திருக்கணித பஞ்சாங்க முறைப்படி
நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (13.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 30.24 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
எனவே ஒவ்வொரு ராசிக்கும் முதல் 5 மாதம் ஒரு வித பலனையும் அடுத்த ஒரு வருடம் ஒரு விதமான பலன்களையும் தர இருக்கிறார்
வரும் 13.11.2021 முதல் 13.04.2022 வரை உங்கள் ராசிக்கு அயன சயன போக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12 மிடத்திற்கு விரைய குருவாகிறார்.
விரைய குருவாகி தாய் வீடு வண்டி வாகனம் சுக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 4 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும்
ருண ரோக சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 6 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும் அட்டம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 8 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட ஐந்து மாதத்திற்குள் சுப & அசுப பலன்கள் நடந்தேறும்
“வன்மையும் விட ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும்”
என்ற பாடல் படி
பதவி இழப்பு தொழில் துறை நஷ்டம் எதிர்பாராத நஷ்டம் இப்படி பலன் ஏற்பட்டாலும் இதில் சுப விரயச் செலவு அடங்குவதால் வீடு மனை கட்டுதல் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்
அரசு ஊழியர்கள் உத்தியோகஸ்தர்கள் மிகவும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும் பதவி இழப்புகள் விரும்பத்தகாத இடமாற்றங்கள் மேலதிகாரிகளின் தொல்லைகள் வேலைப்பளு தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம்.
தொழில்துறையில் உள்ளவர்கள் வியாபாரிகள் தொழிலில் விரையம், நஷ்டம், தொழிற்சாலையில் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
விபத்துகள் மருத்துவ செலவுகள் தண்டச் செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு
உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டு மருத்துவத்தின் மூலம் அதிக விரைய செலவுகள் ஏற்பட்டு குணம் ஆகும் வாய்ப்புகள் அமையும்.
வங்கிகளில் கடன் வாங்கி வீடு கட்டும் காலம். வீடு மராமத்து செலவுகள் ஏற்படும். புதிய வீடு வாங்குதல் புதிய முதலீடுகள் செய்தல் போட்டோ சுப விரயம் ஏற்படும்
குடும்பத்தில் திருமணம் மற்ற சுப விசேஷங்களுக்கு சுப விரயச் செலவுகள் ஏற்படும்.
முதலீடுகளில் முடக்கங்கள் ஏற்படும்.
தேவையில்லாத விஷயங்களில் பணம் முடக்கங்கள் ஏற்படும்.
பங்குசந்தைகளில் லாபங்கள் கிடைக்கும்
உயிர் பயம் நீங்கும்
புதிய பொன் பொருள் ஆடை ஆபரணச் சேர்க்கைகள் விலை உயர்ந்த விலை மதிப்பற்ற பொருட்கள் வாங்கும் காலகட்டம்.
எதிலும் திட்டமிட்டு செயல்படுவது சாலச் சிறந்த காலகட்டம்.
இரவு பயணங்களை தவிர்ப்பது நல்லது அல்லது மிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலகட்டம்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகி ஜென்ம குருவாகிறார்.
ஜென்ம குருவாகி பூர்வ புண்ணியம் குழந்தை பாக்கியம் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 5 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் ருண ரோக சத்ரு ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 7 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப பலன்கள் நடந்தேறும்.
‘ஜென்ம ராமர் சீதை வனத்திலே சிறை வைத்ததும்”
என்பதற்கேற்ப
இது உங்களுக்கு வனவாச காலம் ஆகும் எனவே உங்களுக்கு இது பாதகமான காலமாக இருக்கும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும் தந்தையுடன் மனகசப்பு முதலீட்டில் பாதிப்பு வேளையில் மந்தப் போக்கு சகோதர வழி வருத்தம் ஏற்படும் காலகட்டம்.
“ஓணான் வேலிக்கு இழுக்க தவளை தண்ணீருக்கு இழுக்க”
என்பது பழமொழி போல் வாழ்க்கை நிகழ்ச்சி இருக்கும்.
திருமணங்கள் தடைபடும் காலம்
கணவன் மனைவி உறவில்
விரிசல் ஏற்படும்
கொடுக்கல்-வாங்கலில் தடை தாமதங்கள் உண்டாகும்
உடல்நிலை குறைவு அடிக்கடி ஏற்படும்.
இருந்தாலும் 5,7,9 ஆகிய இடங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால். கவனமாக இருந்தால் மேற்கண்ட கடுமையான பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு செயல்படுவது வேலை பிரச்சனையும் குடும்பத்தில் ஏற்படப்போகும் பிரச்சனைகளையும் தீர்க்கும்
திருமணம் நிறைவேறுவதில் பலவித சங்கடங்கள் தடைகள் ஏற்பட்டு திருமணம் முடிவாகும். பிறருக்கு திருமணம் முடிவாகி தடைபடும் அல்லது கால தாமதப்படும். சிலருக்கு உடனடியாக நடந்தேறும்.
குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம்.
புதிய முதலீடுகளில் கவனம் தேவை
விரும்பத்தகாத இடமாற்றங்கள் வேலை மாற்றங்கள் வேலை இழப்புகள் ஏற்படும் காலம்.
வேலை நிமித்தமாக தூர பயணங்கள் வெளிநாடு பயணங்கள் ஏற்படும் அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் பலவித சங்கடங்களை சந்தித்து காலகட்டம்
எச்சரிக்கை:
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்