மேஷ ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019

1,993

மேஷ ராசி அன்பர்களே
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1)

குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

வாக்கியப்படி குருபெயர்ச்சி பலன்கள் 2019

குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள் 2019

குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

மேஷம் (90%): (ராஜ யோக குரு)

கடந்த ஒரு வருடமாக அட்டம குருவினால் பொருள் இழப்பீடு புகழ் இழப்பீடு உயிர் இழப்பீடு புதிய முயற்சி தடை சுபகாரிய தடை விரும்பத்தகாத இடமாற்றம் பிள்ளைகள் தொந்தரவு ஆகிய பல பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள்

இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் பெயற்சியாவது சிறப்பான பலனை அளிக்கும்

“ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு” இது ஜோதிட பழமொழி

இனி எல்லாம் சுகமே உங்கள் திரிகோணத்தில் பாக்கிய ஸ்தானத்தில் குருபகவான் வருவது மிகமிக ராஜயோகத்தை தரும் பாக்கியங்கள் தங்குதடையின்றி கிடைக்கும் இழந்த கவுரவங்கள் மதிப்பு செல்வாக்கு அனைத்தும் தேடி வரும் வாழ்வில் முன்னேற்றமான காலங்கள் கடன்கள் அனைத்தும் தீரும் பொருளாதார பிரச்சனைகள் சரியாகும் திருமண சுப காரியங்கள் நடக்கும் புத்திர பாக்கியங்கள் உண்டாகும் அனைத்து விதமான காரியங்களும் எளிதாக இனிதாக நடைபெறும் காலம்

குருபகவான் பெயர்ச்சியாகி

🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியையும்

🌸ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3-ஆம் இடத்தையும்

🌸9-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்

நிதிநிலை :

ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியை குரு பார்ப்பதால் உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக உண்டாகும் நிதிநிலை கூடும் எதிர்பார்த்திருந்த தனம் வந்து சேரும் பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி அதன் மூலமாக தனவரவுகள் அல்லது பொருள் வரவுகள் கைகூடும்

உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:

உத்தியோகம் தொழில் வியாபாரம் இவற்றில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் டெக்னிக்கல் சம்பந்தமான துறையில் வேலை செய்பவர்கள் அல்லது புதிதாக வேலை தேடுபவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு அமையும் பதவி உயர்வுகள் கிடைக்கும் சம்பள உயர்வு கிடைக்கும் டெக்னிக்கல் சம்பந்த தொழில்நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடையக்கூடிய காலம் தொழிலை விஸ்தரிக்கும் காலம் முயற்சிகள் தந்தை வழியில் தொழிலை நடத்துவார்கள் மிகவும் முன்னேற்றத்துடன் விரிவாக்கம் செய்யும் காலம் உங்களுக்கு என்று தனியாக நிறுவனம் / தொழிற்சாலை அமைத்துக்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும் அது வெற்றியையும் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு விரும்பிய இடமாற்றம் மேல் அதிகாரிகளின் ஆதரவு நீண்டநாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செட்டில்மெண்ட் தொகைகள் வந்து சேரும்

திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :

உங்கள் ராசிக்கு 5-ஆம் பார்வையாக குருவின் பார்வை விழுவதால் வெகு நாட்களாக திருமணத்துக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் நடந்தேறும், பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேரும் காலம், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், குரு பகவான் 9-ஆம் பார்வையாக உங்கள் ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் சந்தான விருத்தியும் ஏற்படும், நீண்ட நாள் மருத்துவம் மூலம் குழந்தைப் பேறுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் குழந்தைபாக்கியம் அமையும் நாள், பெண்களுக்கு கர்ப்பப்பையில் இருந்த பிரச்சனைகள் தீரும். இளம்பெண் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் மருத்துவத்தின் மூலம் சரியாகும், வெள்ளைப்படுதல் தொந்தரவுகள் நீங்கும், நீண்ட நாள் கருவுறுதலில் பிரச்சனை இருந்த பெண்களுக்கு கரு உருவாக வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்

மாணவ மாணவியர்கள்:

கடந்த ஓராண்டாக மாணவ மாணவிகள் சந்தித்து வந்த பல பிரச்சனைகள் அதாவது மறதி தவறான பதில் அளித்தல் புரிவதிலும் குழப்பம் ஆகியவை நீங்கும் காலம், நல்ல மதிப்பெண்கள் பெறும் காலம், வரும் பொதுத் தேர்வுகளில் சிறப்பான வெற்றியையும் மதிப்பெண்களையும் பெறுவீர்கள், மனதில் இருந்த குழப்பங்கள் எல்லாம் மாறி தெளிவான சிந்தனையுடன் படிப்புகள் அமையும், எனவே சரியாக பயன்படுத்திக் கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும், டெக்னிக்கல் துறையில் படிப்பு (ஐடிஐ பாலிடெக்னிக் பொறியியல்) மேற்கொண்டு உள்ளவர்கள் இந்த ஆண்டில் சிறப்பான பலனை நல்ல தேர்ச்சி மதிப்பெண் பெற கூடிய காலம், இந்த ஆண்டில் படிப்பை முடிப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்

விவசாயிகளுக்கு:

உங்களுக்கு இது சிறந்த காலம் விவசாயத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும் கிழங்கு வகைகளில் பெருத்த லாபத்தை சந்திக்கும் காலம் பணப்பயிர்கள் நல்ல லாபத்தை தரும் எதிர்பார்த்த விளைச்சலை விட அதிகமாக கிடைக்கும் காலகட்டம், வங்கிகளிலிருந்து தேவையான கடன்கள் கிடைக்கும், குறித்த காலகட்டத்தில் விவசாய இடுபொருட்கள் உரங்கள் அறுவடை நடக்கும்

பெண்களுக்கு :

புதிய வேலை வாய்ப்புகள் அமையும் ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகுந்த நல்ல காலம் புதிதாக ஆசிரிய வேலைகள் தேடுபவர்களுக்கும் எளிதாகக் கிடைக்கும் உடல் நல்ல சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் சரியாகும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து தொந்தரவுகள் குறையும் மனதில் இருந்த குறைகள் அனைத்தும் நீங்கும் காலம் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்

மற்ற பலன்கள்:

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் காலம்

இன்சூரன்ஸ் தொகைகள் கைக்கு வந்து சேரும்

நீண்ட நாள் வர வேண்டிய பணி ஊதியங்கள் பாக்கிகள் தொகைகள் வந்து சேரும்

நீண்டகாலமாக போராடிக்கொண்டிருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்

தஸ்தாவேஜுகள் இல் பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகும் சரி செய்து கொள்ள வேண்டிய காலகட்டம்

பரிகாரம்:

🍥வாரந்தோறும் நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபட சிறப்பு

🍥 யானைக்கு கரும்பு வாங்கிதர சிறப்பு

🍥 குருகுலத்தில் படிக்கும் அந்தனர் குழந்தைகளுக்கு உதவி செய்ய சிறப்பு

🍥 ஒரு முறை திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்யவும்

முக்கிய குறிப்பு:

மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

❤️👬உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் ❤️👬💐

நன்றி🙏
வாழ்க வள நலமுடன்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More