தனுசு ராசி மே மாத பலன்கள் 2020
தெய்வீக குணமும், தாராள தன்மையும் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
குருபகவானை ராசிநாதனாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!
உங்கள் ராசி மற்றும் சுகாதிபதியான குரு பகவான் இரண்டாம் இடத்தில் நீசம் பெற்று மே மாதம் மூன்றாம் தேதி வரை உச்ச செவ்வாயின் இணைவதால் நீசபங்கம் அடைந்து ஏழாமிடத்தில் ஆட்சி பெற்ற சுக்கிர பகவானை குரு பகவான் பார்வை செய்வதால் இல்லற வாழ்வில் சுமுகமான சூழலே உங்களுக்கு நடந்து வந்தது.
மே 3 க்கு பிறகு குருபகவானின் நீச பங்கம் செய்த செவ்வாய் பகவான் கும்ப வீட்டுக்கு செல்வதாலும், ராசிக்கு ஏழாம் இடத்தில் வசித்து வந்த சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானமான மிதுன வீட்டிற்கு செல்வதாலும் மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு இந்த மாதம் முழுவதும் இல்லற வாழ்வில் ஈடுபட கூடிய தம்பதிகளுக்கு இடையே சிறு சில சஞ்சலங்களும் மன கஷ்டங்களும் உருவாகும் புதிதாக திருமண முயற்சி செய்பவர்களுக்கு ராசியில் சனி+ கேது. இணைந்து களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தில் ராகு +சுக்கிரன் இணைவு பெற்றிருப்பதாலும் திருமண தடை உருவாகும்.
தனுசு ராசிக்கு 9 மற்றும் 10-க்குடைய சூரிய பகவானும் , புதன் பகவானும் திரிகோண ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் உச்சம் பெற்று புத ஆதித்ய யோகம் மே 3 ந் தேதி வரை திகழ்வதால் படிப்பில் ஈடுபடும் இளைஞர்களுக்கு சிறப்பாக அமைந்து மே மாதம் 4-ந் தேதி மறைவிட ஸ்தானமான ஆறாம் இடத்தில் மறைந்தால் 4ஆம் தேதியில் இருந்து மாத வரை கல்வி மற்றும் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு ஒரு தடை காலமாக இந்த மாதம் அமைகிறது.
Comments are closed.