மீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020
விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் மீன ராசி
இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் 9 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 5 ஆம் இடத்தில் ராகுவும் 10 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்
தற்போது உங்களுக்கு குரு மிகுந்த சாதகமாக இருந்து கொண்டுள்ளார் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் காலம் உடல்நலம் பரிபூரணமாக நன்றாக இருக்கும் உங்கள் சிந்தனைகள் அனைத்தும் நிறைவேறும் காலம் புத்திர பாக்கியம் கிடைக்கும் நீண்டகாலம் குழந்தை பாக்கியத்திற்கு தவம் இருந்தவர்களுக்கு இக்காலகட்டத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும் இளைய சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு இரக்கம் உதவி ஆதாயங்கள் ஏற்படும் காலகட்டங்கள் அடிக்கடி குறுகிய தூர பயணங்கள் நன்மையை உண்டாக்கும் பூர்வீகத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நிறைவேறும் சரியாகும் காலம். குலதெய்வக் கோயில் மராமத்து பணிகளை செய்யும் காலம். பூர்வீகத்தில் கவுரமும் பதவியும் கிடைக்கும். தந்தைக்கு நல்ல சிறப்பான காலம் தந்தை மூலம் நல்ல வரவும் உண்டாகும் இணக்கமும் உண்டாகும் ஆதாயமும் கிட்டும்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலமே உத்தியோகஸ்தர்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரிய வாய்ப்புகள் ஏற்படும் வெளிநாடு பயணங்கள் தூரதேச பயணங்கள் புனித பயணங்கள் ஏற்படும் காலகட்டம்.
நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு தனவரவுகள் அதிகமாக உண்டாகும். புதிய வீடு வண்டி வாகனம் வாங்க ஏற்ற காலம். கடன்கள் பெருமளவில் அடையும். சுப பலன்களை அனுபவிக்கும் காலம். பிரிந்திருந்த கணவன்-மனைவி சேரும் காலம் குடும்பத்தில் இருந்து வந்த பல பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும்.கணவன் மனைவி ஒற்றுமை அந்நியோன்யம் ஓங்கும் காலம். எதிரிகள் காணாமல் போவார்கள். உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வெற்றிகள் வந்து சேரும்.
ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு சனி பகவான் ராசியையும் ஐந்தாம் இடத்தையும் 8-ஆம் இடத்தையும் பார்ப்பதால் சோம்பேறித்தனம் அதிகரிக்கும் உடல் நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும் உடல் நலக்குறைவு அடிக்கடி ஏற்படும் மன பயம் பீதி இவைகள் தொற்றிக் கொள்ளும். குழந்தை பாக்கியம் தாமதப்படும் மன சுகம் கெடும். அறுவைச் சிகிச்சை ஏற்படும் கால கட்டம்.
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறையும் உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு ஊதிய உயர்வு இடமாற்றம் பதவி உயர்வு இவைகள் அமைவதில் தடை தாமதங்கள் ஏற்படும். ஆசை அபிலாசைகள் நிறைவேற்றுவதில் தடங்கல்கள் இருந்துகொண்டே இருக்கும். எடுத்த முயற்சிகள் உடனுக்குடன் முடிவு அதில் தடை தாமதங்கள் உண்டாகும் தொந்தரவுகள் பல வழிகளில் வந்து சேரும்
மாணவ மாணவியர்கள் பொதுத்தேர்வில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய காலகட்டம் விரும்பிய படிப்பு கல்லூரி அமைவதில் சிக்கல்கள் ஏற்படும்
பரிகாரம்
சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு
ஒருமுறை திருச்செந்தூர் சென்று வழிபட்டு வர சிறப்பு அங்கு மூன்று சந்நியாசிகளுக்கு காவி வேட்டி துண்டு வாங்கி தர சிறப்பு
ஏழை எளியவர்களுக்கு ஊனமுற்றவர் விதவைகளுக்கு வஸ்திர தானம் செய்ய சிறப்பு
மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்
எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு
❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்
Comments are closed.