விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் கடக ராசி
இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் பன்னிரண்டா மிடத்திலும் ராகுவும் 6ல் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்
தற்பொழுது உங்களுக்கு ஒரு பொற்காலம் தான். கடன்கள் தீரும் காலம் உடல்நலனில் இருந்த பிரச்சனைகள் தீரும் தண்டச் செலவுகள் வெட்டி செலவுகள் குறையும் காலம் முயற்சிகள் சிறிய சுனக்கத்துடன் இருந்தாலும் வெற்றி பெறும் எழுத்து ஒப்பந்தங்கள் வெற்றி பெறும். எதிரி தொந்தரவுகள் கடன் தொந்தரவுகள் முற்றிலுமாக குறையும். லாப வரவுகள் அதிகமாக இருக்கும் ஆசைப்பட்ட அனைத்து நடக்கும் காலம் சுபிட்சமும் ஏற்படும் தூர பயணங்கள் அடிக்கடி பயணங்கள் புண்ணிய ஸ்தல பயணங்கள் ஏற்படும் உடலில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும் ஆரோக்கியங்கள் மேன்மையடையும் தந்தை வழியில் இருந்த தொல்லைகள் மறையும் அவரின் உடல் நிலையும் சிறப்படையும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிட்டும். திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிட்டும் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்
வியாபாரம் தொழில் உத்தியோகம் சுமூகமாக நடந்து கொண்டிருக்கும். தொழில் வியாபாரத்தில் தேக்கம் குறையும் விஸ்தரிப்பு புதிய தொழிலில் ஆரம்பித்தல் அறிவை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்
மாணவ மாணவியர்கள் உயர்கல்விக்கு பட்டதாரி மாணவர்களுக்கும் விரும்பிய இடம் கிடைக்கும் விருப்பப்பட்ட கல்வி கிடைக்கும். பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிட்டும் காலம்.
நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு அனைத்திலும் வெற்றி பெற காலம் கடன்களை அடைக்கும். சுபச் செலவுகள் ஏற்படும் திருமணம் நடந்தேறும் தன வரவுகள் தாராளமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்
புதிய வேலைவாய்ப்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அனைத்தும் நடக்கும் காலம். வேலையில் இடமாற்றம் உண்டாகும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிட்டும் காலம். இல்லாம இனிதாக நடக்கும் காலம்
ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு கண்டகச் சனியாக வருவதால் குடும்பத்தில் சண்டைசச்சரவு பிரிவினை ஏற்பட வாய்ப்புண்டு. வெகு நாட்களாக டைவர்ஸ் கேட்டு கொண்டிருந்தவர்களுக்கு இப்பொழுது கிடைக்கும். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலம். உடல்நலனில் கவனம் தேவை அடிக்கடி டென்ஷன் ஆவது தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தும் காலம்.
தொழில் வியாபாரம் உத்தியோகத்தில் மாற்றங்கள் உண்டாகும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு செயல்பட சிறப்பு.தொழில் விரிவாக்கம் செய்வது அதிக முதலீடு செய்வது புதிய பணியாட்களை சேர்க்கவே ஆகியவற்றில் கவனத்துடன் செயல்பட வேண்டும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. கணவன்/மனைவியின் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டிய காலம்.
வீடு மாற்றங்கள் வீட்டில் மராமத்து வேலைகள் வீட்டை விஸ்தரிப்பது போன்றவை நடக்கும்.
அடுத்த இரண்டரை வருடத்திற்கு நிலம் வீடு விற்பனையாவது இழுபறி நிலை ஏற்படும்.
வெளிநாடு பயணங்கள் உண்டாகும்.
பரிகாரம்
குலதெய்வ தெய்வ வழிபாடு அவசியம்
சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு
வாராகி/ காளி/துர்கை அம்மன் வழிபாடு சிறப்பைத்தரும்
வியாழன்தோறும் உப்பில்லாமல்
கொண்டைகடலை வேகவைத்து தானம் செய்ய சிறப்பு
சனிக்கிழமையில் உளுந்து வேகவைத்து சாப்பிட சிறப்பு
மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்
எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு
❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்