மே மாத ராசி பலன்கள் 2020

மேஷ ராசி மே மாத பலன்கள் 2020

எப்பொழுதும் துறுதுறுவென சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் செவ்வாய் பகவானை ராசிநாதனாக கொண்ட மேஷ ராசி அன்பர்களே ! உங்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக அமைய இருக்கிறது.

உங்களுக்கு ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் உச்சம் பெற்று இருப்பதோடு, ராசிக்கு யோகரான குருபகவான் உடன் இணைந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் அமர்ந்து குருபகவான் நீசபங்கம் அடைந்துள்ளார்.

மேலும் உங்களது ராசியிலேயே இலக்கன யோகரான ஐந்தாம் இட அதிபதியான சூரியன் பகவான் உச்சம் பெற்று இருந்தாலும், மேஷ ராசிக்கு பாவியான

3, 6 -க்குடைய புதன் பகவானுடன் இணைந்து இருப்பதாலும் இதுவரை தாங்கள் மேற்கொண்ட தொழிலில் சுணக்கம் அடைந்து இருப்பீர்கள்.

மேஷ ராசி அன்பர்கள் மே மாதம் 4 ந் தேதிக்கு பிறகு தொழில் சுணக்கத்தில் இருந்து விடுபடுவீர்கள்.ஏனெனில் மே மாதம் 3 -ந் தேதி சுக்கிரன் மிதுன வீட்டிற்கும் மற்றும் மே மாதம் நாலாம் தேதி அதாவது சித்திரை 21 ஆம் தேதி மேஷத்தில் கடந்த ஒரு மாதமாக இருந்த புதன் பகவான் ரிஷப வீட்டிற்கு இடப் பெயர்ச்சி அடைகிறார்.

இக்காலகட்டத்தில் இரண்டு ,மூன்று கூடியவர்கள் சுக்கிரனும், புதனும் பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் தன ஸ்தானத்தை நீசபங்க பெற்ற குரு பகவான் பார்வை பெறுவதாலும் நீங்கள் மேற்கொண்ட தொழிலில் வளர்ச்சி அடைவீர்கள்.

மேலும் இரண்டு மற்றும் மூன்றுக்கு உடைய சுக்கிரனும், புதனும் பரிவர்த்தனையும் தன ஸ்தானத்தை குருபகவான் பார்வை பெறுவதாலும் இதுவரை பணப் புழக்கத்தில் மந்தநிலை சந்தித்த நீங்கள் நிறைய பணப்புழக்கம் உங்கள் ✋ கைகளில் தவழும்.

திருமண வயதில் காத்துக் கொண்டிருக்க கூடிய இளைஞர்கள்/ இளைஞிகள் உங்கள் ராசிநாதனுக்கு இரண்டாம் இடத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் மே 3ஆம் தேதி வரை ஆட்சியில் இருக்கிறார் .

மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு மறைவிட ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு சென்று மறைந்து,

கரும்பாம்பு என்று அழைக்கப்படக்கூடிய ராகுவுடன் இணைந்து சனி மற்றும் கேது பகவானுடைய சம சப்தம பார்வையை பெறுவதால் புதிதாக திருமண முயற்சிகள் இந்த மே மாதத்தில் செய்யவேண்டாம்.

உங்கள் ராசிநாதனுக்கு வாக்கு அதிபதியான சுக்கிரன் மூன்றாம் இடத்தில் மறைந்து ராகு கேது பிடியில் மாட்டிக் கொண்டிருப்பதாலும் ,

சனியின் பார்வையைப் பெறுவதாலும் படிக்கக்கூடிய வயதில் உள்ளவர்களுக்கு இந்த மாதம் கல்வியில் தடையை உண்டாக்க கூடிய மாதமாக உள்ளது.

உங்கள் ராசி நாதனுக்கு பூர்வீக ஸ்தானாதிபதியான சூரியன் பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்றிருப்பதால் பூர்வீகச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் உங்களுக்கு விலகும். புத்திரர்களால் ஆதரவு கிடைக்கும்

ராசிக்கு ருண, ரோக அதிபதியான புதன் பகவான் தற்பொழுது லக்னத்தில் இருந்தாலும் மே மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு ரிஷப வீட்டிற்கு செல்வதால் எதிரி வகையில் சொத்து வந்து சேரும்.

தந்தைக்குக் காரகன் சூரியன் பகவான் ராசியிலே உச்சம் பெற்று இருப்பதால் தந்தை வழி ஆதரவு கிடைக்கும்.

பாக்கிய ஸ்தானமான 9-ஆம் இடத்தில் நிலவி வரும் சனி, கேது உங்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகம் உண்டாக்கும். இந்த மாதத்தில் பிறருக்கு ஏதாவது ஒரு உதவி செய்யக்கூடிய மனநிலையை பெற்றிருப்பீர்கள்.

மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு மகர வீட்டில் உச்சம் பெற்றிருக்கும் செவ்வாய் பகவான் லாப ஸ்தானமான 11-ஆம் இடத்திற்கு செல்வதால் பூமி போன்ற விஷயங்களில் லாபங்கள் உண்டாகும்.

இதுவரை கிடைக்கும் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு சொத்து வரவு இந்த மாதத்தில் உங்களுக்கு உண்டாகும்.

மே மாதம் 8, 9 ஆம் தேதிகளில் சந்திராஷ்டமம் நிலவுவதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள், ஏதாவது கொடுக்கல் -வாங்கல் போன்ற விஷயங்களில் ஈடுட வேண்டாம்.

இந்த மாதத்தில் நீங்கள் நினைத்தது செவ்வனே நடைபெற திருச்செந்தூரில் அருள்பாலிக்க கூடிய முருகப்பெருமானை தரிசிக்க விமோசனம் உண்டாகும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: