மிதுனம் ராசி மே மாத பலன்கள் 2020
எதையும் நேர்த்தியாகவும் மற்றும் சுலபமாகவும் செய்ய விரும்பும் மிதுன ராசி அன்பர்களே!
ராசிக்கு கீர்த்தி புகழ் மற்றும் அந்தஸ்து தரக்கூடிய மூன்றாம் இடத்துக்குரிய சூரிய பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் இருந்து உச்சம் பெறுவதால் இந்த மாதம் உங்களுடைய புகழ், கீர்த்தி மற்றும் அந்தஸ்து உயரும்.
மே மூன்றாம் தேதி வரை உங்கள் ராசிக்கு யோகரான சுக்கிர பகவான் 12ம் இடத்தில் ஆட்சிபெற்று அயல்நாட்டு சுகத்தை தந்த களத்திர மற்றும் கலைக்காரகன் என்று சொல்லக்கூடிய சுக்கிர பகவான் மே- 3ஆம் தேதி வீர ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இல்லற வாழ்வில் ஏற்படக்கூடிய தம்பதிகளுக்கு இடையே பிணக்குகள் பிரச்சினைகள் மற்றும் மன சஞ்சலங்கள் உருவாகும் .புதிதாக திருமணம் முயற்சியில் ஈடுபடும் உங்களுக்கு இந்த மாதம் தடைபட்டுக் கொண்டே இருக்கும் என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் திருமணம் முயற்சிக்கு உகந்த காலம் அல்ல.
புதிதாக வீடு கட்ட முயற்சிக்கும் மிதுன ராசி அன்பர்களே உங்களுக்கு நான்காமிடம் புதன் பகவான் மே மாதம் நாலாம் தேதி பிறகு ரிஷப வீட்டுக்கு இடப்பெயர்ச்சி செய்கிறார்.நான்காம் இட அதிபதி மறைவிடம் சென்று , பூமிகாரகன் செவ்வாய் ராசிக்கு 8-ல் உச்சம் பெற்றிருந்தாலும் மறைந்திருப்பதால் மே 24க்கு பிறகு வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடலாம். மே 24 ஆம் தேதி மிதுன விட்டிருக்கு புதன் பகவான் இடம்பெயர்ந்து செல்வதால் நாலுக்குரியவரும் பலமடையும், பூமிகாரகன் செவ்வாய் பகவான் மே மூன்றாம் தேதி ராசிக்கு திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் புகும் தருணத்தில் பலம் பெற்றிருப்பதால் புதிதாக வீடு கட்டலாம்.
உங்கள் ராசியிலேயே கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு பகவான் அமர்ந்து, உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சனி கேதுவுடன் இணைந்து சம சப்தம பார்வையை பெறுவதாலும், ராசிநாதன் புதன்
மே மாதம் நாலாம் தேதி ரிஷப வீட்டுக்கு வர இருப்பதால் உடல்நலனில் சில பிணி, பீடைகள் மற்றும் சோம்பேறித்தனம் நிலவும் .இதனை போக்க ஆன்மீகப் பயிற்சிகள் தியானம் மற்றும் யோகா போன்ற செய்து இது போன்ற பிரச்சனையை எதிர்த்து விடுபடுங்கள்.
இந்த மாதம் முழுவதும் கல்வியறிவுக்கு காரகரான குருவும், புதனும் மறைந்திருந்து நீசபங்கம் பெற்ற குரு பகவான் பார்வை செய்வதால் வீட்டில் இருந்தபடியே கல்வி முயற்சியில் ஈடுபடலாம். சில நேரங்களில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் படிக்கும் வாய்ப்பு உருவாகலாம்.
மே 13 ,14 உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் இது போன்ற நாட்களில் சுப விஷயங்களில் ஈடுபடல், தன் புதிய முயற்சி செய்தல், வெளியூர் பயணம் அவற்றை தவிர்த்துக் கொள்வது நல்லது.
உங்கள் ராசிக்கு ஏற்படும் இன்னல்களை விலக புதன்கிழமை தோறும் விஷ்ணு வழிபாடு செய்யலாம்.
Comments are closed.