குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் (2021-2022-2023) விருச்சிக ராசி

871

நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி (20.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 43.13 நாழிகைக்கு இரவு 11:31 மணி அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் ஐப்பசி மாதம் 27 ஆம் தேதி (13.11.2021) சனிக்கிழமை சூர்ய உதயாதி 30.24 நாழிகை அளவில் குரு பகவான் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்
பின்பு
பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

இந்த முறை குருபகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகிய மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வராமல் அடுத்து நேராக மேஷ ராசிக்கு 21.04.2023 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
எனவே ஒவ்வொரு ராசிக்கும் முதல் 5 மாதம் ஒரு வித பலனையும் அடுத்த ஒரு வருடம் ஒரு விதமான பலன்களையும் தர இருக்கிறார்

வரும் 13.11.2021 முதல் 13.04.2022 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் தாய் வீடு வண்டி வாகனம் சுக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 4ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 4 மிட குருவாகிறார்.
4 மிட குருவாகி அட்டம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 8 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் கர்ம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 10 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும் அயன போக சுகம் விரைய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 12 மிடத்தையும் ஒன்பதாம் பார்வையாகவும்
பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட ஐந்து மாதத்திற்குள் அசுப & சுப பலன்கள் நடந்தேறும்
“தருமபுத்திரர் நாலிலே
வனவாசம் அப்படிப் போனதும்”
என்ற பாடலின் படி

நான்காம் இடமான பூமி வீடு வண்டி வாகனம் சுகம் தாய் கல்வி இந்த வகையில் குறைபாடுகள் ஏற்படும்.

தாயாரின் உடல் நல பாதிப்புகள் அதிகப்படும் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

வண்டி வாகனங்களில் அடிக்கடி பழுதுகள் ஏற்படும் தேவையில்லாத அர்த்தமற்ற செலவுகள் ஏற்படும். திடீர் பழுது காரணமாக அவதிகள் ஏற்படும். வண்டி வாகன பயணத்தில் மிக மிக எச்சரிக்கை அவசியம். பழைய வண்டிகளை மாற்றி புதிய வண்டிகளை வாங்கிக் கொள்வது சிறப்பு

பூமி மனை வீடு இவைகளில் பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம். புதிய சொத்துக்கள் வாங்குவதில் மிகுந்த கவனமும் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். வீடு மாற்றங்கள் உண்டாகும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் வேறு இடத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டிய காலகட்டங்கள். நிலத்தகராறு நிலத்தில் உள்ள பிரச்சனைகள் அதிகமாக சந்திக்கும் காலகட்டம்.

சுகக் கேடுகள் அதிகரிக்கும். இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு. நெஞ்சு சார்ந்த வலி வேதனைகள் ஏற்படும்.

பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனம் தேவை. விரும்பிய கல்வி கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படும். தேர்வு நேரங்களில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்

வியாபாரிகள் தொழிலதிபர்கள் புதிய இயந்திரங்களை நிறுவி வகையில் மிகுந்த எச்சரிக்கையும் கவனமும் தேவை. அடிக்கடி இயந்திரப் பழுதுகள் ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும். எனவே புதிய இயந்திரங்களை மாற்ற சிறப்பு.

வங்கி இருப்பு கரையும் காலகட்டம். பண சங்கடங்கள் ஏற்படும். புதிய முதலீடுகள் பிரச்சனைகளை தரும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

உடல் நலத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். மறைமுகப் பிரச்சனைகள் தொந்தரவுகள் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.

பங்கு சந்தையில் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலகட்டம்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வாழும் காலகட்டம் இது.

அடிக்கடி தூர பயணங்கள் ஏற்படும் வேலை நிமித்தமாக.

அரசு ஊழியர்கள் உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடங்களில் இடமாற்றம் உண்டாகும் புதிய பதவிகள் பொறுப்புகள் கிடைக்கும். கௌரவப் பதவிகள் வந்து சேரும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும் காலகட்டம்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வியாபாரங்கள் தொடங்கும் காலகட்டம். இருக்கும் தொழிலில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். விரிவாக்கங்கள் நடைபெறும் காலகட்டம். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு நன்மைகள் கூடிவரும்.

