட்டுத் தொகை யில் மிக கவனம் தேவை வெளியிடங்களில் முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டிய காலகட்டம் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வது தவிர்க்க வேண்டிய காலகட்டம்.
மாணவ மாணவியர்களுக்கு:
மாணவ மாணவியர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் நன்றாக படித்தாலும் அட்டம குரு என்பதால் படித்தவர்கள் மறந்து போக வாய்ப்புண்டு மறதிகள் நிறைய ஏற்படும் ஆகையால் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புண்டு கவனக்குறைவு களும் கவன சிதைவுகளும் ஏற்படும் எனவே கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் விரும்பிய மேற்படிப்பு அமைவதில் சிக்கல்கள் ஏற்படும்.
பெண்களுக்கு:
வேலையில் உள்ள பெண்களுக்கு பலவித சங்கடங்களை தரும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் மன உளைச்சல் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம் டென்ஷன் அதிகமாகும் வேலைப்பளு கூடும் எனவே மன உளைச்சல் உண்டாகும் காலம் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு குடும்பப் பிரச்சினைகள் தலைதூக்கும் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் உண்டாகும் சுமுகமாக இருக்க முயற்சி செய்யவும் பல பிரச்சனைகள் அதிகரிக்கும் உடல் ரீதியான தொந்தரவுகள் உடல்நல பாதிப்புகள் மனநல பாதிப்புகள் உண்டாகும்.
விவசாயிகளுக்கு:
விளைச்சல் மகசூல் பாதிக்கப்படும் பூச்சி தொந்தரவால் பலவித பிரச்சனைகள் சந்திக்கும் காலகட்டம் சரியான நேரத்தில் அரசின் உதவிகள் கிடைக்காது கிடைத்தாலும் பயனற்றதாக அமைய வாய்ப்புகள் உண்டு கவனமாக இருந்து பயிர் செய்ய வேண்டிய காலகட்டம்.
பொதுவான பலன்கள்:
எதிலும் கவனமாக இருக்க வேண்டும் எல்லாவிதமான தடை தாமதங்களும் இழப்பீடுகள் உண்டாகும் காலகட்டம் எனவே பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையில் ஒருமுறை பால் அபிஷேகம் செய்து வழிபட சிறப்பு.
யானைக்கு கரும்பு வாங்கித்தர சங்கடங்களும் பிரச்சனைகளும் தீரும்.
கோயில் குருக்களுக்கு அல்லது உங்கள் குருமார்களுக்கு வஸ்திர தானம் செய்ய நல்லது.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.