மிதுன ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
மிதுன ராசி அன்பர்களே
(மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)
குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020 மிதுன ராசி
வாக்கியப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
திருக்கணிதப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
மிதுன ராசி (80%): (யோகா குரு)
கடந்த ஒரு வருடமாக ஆறாமிட குருவினால் பலவிதமான சங்கடங்களை அனுபவித்து இருப்பீர்கள் தொட்ட காரியங்களெல்லாம் துலங்கமால் போயிருக்கும் எதிரி தொந்தரவு கடன் தொந்தரவுகள் வைத்தியச் செலவுகள் பொருட்கள் திருடு போயிருக்கும் ஏமாற்றம் இழப்புகள் சந்தித்த காலம்
இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு பெயர்ச்சியாகி யோக குருவாக வருகிறார் இதனால் பலவிதமான சுப பலன்களை அள்ளி தரவுள்ளார்
குருபகவான் பெயர்ச்சியாகி
🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் லாபஸ்தானம் எனப்படும் 11-ஆம் இடத்தையும்
🌸ஏழாம் பார்வையாக உங்கள் ராசியையும்
🌸9-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு தைரியம் வீரியம் இளைய சகோதர ஸ்தானம் எனப்படும் 3-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்
நிதிநிலை :
உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தை பார்வையிடுவதால் லாபங்கள் அதிகரிக்கும் கிடுகிடுவென பொருளாதார நிலை உண்டாகும் மூலதனத்தில் இருந்த மந்தநிலை முழுவதுமாக மாதிரி சுபிட்சம் உண்டாகும். ஆசைப்பட்ட அனைத்தும் லாபகரமாக முடியும். பொருளாதாரத்தில் தங்குதடையற்ற நிலை உண்டாகும். உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குறுகிய முதலீடுகள் லாபத்தை அளிக்கும். பலவிதமான பாண்டு பத்திரங்கள் மூலம் லாபங்கள் வந்து சேரும் எதிர் பார்த்து இருந்த வங்கி கடன் தொகைகள் கிடைக்கும் காலம்
உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:
இந்த வருடம் உங்களுக்கு வேலையில் மாற்றங்கள் உண்டாகும் அது நீங்கள் விருப்பப்பட்ட புதிய மாற்றமாக இருக்கக்கூடும் எதிர்பாராத வகையில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிட்டும் நாள் புதிய வேலைக்காக நீண்ட நாள் காத்திருந்த வர்களுக்கு வேலைகள் கிடைக்கும் வெளியூர் வெளிநாடு பயணங்கள் அமைய வாய்ப்புகள் படிந்து வரும் அரசு உத்தியோகத்திற்கு நீண்ட நாள் காத்துக் கொண்டிருப்பது கொண்டிருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் அரசுப்பணியில் காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் காலம் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் நன்றாக கிடைக்கும் வியாபாரிகளுக்கு இந்த வருடம் வியாபாரம் நன்றாக இருக்கும் அதிகமான லாபங்களை சந்திக்கும் காலம். தேங்கியிருந்த, இருப்பில் இருந்த சரக்குகள் அனைத்தும் விற்றுத் தீரும் உற்பத்திகள் அதிகரிக்கும் வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டிய காலகட்டம் தொழிற்சாலை விரிவாக்கம் பற்றிய சிந்தனைகள் மேற்கொண்டு உடனுக்குடன் விரிவாக்கம் செய்ய சிறந்த காலம்
திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :
திருமணத்துக்காக காத்துக்கொண்டிருக்கும் மணமகன் மணமகளுக்கு உடனடியாக வரன்கள் முடிவாகி திருமணம் நடந்தேறும் காலமும் மற்றும் உடனடியாக குழந்தை பாக்கியமும் உண்டாகும் காலகட்டம். முதிர்கன்னி களுக்கும் திருமணம் நடக்கும் காலம் குடும்பத்தில் சுப விசேஷங்கள் மற்றும் சுப செலவுகள் அடுத்தடுத்து நடக்கும் காலம்
வீடு வண்டி வாகனம் :