தண்ட விரைய செலவுகள் குறையும் காலகட்டம். சுப விரயங்கள் ஏற்படும்.

நிம்மதியான உறக்கம் ஏற்படும். அயன சயன போகம் இவற்றில் குறைபாடுகள் நீங்கும்.

திருமணம் நடந்தேறும் காலகட்டம்

. நீண்ட நாட்கள் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலகட்டம். கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் தீரும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலகட்டம்.

வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் பூர்வ புண்ணியம் குழந்தை பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 5ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி 5 மிட குருவாகிறார்.

5 மிட குருவாகி பாக்கிய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 9 மிடத்தை ஐந்தாம் பார்வையாகவும் லாபம் ஆசை அபிலாசைகள் ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 11 மிடத்தையும் ஏழாம் பார்வையாகவும்
உங்கள் ராசியை 9-ஆம் பார்வையாகவும் பார்வை செய்கிறார்

அதனால் கீழ்கண்ட பலன்கள் மேற்கண்ட காலகட்டத்தில் சுப பலன்கள் நடந்தேறும்.

5-ஆம் இடம் என்பது புத்திரம், குரு உபதேசம், உபாசனை, மகிழ்ச்சி, திட்டம், தாய்மாமன், பாட்டனார், பூர்வ புண்ணியம் இவைகளை குறிக்கும். இக்காலத்தில் மன மகிழ்ச்சியான செயல்கள் நடைபெறும்.

திருமணமாகாதவர்களுக்கு உடனடியாக திருமணம் நிறை வேறும் காலகட்டம். முதிர்கன்னி களுக்கும் திருமணம் நடந்தேறும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும் காலகட்டம். இரண்டாவது திருமணம் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் நிறை வேறும் காலகட்டம்.

கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அல்லது பிரிவுகள் மறைந்து ஒன்று சேரும் காலகட்டம்.

பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேரும் காலகட்டம்.

காதல் செய்பவர்கள் காதலில் வெற்றி பெறும் காலம் திருமணம் நடந்தேறும். பெற்றோர்களின் ஆதரவும் கிடைக்கும்

திருமணமானவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் ஏற்படும்.

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் அமையும்.

பெண்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் குழந்தை பாக்கியம் கிட்டும்.

நீண்டகால ஆசைகள் கோரிக்கைகள் நிறைவேறும்

உடல் நலம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும்

புனித யாத்திரைகள் தீர்த்த யாத்திரைகள் நிறைவேறும் காலகட்டம். தூரதேச பயணங்கள் ஏற்படும்

தடைபட்டிருந்த குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாடுகள் முறையாக நடந்தேறும். குலதெய்வ கோயில் கட்டும் பணியும் அல்லது மராமத்துப் பணிகள் மேற்கொள்ளும் காலகட்டம். அதற்குண்டான சுபச் செலவுகளும் இருக்கும்.

புதிய குருமார்களின் உபதேசம் கிட்டும்.

உபாசனை தெய்வத்தின் அருள் கிடைக்கும்

தாய்மாமன் பாட்டனார் வழியில் நன்மைகள் வந்து சேரும் ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்.

சுப நிகழ்வுகள் குடும்பத்தில் நடந்தேறும்

பலவித பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்

எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும்

மிக சிறப்பான காலகட்டம்

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
வேத பாடசாலையில் படிக்கும் பிராமணர் குழந்தைகளுக்கு வேண்டிய உதவிகள் செய்வது நலம்.
ஒருமுறை யானைக்கு கரும்பு கட்டு வாங்கித்தர பல பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் அல்லது கோவிலில் ஒரு நாள் ஆகாரத்துக்கு பணம் கட்டினால் சிறப்பு

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More