குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் (2021-2022-2023) மிதுன ராசி
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி
நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி
நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (13.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 30.24 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
எனவே ஒவ்வொரு ராசிக்கும் முதல் 5 மாதம் ஒரு வித பலனையும் அடுத்த ஒரு வருடம் ஒரு விதமான பலன்களையும் தர இருக்கிறார்
வரும் 13.11.2021 முதல் 13.04.2022 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி பாக்கிய குருவாகிறார்.
பாக்கிய குருவாகி உங்கள் ராசியையும் ஐந்தாம் பார்வையாகவும்
மூன்றாம் இடத்தையும் ஏழாம் பார்வையாகவும்
ஐந்தாம் இடத்தை இடத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட ஐந்து மாதத்திற்குள் நடந்தேறும்.
“ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு” என்பது ஜோதிட மொழி வழக்கு
9-ஆம் இடம் என்பது திரிகோணம் ஆகும். இது மிகமிக ராஜயோகமான இடம் ஆகும். இது பாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே பாக்கியங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும், கௌரவம் மதிப்பு செல்வாக்கு ஏற்படும் காலகட்டம். வாழ்வில் முன்னேற்றங்கள் ஏற்படும். கடன்கள் அனைத்தும் தீரும். பொருளாதாரப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திருமணம் சுபகாரியம் புத்திர பாக்கியங்கள் ஏற்படும்.
மேற்படிப்பு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மேற்படிப்புகள் அமையும் காலம். விரும்பிய மேற்படிப்புகள் அமையும் கிடைக்கும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு மிக விரைவில் வேலைவாய்ப்புகள் அமையும்.
நீண்ட நாட்களாக திருமணம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடந்தேறும் காலகட்டம்
அனைத்து விதமான பாக்கியங்களும் சேரும். புதிய பொருட்கள் சேர்க்கை ஏற்படும். வீட்டு உபயோக பொருட்கள் சேரும். புதிய நகை ஆபரணங்கள் வெள்ளிப் பொருட்கள் வைர கதைகள் சேரும் காலகட்டம்.
நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் தீரும்
குடும்பத்தில் சுப காரியங்கள் அடிக்கடி நடக்கும்
பொருளாதாரப் பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும்
தந்தையின் ஆரோக்கியம் மேம்படும்
வெளிநாடு உல்லாச பயணங்கள் உண்டாகும்
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் கால கட்டம்
உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தேடித்தரும்
புதிய சொத்துக்கள் குறித்த எழுத்துக் ஒப்பந்தங்கள் ஏற்படும்
இளைய சகோதரர்கள் மூலம் நன்மைகள் வந்து சேரும் காலகட்டம். அவர்களிடம் இருந்த பிரச்சனைகள் சுமூக தீர்வு கிட்டும்
பங்குசந்தையில் உள்ளவர்கள் அதிகமான ஆதாயங்களை பெறும் காலகட்டம்.
உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் விரும்பிய இடமாற்றங்கள் / பதவி மாற்றங்கள் / ஊர் மாற்றங்கள் கிடைக்கப்பெறும்
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். அதுகுறித்த சகோதரர்களிடம் இருந்த பிணக்குகள் மாறி எழுத்து ஒப்பந்தங்கள் ஏற்படும்.
விவசாயப் பெருமக்களுக்கு விளைச்சல் கூடும் விளைச்சலில் நல்ல லாபங்கள் கிடைக்கும் பணப் பயிர்களில் அதிகமான லாபங்களை எதிர் பார்க்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். மாதவிடாயிலிருந்து குளறுபடிகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் கால கட்டம், நீண்ட காலம் மருத்துவத்தின் மூலம் அந்த பாக்கியம் எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் பொறுப்புகள் மேலிட ஆதரவுகள் கிடைக்கும் காலகட்டம் அதன்மூலம் வருமானம் அதிகரிக்கும் மதிப்பு மரியாதை கூடும் பலருக்கு கௌரவப் பதவிகள் பெரிய பதவிகள் வந்து சேரும்
வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 10மிட குருவாகிறார்.
10மிட குருவாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானம் எனும் இரண்டாம் இடத்தை இடத்தை ஐந்தாம் பார்வையாகவும்
குடும்பம் என்று சொல்லப்படும் நான்காம் இடத்தை ஏழாம் பார்வையாகவும
ருண ரோக சத்ரு ஸ்தானம் எனப்படும் ஆறாம் இடத்தையும் 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்
அதனால் கீழ்கண்ட சுப பலன்கள் மேற்கண்ட காலத்தில் நடந்தேறும்.
