குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 துலா ராசி

1,387

(சித்திரை 3,4 சுவாதி விசாகம் 1 2 3)

குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் 3 ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி 4 மிடம் என்று சொல்லக்கூடிய சுகம் தாய் வீடு மனை வண்டி வாகன மேற்படிப்பு ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.

“தருமபுத்திரன் நாளிலேயே வனவாசம் படி போனதும்” என்ற பாடல் படி பூமி வீடு வண்டி வாகனம் சுகம் தாய் கல்வி இந்தவகையில் குறை ஏற்படும்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 4 மிடத்தில் இருந்து –
உங்கள் ராசிக்கு 8 மிடம் அட்டம ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 10 மிடம் கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 12 மிடம் அயன சயன போகம் ரகசிய ஒப்பந்தம் வெளிநாடு பயணம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.

நிதி நிலைமை:

நிதி நிலைமை சீராக இருக்கும் திடீர் ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது முதலீடுகள் செய்யும் காலகட்டம் எனவே சரியான முதலீடுகளை தேர்ந்தெடுத்து செய்வது அவசியம் அவசியமற்ற முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :

திருமணம் நடந்தேறும் காலகட்டம் உங்கள் ராசிக்கு கர்ம ஸ்தானத்தையும் போக ஸ்தானத்தையும் குரு பார்வை பெறுவதால் குழந்தை பாக்கியங்கள் உண்டாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் கடன் நோய்கள் குறையும் தேவை இல்லாத புதிய கடன்களை வாங்குவதை தவிர்க்க வேண்டிய காலகட்டம் எதிரி பிரச்சனைகள் அதிகரிக்கும் எனவே கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் தேவையில்லாத பிரச்சினைகளில் அல்லது அடுத்தவருக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்க வேண்டிய காலகட்டம்.

தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:

குரு பகவான் உங்கள் கர்ம ஸ்தானத்தை மற்றும் வெளிநாடு ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீண்ட நாட்களாக வேலைகள் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் அமையும். விரும்பிய இட மாற்றங்கள் ஏற்படும் நீண்ட நாட்களாக வெளிநாடு பயணம் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு பயணங்கள் அமையும் ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டு வெளிநாடு பயணங்கள் உண்டாகும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு தொழிலில் திருத்தி உண்டாகும் வியாபாரம் விரிவடையும் உற்பத்தி பெருகும் ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்களுக்கு மிக மிக சிறந்த காலகட்டம் புதிய வெளிநாடு ஆர்டர்கள் கிடைத்து வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்யும் காலகட்டம் புதுவகையான உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் காலகட்டமாகும்.

வீடு வண்டி வாகன வசதிகள்:

புதிய வீடு வண்டி வாகன வசதிகள் ஏற்படும் இருக்கும் வண்டி வாகனத்தை மாற்றுவது குறித்த சிந்தனைகள் உண்டாகும் புதிய வீடு வாங்குவதில் கவனத்துடன் செயல்பட்டு வாங்கிக் கொள்ளலாம் பணம் உள்ளவர்கள் முதலீடு செய்ய விரும்புவார்கள் மனை வீடுகளில் முதலீடு செய்யலாம்.

மாணவ மாணவியர்களுக்கு:

படிப்புகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் மேல் படிப்பு படிப்பவர்கள் தேர்ச்சி பெறுவதில் கவனமாக இருக்க வேண்டும் மாணவ மாணவிகள் கல்வியில் அக்கறையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் விரும்பிய கல்வி கிடைப்பது தடை ஏற்படும்.

பெண்களுக்கு:

வேலையில் உள்ள பெண்களுக்கு விரும்பிய பதவி மாற்றங்கள் இடமாற்றம் அமையும் புதிதாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் காலகட்டம் புதிய வேலை வாய்ப்புகள் வந்துசேரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த வேலைகளில் சேரும் காலம் இருக்கும் வேலையில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

விவசாயிகளுக்கு:

மகசூல் அதிகரிக்கும் உற்பத்தி பெருகும் எதிர்பார்த்த வருமானங்கள் வந்து சேரும் விரைவாக விளைபொருட்கள் விற்று தீரும் நல்ல காலம் புதிய பயிர் வகைகளில் உற்பத்தி பெருக்கம் அதிகரிக்கும்.

பொதுவான பலன்கள்:

அதிக நேரம் உழைக்க வேண்டிய காலகட்டம்.
சொத்துக்களை வாங்குவதில் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம்.
வாகன பயணத்தில் கவனம்.
ஜாமின் போடுவதை தவிர்க்க காலகட்டம்.
தாயாரின் உடல் நலம் பாதிக்கப்படும்.
எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையில் ஒருமுறை பால் அபிஷேகம் செய்ய சிறப்பு.
குருமார்களுக்கு அல்லது குரு ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய சிறப்பு.
முதியோர்களுக்கு அனாதை ஆசிரமங்களுக்கு வேண்டிய உதவி செய்ய நன்மைகள் ஏற்படும்.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More