விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி
இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 10 ஆம் இடத்தில் ராகுவும் 4 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்
வரும் குரு பெயர்ச்சி வரை உங்கள் 7-ஆம் இடம் 9-ஆம் இடம் 11-ஆம் இடம் பார்வையிடுவதால் லாபங்கள் அதிகரிக்கும்
உங்கள் தொழில் ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் தடை தாமதங்கள் தொந்தரவுகள் உண்டாகும் வரும் சனிப்பெயர்ச்சி வரை தொழிலை விரிவாக்கம் செய்வது மாற்றுவதே புதிய தொழிலை தேர்ந்தெடுப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டிய காலம்
நீண்டகால நிறைவேறாத ஆசைகள் எல்லாம் நிறைவேறும் புதிய பொன் நகை ஆபரணங்கள் வீடு கட்டிய வீடு மராமத்து வேலைகள் நடைபெறும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் காலம்.
திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடந்தேறும் காலம் குழந்தை பாக்கியம் உண்டாகும் நீண்ட காலமாக பெண்கள் தாய்மை அடையாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் காலம் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் நோய்கள் சரியாகும் உடல் நலன்கள் சீராகும். ஆன்மீக சம்பந்தமான தூர பயணங்கள் உல்லாசப் பயணங்கள் அமையும்
மாணவ மாணவியருக்கு உயர் கல்வி படிப்பு விரும்பிய வகையில் அமையும் படிப்புக்கு தேவையான ஸ்காலர்ஷிப் உதவித்தொகைகள் வங்கி கடன் இவைகள் எல்லாம் கிடைக்கும். இந்த வருடம் பொதுத் தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் விரும்பிய மேல்படிப்பு அமையும்
நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு தொழில் வழியில் இருந்த சுனக்கம் எல்லாம் மாறும் தொழில் சுறுசுறுப்பு அடையும் வியாபாரம் விரிவாக்கம் புதிய தொழில் ஆரம்பிப்பது புதிய வேலை வாய்ப்புகள் எல்லாம் நல்லபடியாக அமையும்.
யூகவணிகம் பங்குச்சந்தை இவைகளில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும்.கௌரவப் பதவிகள் வந்து சேரும்
தண்டச் செலவுகள் குறைந்து சுப செலவுகள் அதிகரிக்கும் மறைமுகமாக இருந்த வந்த எதிரி தொந்தரவுகள் அனைத்தும் மாறும் புதிய வீடு வண்டி வாகனம் வாங்கும் செலவுகள் உண்டாகும்
ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலம் லாபங்கள் குறையும் பண நெருக்கடிகள் உண்டாகும். வாக்கு கொடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். புது தொழில் செய்வது விரிவாக்கம் செய்வது வேலை மாற்றம் செய்வது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். பணிச்சுமை அதிகரிக்கும்
குடும்பத்தில்சண்டை சச்சரவுகள் குழப்பங்கள் பிரிவினைகள் ஏற்படும். வாய் தகராறுகள் ஏற்படும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்
பத்தாவது வரை படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும் கவனம் குறையும் மந்தம் ஏற்படும் மதிப்பெண்களும் குறையும் பொது தேர்வு எழுதுவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம் இது
பரிகாரம்
திருச்செந்தூர் முருகன் வழிபாடு வியாழக்கிழமை செய்வது சிறப்பு
சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு
அனுமன் வழிபாடும் துர்க்கை அம்மன் வழிபாடு சிறப்பை தரும்
சனிக்கிழமை குரு வழிபாடும் வியாழக்கிழமையில் பெருமாள் வழிபாடு செய்ய சிறப்பு
ஊனமுற்றோருக்கு உதவி செய்ய சிறப்பு
மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்
எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு
❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்