மேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020

6,314

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் மேஷ ராசி

இந்த வருடம் உடல்நல, மனநல ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்

புதிய தொழில் /வியாபாரம் ஆரம்பிப்பது/ விஸ்தரிப்பது/ முதலீடு செய்வது ஆகியவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம். இருக்கும் தொழிலை அப்படியே இந்த வருடம் முழுவதும் நகர்த்திச் செல்வது சிறப்பு. குறிப்பாக கடன் வாங்கி முதலீடு செய்ய நினைப்பது பெரிய இழப்பை தரும்
.கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும் நீண்ட கால கடன் கொடுப்பதை தவிர்க்கலாம். தொழில் நிமித்தமாக யாருக்கும் ஜாமீன் போடுவது முன்கூட்டியே காசோலை தருவதை தவிர்ப்பது நல்லது. பங்குச்சந்தை யூகவணிகம் தவிர்ப்பது நல்லது

உத்தியோகம் செய்பவர்கள் இருக்கும் வேலையை தக்க வைப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும் மேலதிகாரிகள் சக ஊழியர்களின் தொந்தரவுகள் பிரச்சனைகள் ஏற்படும் மிக முக்கியமாக பெண் சகஊழியர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இருக்கும் அலுவலகத்தில் வேலை இடமாற்றம் ஏற்பட்டால் மாறிவிடுவது சிறப்பு

தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை

திருமணப் பேச்சு வார்த்தைகள் தடைபடும்

உங்கள் உடல் நலனிலும் கவனம் தேவை உடனுக்குடன் தகுந்த மருத்துவத்தை மேற்கொள்வது சிறப்பு

சேமிப்பு சீட்டு/ ஏலச்சீட்டு / சேமிப்பு சம்பந்தமான தொழில் செய்பவர்கள் மிகவும் கண்டிப்புடன் நாணயத்துடன் செயல்பட வேண்டும்

மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் மதிப்பெண்ணில் குறைவுகள் உண்டாகும் விரும்பிய படிப்புகள் அமைவதில் தடை தாமதங்கள் / தடைகள் ஏற்படும். மேல் படிப்புகள் தடைகளை உண்டாக்கும் காலம்

நவம்பர் 5ஆம் தேதிக்கு பிறகு குரு பகவான் உங்கள் ஒன்பதாம் இடத்திற்கு வந்து ராசியை பார்வையிடுவதால் பலவிதமான சுப பலன்கள் நடக்கத் தொடங்கும்

திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் முடிவாகும்.

திருமணமாகி குழந்தை பாக்கியம் தள்ளிப் போனவர்களுக்கு மருத்துவத்தின் மூலம் புத்திர பாக்கியம் கிட்டும்

குரு பகவான் பெயர்ச்சிக்கு பிறகு தொழில் அல்லது வியாபாரத்தை விஸ்தரிப்பது புதிய முதலீடுகளை செய்வது புதிய தொழில் தொடங்குவது வேலை இடம் மாற்றம் புதிய தொழிலுக்கு இடமாற்றம் வெளிநாடு வேலை வாய்ப்புகள் அமையும்

தந்தையுடன் அடிக்கடி மன கசப்புகள் உண்டாகும்

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவும்

2020 ஜனவரி மாதம் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு தொழிலில்/வியாபாரத்தில்/ உத்தியோகத்தில் பலவித மாற்றங்கள் உண்டாகும் நல்ல முன்னேற்றம் கிட்டும்

பண வரவுகள் மிக குறைவாகவே வந்து கொண்டிருக்கும்

பரிகாரம்

குலதெய்வத்துக்கு வைகாசி மாதத்தில் பொங்கல் படையலிட்டு வழிபட சிறப்பு

வியாழக்கிழமைதோறும் நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கிட்டு வழிபட சிறப்பு

சனிக்கிழமை தோறும் நவகிரகத்தில் உள்ள சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு

தினந்தோறும் அதிகாலையில் விநாயகர் மற்றும் சூரிய பகவான் வழிபாடு செய்ய வேண்டும்

மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்

எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு

❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்

விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் 2019

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More