குருபகவான் பெயர்ச்சி பலன்கள் 2020-21 விருச்சிக ராசி
(விசாகம் 4, அனுஷம், கேட்டை)
குரு பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி 30 (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை (இரவு 9:48 க்கு) 39.01 நாழிகைக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி ஸ்ரீ சார்வரி வருடம் கார்த்திகை 5 (20.11.2020) வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணிக்கு நேர்கதியில் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
தற்போது உங்கள் ராசிக்கு குரு பகவான் 2 ஆம் இடத்தில் இருந்து பெயர்ச்சியாகி 3 மிடம் என்று சொல்லக்கூடிய தைரியம் வீரியம் முயற்சி இளைய சகோதரம் குறுகிய பயண ஸ்தானத்திற்கு குரு பெயர்ச்சி ஆகிறார்.
“தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்”
“தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு மூன்றில் தார்வேந்தர் பகையும் உண்டு ரோகமுண்டு” – புலிப்பாணி பாடல்
இந்தப் பாடல்களின் பொருள் நம்மை சுற்றி உள்ள உறவினர், உற்றார், நட்பு, பதவி, பணம் அழியும், பொருள் விரயம் ஏற்படும் என்பதாகும்.
குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மிடத்தில் இருந்து
உங்கள் ராசிக்கு 7 மிடம் களத்திர நட்பு எதிரி ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 9 மிடம் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 5 ஆம் பார்வையாகவும்,
உங்கள் ராசிக்கு 11 மிடம் லாபம் ஆசை அபிலாசைகள் என்று சொல்லக்கூடிய ஸ்தானத்தை 9 ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்.
நிதி நிலைமை:
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தை குரு பார்வை பெறுவதால் லாப வரவுகள் உண்டாகும் நிழல் நிதிநிலை மேம்படும் பண கையிருப்பு கள் கூடும் சரியான நேரத்தில் பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை செய்வதால் வரவேண்டிய பாக்கித் தொகைகள் வந்து சேரும் நிதிநிலைமை உயர்வு.
திருமணம் குழந்தை பாக்கியம் குடும்பம் :
உங்கள் களத்திர அனைத்தையும்பாக்கிய ஸ்தானத்தையும் லாப ஸ்தானத்தையும் குரு பகவான் பார்ப்பதால் திருமணம் நடந்தேறும். நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருந்த வர்களுக்கு இந்த காலத்தில் திடீரென்று முடிவடையும் முதிர் மணமகன் மணமகளுக்கு திருமணம் நடந்தேறும் காலகட்டம் விரும்பிய வகையில் வரன்கள் வந்துசேரும் நல்லமுறையில் திருமணங்கள் நடந்தேறும் எதிர்பார்த்த படி வரன் அமையும் குழந்தை பாக்கியம் உண்டாகும் நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் ஆண் வாரிசுகள் ஏற்படும் காலகட்டம் மருத்துவத்தின் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலகட்டம்.
கடன் நோய்கள் உடல் ஆரோக்கியம்:
உடல்நலனில் கவனம் தேவை அதிகரிக்கும் நோய்கள் உண்டாகும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் பொருள் விரயங்கள் மருத்துவ செலவுகள் ஏற்படும் காலகட்டம் எனவே கவனமாக செயல்பட வேண்டும் எதிரி தொந்தரவுகள் அதிகரிக்கும் வழக்குகளில் தோல்வி கிடைக்கும்.
தொழில் வியாபாரம் வேலை வாய்ப்பு:
உங்கள் லாப ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், உத்தியோகஸ்தர்களுக்கு நீண்டநாளாக பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்த்த கொண்டிருந்தவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு அமையும் விரும்பிய இடம் மாற்றங்கள் அதிக பதவி பொறுப்புகள் கவுரவப் பதவிகள் வந்து சேரும் நீண்ட நாட்களாக இடமாற்றம் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடமாற்றம் வந்து சேரும் புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் காலகட்டம்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த காலகட்டத்தில் லாபங்கள் அதிகரிக்கும் வியாபாரங்கள் பெருகும் புதிய வியாபாரங்களை மேற்கொள்ளும் காலகட்டம் ஏற்றுமதி வியாபாரங்கள் அதிகரிக்கும் தூர பயணங்கள் தொழில் வியாபாரம் ஏதுவாக அமையும் அதன் மூலம் ஆதாயங்கள் வந்து சேரும் தொழில் விஸ்தரிப்பு கள் செய்ய வேண்டிய காலகட்டம்.
வீடு வண்டி வாகன வசதிகள்:
அடிக்கடி வண்டி வாகன பழுது செலவுகள் தேவையில்லாத செலவுகள் ஏற்படும் பயணங்களில் மிக மிக கவனம் தேவை புதிய வண்டி வாகனங்களை வாங்குவதில் கவனிக்க வேண்டும் வீடு பராமரிப்புச் செலவுகள் தண்டச் செலவுகள் ஏற்படும்.
மாணவ மாணவியர்களுக்கு:
படிப்புகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் மேல் படிப்பு படிப்பவர்கள் தேர்ச்சி பெறுவதில் கவனமாக இருக்க வேண்டும் மாணவ மாணவிகள் கல்வியில் அக்கறையுடன் இருக்க வேண்டிய காலகட்டம் விரும்பிய கல்வி கிடைப்பது தடை ஏற்படும்.
கவனமாக படித்தால் வெற்றிகள் அதிகம் கிடைக்கும்.
பெண்களுக்கு:
வேலையில் உள்ள பெண்களுக்கு விரும்பிய பதவி மாற்றங்கள் இடமாற்றம் அமையும் புதிதாக வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் காலகட்டம் புதிய வேலை வாய்ப்புகள் வந்துசேரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த வேலைகளில் சேரும் காலம் இருக்கும் வேலையில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு:
மகசூல் அதிகரிக்கும் உற்பத்தி பெருகும் எதிர்பார்த்த வருமானங்கள் வந்து சேரும் விரைவாக விளைபொருட்கள் விற்று தீரும் நல்ல காலம் புதிய பயிர் வகைகளில் உற்பத்தி பெருக்கம் அதிகரிக்கும்.
பொதுவான பலன்கள்:
உடல் அளவில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம்.
வழக்குகளில் மிக மிக கவனம் தேவை.
தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையில் ஒருமுறை பால் அபிஷேகம் செய்ய சிறப்பு.
குருமார்களுக்கு அல்லது குரு ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு வஸ்திர தானம் செய்ய சிறப்பு.
வியாழக்கிழமை தோறும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்ற சிறப்பு.
முதியோர்களுக்கு அனாதை ஆசிரமங்களுக்கு வேண்டிய உதவி செய்ய நன்மைகள் ஏற்படும்.
மேற்கண்ட பலன்கள் யாவும் பொதுவானவையே உங்கள் ஜனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலத்தை பொறுத்தும் தற்போது நடந்து கொண்டிருக்கும் தசாபுத்திகள் பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பொருத்தும் பலன்களில் மாற்றம் உண்டாகும் எனவே சுபகாரியங்களை அல்லது புதிய முடிவுகளை எடுக்கும்பொழுது உங்களுடைய ஜோதிரிடம் அல்லது என்னிடத்தில் கலந்தாலோசித்து செய்வது சிறப்பைத் தரும்.
Comments are closed.