“10மிட குரு பதி குழையச் செய்யும்”
“அந்தணன் பத்தில் நின்றால் அவதிகள் பல உண்டு”
“ஈசன ரொரு பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்”
இப்படி குருபகவான் 10-ல் வரும்போது சிறப்பு இல்லாதது, கஷ்டங்களையும் தரும். பத்தில் குரு வரும்போது பதவி பறிபோகும். எனவே தொழில் வகையில் போட்டி பொறாமை ஏற்படும் வேலை இழப்பீடு மாறுதல் அலைச்சல் என்று தொழில் வழி சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்.
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றும் அடிமை தொழில் செய்பவர்களுக்கு, அரசு ஊழியர்களுக்கு வேலை இழப்புகள் ஏற்படும்/பதவிகள் பறிபோகும்/ பதவி உயர்வு கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும்/ சம்பள உயர்வு தடைபடும்/ விரும்பத்தகாத துறை மாற்றங்கள்/ விரும்பத்தகாத இடமாற்றங்கள் ஊர் மாற்றங்கள் ஏற்படும்/ பணிச்சுமை அதிகரிக்கும்/மேலதிகாரியின் நடவடிக்கைகளுக்கு ஆட்பட நேரிடும்/ பதவி குறைப்பு நடவடிக்கை உண்டாகும்/ வழக்கு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்படும். வியாபாரம் தொழில் மேன்மை இருக்காது. நஷ்டங்களை சந்திக்கும் காலகட்டம், தொழில் மாற்றங்கள் ஏற்படும், தொழில் வியாபாரத்தை மூடும் நிலமைக்கு பிரச்சனைகளை சந்திக்கும் காலம். தேவையற்ற அரசு தொந்தரவுகள் ஏற்படும்.
தேவைக்கேற்ப பணம் வந்துகொண்டே இருக்கும். சீட்டு பணங்கள் சேமிப்பு பணங்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்கள் அல்லது நீங்கள் சீட்டு நடத்துபவர்கள் ஆக இருந்தால் மிக கவனத்துடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம். பண முடையில் சிக்க வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும்
வாக்குகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்
விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும்
வரன் பேச்சுவார்த்தைகள் முடிவாகி திருமணம் நடந்தேறும் காலகட்டம்.
புதிய சொத்துக்கள் வண்டி வாகன வசதிகள் ஏற்படும். வீடுகளில் மராமத்து பணிகள் /விரிவாக்கம் செய்யும் காலகட்டமாக இருக்கும். வசதி குறைவான வீட்டிலிருந்து வசதியான இடத்திற்கு மாறும் காலகட்டம். வாடகை வீட்டிலுள்ளவர்கள் ஒத்திக்கு வசதியான இல்லத்திற்கு மாறும் காலகட்டமாக அமையும் அல்லது புதிய வாடகை வீட்டுக்கு செல்லும் கட்டாயம் ஏற்படும்.
வண்டி வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்
உடல்நல பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த நோய்கள் விலகும் காலகட்டம். இருதய அறுவைச் சிகிச்சைகள் ஏற்பட்டு நலமாகும் காலம்.
நிரந்தர சொத்துக்களின் இது இருந்த பல பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். வங்கி இருப்பு கூடும்.
தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய இயந்திரங்களை கடன் வாங்கி நிறுவும் காலகட்டம். எனவே சரியான திட்டமிட்டு கடன் வாங்குவது நன்மையை தரும்.
வங்கியில் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு கடன் வசதிகள் கிடைக்கும்.
புதிய வேலை வாய்ப்புகளுக்கு வாய்ப்புகள் உண்டு கவனமாக பரிசீலனை செய்து மாற வேண்டிய காலகட்டம்.
சேவைத் துறையில் பணிபுரிபவர்கள் நன் மதிப்புகள் பெறும் காலம்
விவசாய பெருமக்கள் பலவித தொந்தரவுகள் சந்திக்கும் காலகட்டம். உரத்தட்டுப்பாடுகள் ஏற்படும். பூச்சிகள் தொந்தரவால் விளைச்சல் பாதிக்கப்படும் அதனால் வருமானம் இழப்புகள் ஏற்படும். சில பெருத்த நஷ்டங்களை சந்திக்கும் காலகட்டம். சிலர் விவசாயத்தையே விட்டு சென்று விடலாம் என்ற மனநிலைக்கு போகும் காலகட்டம். எனவே பொறுமை காக்க வேண்டிய அவசியம் உள்ள காலம்
பெண்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம் வேலை இழப்புகள் வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் பணிச் சுமைகள் ஆகியவற்றை சந்திப்பீர்கள். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டம்
மாணவ மாணவியர்கள் இந்த காலகட்டத்தில் நல்ல மதிப்பெண்களையும் விரும்பிய கல்விகளையும் மேற்படிப்பு களையும் பெறும் காலகட்டம்.
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் காலகட்டம்.
பரிகாரம்:
திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
அந்தணர்களுக்கு அல்லது அந்தனர் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் படிப்புக்குத் தேவையான உதவிகள் செய்வது நன்மையளிக்கும்.
எச்சரிக்கை:
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்
Comments are closed.