குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 ரிஷப ராசி
(கார்த்திகை 2,3,4 ரோகிணி மிருகசீரிடம் 1,2)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி 9 மிடம் என்று சொல்லக்கூடிய பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
“ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு”
என்று ஜோதிட வழக்கில் சொல்லப்பட்டுள்ளது ஒன்பதாம் இடம் என்பது திரிகோண ஸ்தானம் எனப்படுவதாகும் இது மிகமிக ராஜ யோகமான இடம் மற்றும் பாக்கிய ஸ்தானம் எனப்படுகிறது எனவே பாக்கியங்கள் தடையின்றி கிடைக்கும் கௌரவம் மதிப்பு செல்வாக்கு ஏற்படும் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும் கடன்கள் தீரும் பொருளாதார பிரச்சனைகள் தீரும் திருமண சுபகாரியம் புத்திர பாக்கியங்கள் ஏற்படும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 9 மிடத்தில் இருந்து உங்கள் ராசியை 5 ஆம் பார்வையாகவும் உங்கள் ராசிக்கு 3 மிடம் என்று சொல்லக்கூடிய முயற்சி தைரியம் வீரியம் இளைய சகோதரன் எழுத்து ஒப்பந்த ஸ்தானத்தை 7 ஆம் பார்வையாகவும்
உங்கள் ராசிக்கு 5 மிடம் என்று சொல்லக்கூடிய பூர்வீகம் குழந்தை பாக்கியம் மனம் டெக்னிக்கல் கல்வி ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.
திருமணம் குழந்தை பாக்கியம்:
உங்கள் ராசியை தன்னுடைய ஐந்தாம் பார்வையாக பார்ப்பதால் திருமணங்கள் நடந்தேறும். நீண்ட நாட்கள் வரன் அமையாமல் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் நடந்தேறும். எதிர்பார்த்தபடி வரன்கள் அமையும். உங்கள் ராசிக்கு 5-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும் நீண்ட நாட்கள் குழந்தை பாக்கியத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வருடம் குழந்தை பாக்கியம் அமையும். மருத்துவத்தின் மூலம் குழந்தை பாக்கியம் எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை வெற்றிகரமாக மருத்துவத்தின் மூலம் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:
உங்கள் ராசியை குரு பார்ப்பதால் உடல் நலம் தேறும் நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் தீர்வுக்கு வரும் மருத்துவச் செலவுகள் குறையும் மருத்துவம் மூலம் உடல்நல பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் உடலில் ஆரோக்கியம் கூடும் வயதானவர்கள் நீண்ட நாட்களாக படுக்கையில் இருந்தவர்களுக்கு சுகம் பெறும் காலகட்டம் தைரியம் வீரியம் உண்டாகும்
தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:
உங்கள் ராசிக்கு 9 மிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பகவான் வருவதால்
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய இடமாற்றங்கள் அமையும் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் வேலை நெருக்கடிகள் குறையும் உங்கள் மீது இருந்த வழக்குகள் தீர்வுக்கு வரும் அரசு துறையில் இருந்து வந்த பல பிரச்சனைகளில் இருந்து விடுபடும் காலகட்டம் மன சங்கடங்கள் தீரும்
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு விரும்பிய வேலைவாய்ப்புக்கள் இடமாற்றங்கள் வெளிநாடு பயணங்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் அமையும் காலகட்டம் மனதில் இருந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து புதிய வேலைவாய்ப்பு சூழ்நிலைகள் உண்டாகும் உயரதிகாரியின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாய்ப்புகள் தேடிவந்து சேரும் புதிய உத்வேகத்துடன் செயல்படும் காலகட்டம் எதிர்பார்க்காத அளவுக்கு வருமானங்கள் கூடும்
தொழில் செய்பவர்கள் வியாபாரிகள் உங்கள் தொழில் வியாபாரம் வளர்ச்சி அடையும் கடன்கள் தீரும் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் வியாபாரங்கள் கூடும் புதிய தொழில் ஒப்பந்தங்கள் உண்டாகும் விஸ்தரிப்பு கள் நடைபெறும் குறுகிய முதலீடுகள் அதிகரிக்கும்
வீடு வண்டி வாகன வசதிகள்:
புதிய மனை வீடு வாங்கும் காலகட்டம். பழைய வண்டிகளை மாற்றி புதிய வண்டி வாகன வசதிகள் வாங்கும் காலகட்டம். வங்கியில் சேமிப்புகள் கூடும்.
மாணவ மாணவியர்களுக்கு:
உங்கள் ராசிக்கு 5 மிடம் என்று சொல்லக்கூடிய டெக்னிக்கல் கல்வி(ITI,பாலிடெக்னிக், இன்ஜினியரிங்) பார்ப்பதால்.இந்த வகை படிப்பு சார்ந்த படிப்பவர்களுக்கு சிறந்த காலகட்டம் . நீங்கள் விரும்பிய துறையில் சேர்வதற்கு வாய்ப்புகள் வந்து சேரும் நல்ல தேர்ச்சியும் அடையும் காலகட்டம். மற்ற படிப்புகளை படிக்கும் மாணவ மாணவியர்களும் இந்த கல்வியாண்டு உகந்த காலகட்டம் ஆகவும் நல்ல தேர்ச்சி விகிதமும் மதிப்பெண்களும் பெரும் காலமாக அமையும்
பெண்களுக்கு:
பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் நோய்கள் நீங்கும். நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மருத்துவத்தின் மூலம் குழந்தைப் பேறு உண்டாகும் காலகட்டம்.கன்னிப்பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். வெள்ளைப்படுதல் நீர்க்கட்டி போன்ற பிரச்சனைகள் நீங்கி கர்ப்பம் தரிக்க ஏற்ற காலமாக அமையும் கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் சுமுக தீர்வு வரும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலகட்டம். நீண்ட நாட்கள் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கூடி வரும் காலகட்டம்.
விவசாயிகளுக்கு:
பயிர் வகைகளில் நல்ல விளைச்சலும் மகசூல் கிடைக்கும் எதிர்பார்த்த வருமானமும் கூடும் அரசின் முழு ஒத்துழைப்புகள் சலுகைகள் கிடைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வங்கிகடன் உங்கள் கைக்கு வந்து சேரும் அறுவடை நல்லவிதமாக அமையும் பணப்பயிர் செய்பவர்களுக்கு மிகுந்த லாபம் கிட்டும் காலம் அரசின் உதவிகள் அனைத்தும் கிடைக்கும்
பொதுவான பலன்கள்:
இளைய சகோதரர்கள் மூலம் ஆதாயங்கள் வந்து சேரும்.
புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.
முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
குழந்தை பாக்கியம் பெரும் காலகட்டம் வீரியம் அதிகரிக்கும்.
மனதில் இருந்த பலவித குழப்பங்கள் தீர்வுக்கு வரும்.
பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக பிரச்சனைகள் முடிவுக்கு வரும் எழுத்து ஒப்பந்தங்கள் உண்டாகும்.
நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும் காலம்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வழிபாடு.
அந்தணர்களுக்கு தேவையான உதவி செய்வது சிறப்பு.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.
Comments are closed.