புதிய வீடு வண்டி வாகனம் ஆடை பொன்நகை ஆபரணங்கள் வீட்டுக்குத் தேவையான புதிய பொருட்கள் அனைத்தும் வாங்கும் காலமிது. நீண்ட நாள் கனவுகள் ஆசைகள் நிறைவேறும் காலமிது குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் காலம். இருக்கும் பழைய வாகனத்தை மாற்றி அமைத்துக்கொள்ளும் காலகட்டங்கள். நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் காலகட்டம் வசதியான வீட்டுக்கு மாறும் காலகட்டம். வீடு மனை நிலபுலன்கள் ஆகியவைகளில் முதலீடுகள் செய்யும் காலம்
மாணவ மாணவியர்கள்:
இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை எடுக்கும் காலம் மேலும் விரும்பிய உயர்கல்வி கிடைக்கும் காலம் எனவே கவனமுடன் படிக்க நல்ல நிலையை அடையலாம் உயர்கல்வி படிப்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும் காலம் மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கும் இதுவரை சுமாராக படித்து கொண்டிருந்த மாணவ மாணவிகள் கவனத்துடன் படித்தால் இக்காலகட்டத்தில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். விரும்பிய மேல்நிலைக்கல்வி உயர் கல்விகள் ஆராய்ச்சிகள் வெளிநாட்டு கல்விகள் அமையும் காலம் இது
விவசாயிகளுக்கு:
இந்தாண்டு பணப்பயிர் செய்பவர்களுக்கு அளவிட முடியாத அதிக லாபம் கிடைக்கும் உரிய நேரத்தில் அனைத்து வகையான உதவிகளும் கிடைக்கும் ஏற்கனவே இருந்த பயிர் கடன்கள் அனைத்தும் அடையும் லாபங்கள் மிகமிக அதிகரிக்கும் காலம் புதிய விவசாய நிலங்கள் வாங்கும் வாய்ப்புகள் அமையும் விவசாய நிலத்தை விரிவாக்கம் செய்யும் காலம் எனவே முறையாக பயன்படுத்தி அதிகமான பயனை பெற்றுக்கொள்ளலாம்
பெண்களுக்கு :
கடந்த காலத்தில் நீங்கள் சந்தித்து வந்த அனைத்து பிரச்சனைகளும் மாறும் பணிபுரியும் பெண்கள் நல்ல பதவிகள் பொறுப்புகள் அடையும் காலம் சம்பள உயர்வுகள் கிடைக்கும் விரும்பிய இடமாற்றங்கள் வந்து சேரும் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் தொந்தரவு செய்த அதிகாரிகள் பணிந்து போக வேண்டிய காலகட்டம் நீண்ட காலம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகளை தொந்தரவுகள் நீங்கும் உடலில் இருந்து வந்த அசதி தகவல் உடல்நலக் குறைபாடுகள் அனைத்தும் நீங்கும் சுவாச கோளாறு உள்ளவர்களுக்கு பூரண நலம் பெறும் கால கட்டம்
மற்ற பலன்கள்:
கணவன் அல்லது மனைவியால் யோகங்கள் வந்து சேரும் அவர்கள் மூலம் புதிய வருமானங்கள் வரும்
புதிய புதிய உறவுகள் உண்டாகும்
தொழில் வழியில் கூட்டுத் தொழில் அமையும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும் கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும்
சொந்த பந்தங்களில் ஆதரவுகள் அதிகரிக்கும்
எல்லா வகையான சுபச் செலவுகளும் ஏற்படும் கால கட்டம்
செல்வாக்கு அந்தஸ்து மரியாதை கவுரவம் உயரும் காலம்
ஆசைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேற்றி கொள்ள உகந்த காலம்
எனவே திட்டமிட்டு இந்த வருடத்தில் அனைத்து நலன்களையும் பெற்றுக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும்
பரிகாரம்:
🍥 குருமார்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய சிறப்பு
🍥 குலதெய்வ வழிபாடும் கோயிலுக்கு உண்டான பராமரிப்புச் செலவு மராமத்து செலவுகள் செய்ய சிறப்பு
🍥 திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய சிறப்பு
முக்கிய குறிப்பு:
மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
❤️👬உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் ❤️👬💐
நன்றி🙏
வாழ்க வள நலமுடன்
Comments are closed.