ரிஷப ராசி குருபெயர்ச்சி பலன்கள் 2019
ரிஷப ராசி அன்பர்களே
(கார்த்திகை 2,3,4. ரோகிணி, மிருகசீரிடம் 1,2)
குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020 ரிஷப ராசி
வாக்கியப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி (28.10.2019) திங்கட்கிழமை 54.14 நாழிகை (இரவு 03:52) அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
திருக்கணிதப்படி
குரு பகவான் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் தேதி (04.11.2019) திங்கட்கிழமை (57.56 நாழிகை) விடியற்காலை 05:17 அளவில் குரு பகவான் நேர்கதியில் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார்
ரிஷப ராசி (30%): (அட்டம குரு)
கடந்த ஒரு வருடமாக ஏழாமிட குருவினால் பலவிதமான சுப நிகழ்வுகளையும் நல்ல பலன்களையும் திருமணம் தொழிலில் மேன்மை சுற்றத்தில் நட்பு சுபச்செலவுகள் செல்வாக்கு அந்தஸ்து கௌரவம் மரியாதை நல்ல தொழில்வாய்ப்பு இதையெல்லாம் அனுபவித்து இருப்பீர்கள்
இனி அடுத்து குரு பகவான் உங்கள் ராசிக்கு அட்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகி அட்டம குருவாக வருகிறார் இதனால் சில கடுமையான பலன்களை தரவுள்ளார்
“இன்மை எட்டினில் வாலி பட்டம் இழந்து போம்படி யானது” இது ஜோதிட பழமொழி
எனவே எல்லாவகையிலும் அடுத்த ஒரு வருடத்தில் இழப்பீடுகள் என்பது இருந்து கொண்டே இருக்கும். வாலி பட்டம் இழந்தது குரு எட்டாம் வீட்டிற்கு வந்தபோது ஆகையால் பதவி பட்டங்கள் இழக்க நேரிடும் அட்டம குரு குரு என்பது தொட்டது துலங்காது என்பார்கள்
“கேளப்பா வீட்டுக்கு வேசி கள்ளன் கெடுதியுள்ள மனைவியும் பகை நோயால் கண்டம் ஆளப்பா பகையுடன் பொருள் சேதம் அப்பனே அவமானம் கொள்வான்” – இது புலிப்பாணி சித்தர் பாடல்
இதன் பொருள் உயிர் புகழ் பொருள் இழப்புகள் உண்டாகும் புதிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும் சுபகாரியத் தடைகள் உண்டாகும் விரும்பத்தகாத இடமாற்றங்கள் பிள்ளைகளால் தொந்தரவு ஆகியவை ஏற்படும்
குருபகவான் பெயர்ச்சியாகி
🌸ஐந்தாம் பார்வையாக உங்கள் அயன சயன சுகம் தெய்வீக ஸ்தானம் எனப்படும் 12-ஆம் இடத்தையும்
🌸ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு கல்வி ஸ்தானம் எனப்படும் 2-ஆம் இடத்தையும்
🌸9-ஆம் பார்வையாக உங்கள் ராசிக்கு வீடு வண்டி வாகனம் சுகம் மேற்படிப்பு ஸ்தானம் எனப்படும் 4-ஆம் இடத்தையும் பார்க்க இருக்கிறார்
நிதிநிலை :
உங்கள் தன ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் தனவரவுகள் வந்துகொண்டே இருக்கும் திடீர் திடீர் எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும் பொருளாதார நிலைமை உயரும் பணம் சம்பந்தமாக தேவையற்ற வாக்குறுதிகளை கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம் யூக வணிகம் பங்குசந்தைகள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் பணத்தை கையாள்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலங்கள்
உத்தியோகம்/ தொழில்/ வியாபாரம்:
உத்தியோகம் செய்பவர்கள் இடமாற்றங்கள் செய்யாமல் இருப்பது நல்லது இருக்கும் இடத்தில் பணி சுமைகள் தேவையற்ற தொந்தரவுகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் இருந்தாலும் வேலையில் பாதிப்புகள் உண்டாகாது அலுவலகத்தில் நீண்ட நேரம் உழைக்க வேண்டிய காலகட்டங்கள் ஏற்படும் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் இருந்து கொண்டே இருக்கும் தொழில் வியாபாரம் செய்பவர்கள் இருக்கும் தொழிலை அப்படியே நடத்திக்கொள்ள சிறப்பு அதிகப்படியான கடன்கள் வாங்கி நிறுவனத்தை வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம் உற்பத்தி தொழில் செய்பவர்கள் பொருட்களை சரியான அளவில் உற்பத்தி செய்து விற்க சிறப்பு அதிக முதலீடு செய்து இருப்பு வைத்து விற்பதை தவிர்க்க வேண்டிய காலகட்டம் தேவையில்லாத புதிய பொருட்களை உற்பத்தி செய்வதை அல்லது திட்டங்களை கொஞ்ச காலம் தள்ளி போடுவது சிறப்பு அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கிறவர்கள் புதிய பொருப்பினால் தொந்தரவுகள் ஏற்படும் காலம் எனவே புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாள வேண்டும்
