ரிஷப ராசி மே மாத பலன்கள் 2020
எதையும் கலை ரசனையோடு ரசித்துப் பார்க்கும் ரிஷபராசி அன்பர்களே!
உங்களுக்கு இந்த மாதம் மே 2 ஆம் தேதி வரை உங்கள் ராசியிலேயே ஆட்சி பெற்று இருந்த சுக்கிரன் பகவான் மே 3 ஆம் தேதி மிதுன வீட்டுக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டில் களத்திரகாரகரான சுக்கிரன் பகவான் ராகுவுடன் இணைந்து அதற்கு சம சப்தமாக எட்டடாம் இடத்திலிருந்து சனி+ கேது பார்வை செய்வதால் திருமண வயதில் காத்திருக்கும் ரிசப ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் திருமணத்திற்கு உகந்த மாதம் அல்ல. மேலும் ராசிக்கு ஏழாம்
அதிபதியான செவ்வாய் பகவான் மே மூன்றாம் தேதி கும்ப வீட்டிற்கு இடம்பெயர்ந்து சனிபகவானுடைய மூன்றாம் பார்வை பெறுவதாலும் திருமணத்திற்கு உகந்த மாதம் அல்ல.இல்லற வாழ்வில் ஈடுபட கூடிய தம்பதிகள் தன்னுடைய இல்லறத் துணையுடன் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலையோடு இருப்பின் பிரச்சினைகளிலிருந்து தவிர்க்கலாம்.
படிக்கக் கூடிய இன்றைய இளைஞர்களுக்கு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் ராகு பகவான் அமர்ந்து எட்டாமிடத்திலிருந்து சனி+கேது இணைந்து பார்வை பெறுவதாலும்,நான்காம் அதிபதியான சூரிய பகவானும் வித்தைக்காரன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால் இந்த மாதம் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் தடைபடலாம்.
தொழில் முயற்சியில் ஈடுபடக்கூடிய ரிஷப ராசி அன்பர்களுக்கு, உங்களது ராசிக்கு யோகரான சனி பகவான் 8-ம் இடத்தில் குரு வீட்டில் அமர்ந்து அந்த வீட்டுக்குடைய குரு பகவான் நீச பங்கம் பெற்று இருப்பதால் புதிதாக தொழில் முயற்சியில்
ஈடுபடக்கூடியவர்கள் புதிய தொழில் முயற்சி செய்யலாம் .இரும்பு சார்ந்த தொழில்களை செய்யும் போது மிகுந்த லாபத்தை பெறலாம்.
வாக்காதிபபதியான புதன் பகவான் மே மாதம் நாலாம் தேதி வரை பன்னிரண்டாம் இடத்தில் மறைந்திருந்த புதன் பகவான் உங்கள் ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் இதுவரையில் தன பழக்கம் கையில் இல்லாதவர்களுக்கு இனிமேல் தன பழக்கம் தடையின்றி கைகளில் வந்து தவழும்.ஆனால் அதே நேரத்தில் எவ்வளவு பொருள் ஈட்டினாலும் தன ஸ்தானமான இர இடத்தில் ராகு இருந்து சனி பகவானுடைய பார்வையைப் பெறுவதால் சம்பாதித்த பணம் அனைத்தும் செலவழியும்.
கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு மே 10-ஆம் தேதியும், ரோகிணி நட்சத்திரம் மே 11 ஆம் தேதியும் மற்றும் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்கு மே 12-ஆம் தேதியும் சந்திராஷ்டமம் இந்த காலங்களில் புதிய முயற்சிகள் சுபகாரியங்கள் வெளியூர் பயணங்கள் போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.
ரிஷப ராசி அன்பர்கள் தங்களது இன்னல்களில் இருந்து விடுபட ஸ்ரீபத்திரகாளி அம்மனை வழிபட வெள்ளிக்கிழமை சென்று வழிபட வேண்டும்.
Comments are closed.