Disclaimer: இவைகள் யாவுமே பொதுவான பலன்களே.
உங்கள் ஜனன ஜாதகத்தின் கிரக நிலையை பொறுத்தம் தசா புத்திகளை பொருத்தும் ஜாதக வலுவை பொருத்தும் மற்ற கிரகங்களின் பெயர்சிகளையும் பொருத்தும் பலன்களில் மாற்றங்கள் இருக்கும் எனவே எந்த காரியத்தை செய்யும் முன்பு உங்களுடைய ஜோதிடரிடம் அல்லது என்னிடம் ஜாதகத்தை காண்பித்து முடிவு செய்வது சிறப்பை தரும்
வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023 to 2024:
சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி (22.04.2023) சனிக்கிழமை சூரிய உதயாதி 43.30 நாழிகைக்கு இரவு 11:26 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்
திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி 2023 to 2024:
சோபகிருது வருடம் சித்திரை மாதம் 8 ஆம் தேதி (21.04.2023) வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி 58.14 நாழிகைக்கு மறுநாள் விடியற்காலை 05:14 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசம் செய்கிறார்.
கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 12 இடத்தில் இருந்து கொண்டு விரைய குருவாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். இந்த காலகட்டத்தில் பதவி இழப்பு தொழில்துறை நஷ்டம் எதிர்பாராத விபத்து இப்படி பலவிதமான அசுப பலன்கள் ஏற்பட்டாலும் சுப விரய செலவுகளும் நடந்து இருக்கும் அதாவது வீடு மனை கட்டுதல் சம்பந்தமான செலவுகள் திருமண செலவுகள் பொன் பொருள் சேர்க்கை ஏற்பட்டிருக்கும்
இனி அடுத்த ஒரு வருட காலம் உங்கள் ராசிக்கு ஜென்ம குருவாக பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் ராசிக்கு 5, 7 & 9 இடங்களை பார்வை செய்வார்.
ஜென்ம குரு
“ஜென்ம ராமர் சீதையை வனத்திலே சிறை வைத்ததும்”
என்பதற்கேற்ப இது உங்களுக்கு ஒரு வனவாச காலமாக இருக்கும் எனவே
பாதகமான செயல்கள் நிறைய நடக்கும்
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும்
தந்தையுடன் மனக்கசப்பு ஏற்படும்
முதலீடுகளில் பாதிப்புகள் உண்டு
வேலையில் மந்த போக்கு அதிகரிக்கும்
சகோதரர்கள் வழியில் வருத்தங்கள் ஏற்படும்.
“ஓணான் வேலிக்கு இழுக்க தவளை தண்ணிக்கு இழுக்க” என்பது போல் வாழ்க்கை நிகழ்ச்சிகள் இருக்கும்
திருமணத்தடை ஏற்படும்
கணவன் மனைவி உறவில் விரிசல்கள் உண்டாகும்
கொடுக்கல் வாங்கலில் தடை தாமதங்கள் ஏற்படும்
அடிக்கடி உடல் நலக் குறைகள் ஏற்படும்
எல்லா வழியிலும் டென்ஷன் அதிகரிக்கும் காலகட்டம்
வேலை தொழில் வியாபாரத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்
திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் அமையும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
பெண்களுக்கு கர்ப்பபை சம்மந்தப்பட்ட நோய்கள் மருத்துவத்தின் மூலம் குணமாகும் கர்ப்பம் தரிக்கும் காலமாக அமையும் அல்லது மருத்துவ முறையின் மூலம் கர்ப்பம் தரிக்கும் காலமாக இருக்கும்
குழந்தைகள் வழியில் நன்மைகள் கிடைக்கும் குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும் திருமண வயதில் உள்ள உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தேறும் காலகட்டம்
திருமணம் தடைபட்டு வெற்றி அடையும்
கணவன் மனைவியிடையே பிணக்குகள் ஏற்பட்டாலும் வாழ்க்கை ஓடும் பிரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு
நண்பர்கள் வட்டம் விரிவடையும் அவர்கள் மூலம் லாபம் கிடைக்கும்
தெய்வ ஸ்தலங்களுக்கு யாத்திரைகள் ஏற்படும்
குடும்பத்தை விட்டு வெகுதூர பயணங்கள் ஏற்படும்
குரு பெயர்ச்சி பரிகாரம்:
திருச்செந்தூர் சென்று வர கடுமையான பலன்கள் குறையும்
ஏழை பிராமண குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நன்மை கிடைக்கும்
ஆசிரியர் அல்லது குருமார்களுக்கு வஸ்திர தானம் செய்ய தொல்லைகள் குறையும்.
Leave a Reply
You must be logged in to post a comment.