செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019
செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் (Mars transit prediction -7th May 2019 to 22 June 2019)
(மே மாதம் ஏழாம் தேதி முதல்
ஜீன் 22 ந்தேதி வரை சுமார் 45 நாட்களுக்கு)
மே மாதம் ஏழாம் தேதி முதல் செவ்வாய் மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகி ராகுவுடன் இணைந்து சனி,கேதுவால் பார்க்கப்பட்டு
பாவத்தன்மை அடைகிறார்.
இதனால் நாட்டிற்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும்?
இந்த ஒட்டுமொத்த பாவக்கிரகங்களும் மிதுன,தனுசு ராசியை கடுமையாக பாதிக்கிறது. இதன் மூலமாக சிறுவயது குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
என்ன மாதிரியான பாதிப்பு?
குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்கொடுமைகள் என குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். இது எல்லோருக்குமா?அப்படினா இல்லை. ஒருவரின்சுய ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் ராகு , சனி போன்ற பாவிகள் அமர்ந்து பாவத்தன்மை அடைந்து, ஐந்தாமிடத்ததிபதி 6,8,12 ல் அமர, புத்திர காரகன் குரு பகை, நீசம், பெற்று இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும்.
அதேபோல அந்த குழந்தைகளின் ஜாதகத்தில் லக்கனாதிபதி கடுமையாக பாதிக்கப்பட்டு, சுக்கிரன், ஏழாம் அதிபதி
இரண்டு பாவிகளால் பாதிக்கப்படும் நிலையில் சுக்கிர புக்தி, சுக்கிர தசை, சுக்கிரன் அந்தரம் இந்த காலங்களில், ஏழரைச்சனி, அஷ்டம சனி இணைந்து நடக்கும் காலங்களில் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஆட்சி மாற்றம் உலகளவில் உண்டு.. ஆளும் கட்சிக்கு பின்னடைவுகளும்,எதிர்கட்சிகளுக்கு பலம் கூடுதலும் உலகளவில் ஏற்படும். ஆளும் கட்சிகள் தன்னுடைய ஆட்சியை பதவிகளை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள்.. மக்கள் நலன் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
அடுத்ததாக உலக அளவில், தேசிய அளவில், புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவருக்கும், பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் மரண கண்டம் உண்டு.
அதற்கு காரணம் மிதுனத்தில் ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற பாவக்கிரகங்கள் தொடர்பே ஆகும். சனியின் பார்வை கன்னிக்கும் இருப்பதே காரணமாகும்.
மதக்கலவரங்கள் ஜாதிக்கலவரங்கள் உலகம் முழுமைக்கும் ஏற்படும். ஒவ்வொருவரும் தன் மதமே பெரிசு என்று வாதிடுவார்கள். திடீரென மதப்பற்று, ஜாதிப்பற்று, இனப்பற்று மேலோங்கி ஜாதி,இன, மதத்தின் பெயரால் ஒருத்தரை ஒருத்தர் அடித்து கொள்வார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் குருவின் வீடான தனுசு ராசிக்கு நான்கு ஐந்து பாவக்கிரகங்களின் தொடர்புகளே காரணம்.
குருவின் வீடு கெட்டு போயிருப்பதால் குரு வக்ரம் பெற்று இருப்பதால் ஆலயங்களின் மீது தாக்குதல் தொடுப்பார்கள். ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெறும்.. பகுத்தறிவு அதிகமாகி நாத்திகம் பேசுவார்கள்.
செவ்வாய் மிக மோசமாக கெடுவதால்
முருகன் சிலை திருட்டு, பழனி, திருச்செந்தூர், வைத்தீஸ்வரன் கோவில், அறுபடை வீடுகள் போன்ற முருகப்பெருமானின் ஆலயங்களில் தீவிபத்துக்களும், ஏதாவது கலவரங்களும் ஏற்பட மிக அதிக வாய்ப்புகள் ஏற்படும் தெரிகிறது. சிலை மோசடி, சிலை கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தால் தண்டிக்க படுவர்..
தீவிரவாத தாக்குதல்கள் ஏற்பட்டு பின் மிக திறமையாக தீவிரவாதம் முறியடிக்கப்படும். தீவிரவாதிகள் கொல்லப்படுவார்கள். உலகம் முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடக்கும். தீவிரவாதம் இந்த காலங்களில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். ஆன்மிகம் , ஆன்மிக வாதிகளுக்கு இது நல்ல காலம் இல்லை.
குரு வக்ரம், சனி வக்ரம் என்ற அமைப்பு இருப்பதால் உலகில் அதிகமாக காற்றால் சேதமாகும்.அதற்கு காரணம் காற்று ராசியில் பாவக்கிரகங்கள் அதிகமாக சம்பந்தப்படுவதால். ஏர் விமானங்கள் பாதிக்கப்படும்.காற்றின் மூலமாக நோய் தொற்றுக்கள் ஏற்படும். முக்கியமாக மூச்சு பிரச்னைகள் மக்களுக்கு அதிகமாக இருக்கும். காற்று அதிகமாக மாசுபடும்.
அதேபோல கோவில்களில் பண்டிகை யின் போது கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மரணமடையக்கூடும். காவலாளிகள், செக்யூரிட்டிகள், போலீஸ், ராணுவம், காவல்துறை போன்ற பொறுப்பில் உள்ள
ஒ,வ,வி,உ,வா,வீ,க,கா,கி,கு, பூ,த,ப,ட ,எ,ஏ
போன்ற எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கடுமையான மன அழுத்தங்கள் இருக்கும். பணியில் மிக அதிகமான டார்ச்சர் இருக்கும். வேலையில் மிக கவனமாக இருக்க வேண்டும். இவர்களுக்கு கெட்ட பெயர்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலே குறிப்பிட்ட பெயரின் முதல் எழுத்துக்களை கொண்ட நாடுகளில் , மாநிலங்களில், ஊர்களில் புயல், காற்று, தீவிபத்துக்கள் , தீவிரவாதம் அச்சுறுத்தல், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களால் சேதங்கள் ஏற்படும் ( ஒ,வ,வி,உ,வா, ,கீ,கி,,க,கா,சி,கு,பூ,த,ப,ட,எ,ஏ)
பரிகாரம் கால பைரவர் வழிபாடு,
ஆஞ்சநேயர் வழிபாடு,
துர்க்கை அம்மன் வழிபாடு
(கூட்டு பிரார்த்தனை மூலமாக வரக்கூடிய எல்லா பிரச்னைகளையும் தவிர்க்க முடியும்)
Comments are closed.