திருமணம் , குடும்ப வாழ்க்கை, குழந்தை பாக்கியம் :
திருமணம் நடந்தேறும் காலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் பலவிதமான இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிய காலகட்டம் சரியான முடிவுகளை எடுத்து கையாள வேண்டியது அவசியம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் சிலருக்கு தள்ளிப்போகும்
வீடு வண்டி வாகனம் :
குருவின் பார்வை நாலாம் இடத்தில் விழுவதால் புதிய வண்டி வாகனம் வீடு வாங்கும் யோகம் வந்து சேரும் இருந்தாலும் மிக மிக கவனமாக ஆராய்ந்து தேவையான அளவில் அல்லது உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் வாங்கிக்கொள்ள சிறப்பு அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய சொத்துக்களை வாங்கும்போது ஒன்றுக்கு இரண்டு முறை ஆராய்ந்து சட்ட வல்லுனர்களின் அறிவுரையின் பேரில் சரியாக முதலீடு செய்ய சிறப்பு அல்லது வாங்க சிறப்பு
மாணவ மாணவியர்கள்:
இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களை எடுக்கும் காலம் மேலும் விரும்பிய உயர்கல்வி கிடைக்கும் காலம் எனவே கவனமுடன் படிக்க நல்ல நிலையை அடையலாம் உயர்கல்வி படிப்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும் காலம் மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கும் இதுவரை சுமாராக படித்து கொண்டிருந்த மாணவ மாணவிகள் கவனத்துடன் படித்தால் இக்காலகட்டத்தில் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்
விவசாயிகளுக்கு:
மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டிய காலகட்டம் இது தேவையற்ற அல்லது சம்பந்தமில்லாத புது வகையான பயிர்களை இட்டு சங்கடத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க சிறப்பு கூட்டுறவு வங்கிகளில் கடன் கிடைப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும் சரியான நேரத்தில் எல்லா இடுபொருள்கள் உரங்கள் கிடைக்கும் என்று சொல்லமுடியாத காலகட்டம் எனவே திட்டமிட்டுப் பயிர் செய்தால் மட்டுமே லாபத்தை ஈட்ட முடியும்
பெண்களுக்கு :
நீண்டநாள் திருமணத்துக்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடந்தேறும் இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வரன் அமையுது கடினமாக இருக்கும் நன்கு விசாரித்து திருமணம் செய்துகொள்ள சிறப்பு இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும் காலம் மர்ம உறுப்புகளில் தொந்தரவுகள் ஏற்படும் கவனமாக சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் வேலைகளில் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும் அலுவலகத்தில் அல்லது பணிபுரியும் இடத்தில் பலவித சங்கடங்களை சந்திக்கும் காலகட்டங்கள்
மற்ற பலன்கள்:
எதிர்பார்த்த படியான திருமணங்கள் அமைவதில் தடை தாமங்கள்
பொருள் இழப்புகள் அடிக்கடி ஏற்படும் எனவே கவனமாக இருக்கவும்
குடும்பத்தில் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு
கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்
எதையும் பலமுறை ஆலோசித்து முடிவெடுப்பது சிறப்பைத்தரும்
பரிகாரம்:
🍥வாரந்தோறும் நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபட சிறப்பு
🍥 யானைக்கு கரும்பு வாங்கிதர சிறப்பு
🍥 சித்தர்கள் சமாதி குருமார்கள் வழிபாடு செய்ய சிறப்பு
🍥 அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகன் வழிபாடு செய்ய சிறப்பு அல்லது தினந்தோறும் காலையில் திருச்செந்தூர் முருகன் போட்டோ வைத்து வழிபாடு செய்ய சில
முக்கிய குறிப்பு:
மேற்சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுவானவையே மற்ற கிரக பெயர்ச்சிகள் ஜனன ஜாதகத்தில் உள்ள தசாபுத்திகள் மற்றும் கிரக சேர்க்கைகள் பொருத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படும் ஆகையால் புதிய முயற்சிகள் அல்லது முடிவுகள் எடுக்கும் பொழுது அருகில் உள்ள ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு கொண்டு தெளிவான முடிவுகளை எடுத்து முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
❤️👬உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும் ❤️👬💐
நன்றி🙏
வாழ்க வள நலமுடன்
Comments are closed.