மேஷராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2021-2022-2023)
மேஷராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2021-2022-2023)
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி
ிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (13.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 30.24 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
எனவே ஒவ்வொரு ராசிக்கும் முதல் 5 மாதம் ஒரு வித பலனையும் அடுத்த ஒரு வருடம் ஒரு விதமான பலன்களையும் தர இருக்கிறார்
வரும் 13.11.2021 முதல் 13.04.2022 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் லாப ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி லாப குருவாகிறார்.
லாப குருவாகி உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தை ஐந்தாம் பார்வையாகவும் ஐந்தாம் இடத்தை ஏழாம் பார்வையாகவும ஏழாம் இடத்தையும் 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார் அதனால் கீழ்கண்ட சுப பலன்கள் விரைவாக மேற்கண்ட ஐந்து மாதத்திற்குள் நடந்தேறும்.
உத்தியோகம் தொழில் வியாபாரம் இவைகளில் லாபங்கள் கூடும்
புதிய வேலைவாய்ப்புகள் சம்பள உயர்வுகள் பதவி உயர்வுகள் விரும்பிய இடமாற்றங்கள் ஏற்படும்
புதிய தொழில் வியாபாரம் தொடங்க ஏற்ற காலம்.
வியாபார அபிவிருத்தி உண்டாகும்
புதிய தொழிற்சாலைகள் விரிவாக்கம் புதிய தொழிற்சாலைகள் அமைத்தல், புதிய இயந்திரங்களை நிறுவுதல் போன்றவைகள் நடைபெறும்
ஏற்கனவே உற்பத்தி தேக்கம் ஆகியிருந்த பொருட்கள் இந்த காலகட்டத்தில் விற்பனையாகி அதிக லாபங்கள் வந்து சேரும்
விவசாய பெருமக்களுக்கு நன்கு விளைச்சல் கிடைக்கும் எதிர்பாராத லாபங்கள் வந்து சேரும் புதிய நிலங்கள் வாங்கும் வாய்ப்புகளும் வந்து சேரும்
திருமணத்திற்காக காத்துக்கொண்டிருந்தவர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்தேறும்.
நீண்ட நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரும் காலகட்டம்
நண்பர்கள் வழியில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்
கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும்
காதலில் வெற்றிகள் கிடைக்கும்
காதல் செய்பவர்கள் திருமணம் கூடி வரும் காலகட்டம்
பெண்களுக்கு மாதவிடாய் சம்மந்தமான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். அடிவயிறு தொந்தரவுகள் நிவர்த்தியாகும்
வயிறு சம்பந்தமான உபாதைகள் சரியாகும்
கழுத்து வலி தோள்பட்டை வலி இவைகள் மருத்துவத்தின் மூலம் சரியாகி நிவாரணம் கிடைக்கும்
நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் காலகட்டம்
பூர்வீகத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
குலதெய்வ வழிபாடுகள் பாக்கி இருந்தால் இந்த காலகட்டத்தில் குலதெய்வ வழிபாடு கோரிக்கைகள் நிறைவேறும். குலதெய்வ கோயில்களில் திருப்பணி நடக்கும் அதற்குண்டான செலவுகள் ஏற்படும்
உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும்
இளைய சகோதரர்கள் வழியில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் அவர்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும்
எழுத்து ஒப்பந்தங்கள் ஏற்படும் பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் முக்கிய முடிவுகள் எடுக்கும் காலகட்டம் அது நன்மையை தரும்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி விரைய குருவாகிறார்.
விரைய குருவாகி உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தை ஐந்தாம் பார்வையாகவும் ஆறாம் இடத்தை ஏழாம் பார்வையாகவும எட்டாம் இடத்தையும் 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார் அதனால் கீழ்கண்ட அசுப மற்றும் சுப பலன்கள் மேற்கண்ட காலத்தில் நடந்தேறும்.
“வன்மையுறிருந்த ராவணன் முடி பன்னிரெண்டில் வீழ்ந்ததும்”
என்ற பாடலுக்கு ஏற்ப
பதவி இழப்பு, தொழில் துறைகளில் நஷ்டம், எதிர்பாராத விபத்து இப்படி அசுப
பலன்களும் ஏற்படும்
விரைய குரு என்பதால் சுப விரயங்களும் இதில் அடங்கும் அதன்படி சுப விரயச் செலவுகள் ஏற்படும்
புதிய வீடு கட்டுதல் அல்லது இருக்கும் வீட்டை விரிவாக்குதல் அல்லது புதிய வீட்டுக்கு மாறுதல் போன்ற சுப செலவுகள் ஏற்படும்
திருமணங்கள் கூடிவரும் காலகட்டம் திருமண செலவுகள் ஏற்படும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்
புதிய பொன் பொருள் சேர்க்கைகள் ஆபரணச் சேர்க்கைகள் ஏற்படும் அதற்குண்டான செலவுகள் உண்டாகும்.
நீண்ட கால நோய்கள் மருத்துவத்தின் மூலம் சரியாகும், விபத்து ஏற்பட்டு உடல்நலம் சரியாகும் நோய்கள் நீங்கும்
மருத்துவச் செலவுகள் அதிகரித்து உடல் நலம் சரியாகும், நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தவர்கள் மருத்துவச் செலவுகள் மூலம் சரியாகும் காலகட்டம்
நீண்ட நாட்களாக இதய அறுவை சிகிச்சைகள் செய்ய காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அறுவை சிகிச்சைகள் நடந்தேறும். இருதய அறுவை சிகிச்சை ஏற்பட்டு அல்லது சிகிச்சை மேற்கொள்பவர்கள் சுகம் பெறும் காலகட்டம்.
மருத்துவத்தின் மூலம் உடல் நலம் முழுவதும் தேறிவரும் காலகட்டம்.
மறைமுக பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்
எதிரிகள் தொந்தரவு குறையும்
பரிகாரம்:
யானைக்கு கரும்பு கட்டு வாங்கித் தருவது
குருமார்களுக்கு அல்லது குருகுலத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்வது
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
எச்சரிக்கை:
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்