சரியான தூண்டுகோல் இருப்பின் குடத்திலிட்ட விளக்கு போல் பிரகாசிக்கக் கூடிய கும்ப ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதனாகிய சனிபகவான் லாப ஸ்தானமான குரு வீட்டில் கேது பகவான் உடன் இணைந்து இருப்பதால் இந்த மாதம் முழுவதும் நடக்க கூடிய விஷயங்களை முன்னரே யூகித்து அறியும் (intution) திறனை பெற்று அதன்படி நடந்து வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-மற்றும் 10 -க்குடைய செவ்வாய் பகவான் மே மாதம் 2-ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்து நின்று மே 3ஆம் தேதி உங்கள் ராசிக்கே வந்து கேதுவுடன் இணைந்த சனிபகவான் பார்வையை பெறுவதால் முன்னேற்றத்தில் சுணக்கம் ஏற்படலாம்.
உங்கள் ராசிக்கு தன லாபாதிபதியான குரு பகவான் 12ம் இடத்தில் மறைந்திருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு பொருளாதார மந்தநிலை ஏற்படலாம்.
உங்கள் ராசிநாதனாகிய ஏழுக்குடைய சூரிய பகவான் உச்சம் பெற்று கீர்த்தி புகழ் ஸ்தானமான மூன்றாமிடத்தில் இருப்பதால் மனைவி வழியில் அன்பும் ஆதரவும் கிட்டும்.
உங்கள் ராசிக்கு யோகரான புதன் பகவான் நாலாம் தேதி ரிஷப வீட்டுக்கு இடப் பெயர்ச்சி அடைந்து நீசம் பெற்ற குரு பகவான் பார்வை பெறுவதால் நீங்கள் செய்கின்ற வித்தையில் மேன்மை அடைவீர்கள்.
மே 3ஆம் தேதி ரிஷபத்தில் இருந்த சுக்கிர பகவான் மிதுன வீட்டிற்கு இடப் பெயர்ச்சி பெற்று ராகு பகவான் உடன் இணைந்து இருப்பதாலும், குடும்பாதிபதியான குரு பகவான் நீசம் பெற்று பன்னிரண்டாம் இடத்தில் மறைந்திருப்பதாலும் இல்லற வாழ்வில் பெரிய எதிர்பார்ப்பு இன்றி இருக்க பழகுங்கள். எதிர்பார்த்தால் இந்த மாதம் ஏமாற்றம் அடைவீர்கள்.
இந்த மாதம் 30 மற்றும் 31ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் அந்நாட்களில் வெளியூர் பயணம், புதிய முயற்சிகள் மற்றும் சுப காரியங்களில் ஈடுபடாதீர்கள்.
உங்களது இன்னல்களைப் போக்க இந்த மாதம் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட பிரச்சினைகள் தீரும்.