எந்த காரியத்தையும் துணிச்சலாக கையில் எடுத்து அதை சிறப்பாக முடித்துக் காட்டும் சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் இந்த மாதம் திரிகோண ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பதால் நீங்கள் எங்கு சென்றாலும் வெற்றிக்கொடி காட்டுவீர்கள்.
உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் புதன் பகவான் மே மாதம் 4-ஆம் தேதி பெயர்ச்சி அடைந்து குருபகவானின் பார்வையைப் பெறுவதால் கல்வி விஷயங்களில் ஈடுபடக்கூடிய குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முன்னேற்றங்கள் உண்டாகும்.
சிம்மம் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சனி +கேது இணைந்திருப்பதால் ஆன்மீக முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு ராசிக்கு இந்த மாதம் உகந்த மாதமாக அமையும்.
உங்கள் ராசிக்கு 4- க்குரிய செவ்வாய் பகவான் லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் கேந்திர ஸ்தானத்தில் நின்று பகை வீடு ஏறி இருந்தாலும் சொந்த வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடலாம்.
சிம்ம ராசிக்கு 3 10-க்குடையவர் சுக்கிரன் ராகுவோடு இணைந்து பதினோராம் இடத்தில் சனி பார்வையில் இருப்பதால் வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
மே மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதி உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சி, வெளியூர் செல்லுதல் மற்றும் சுப காரியங்களில் ஈடுபடுவதை தவிர்த்து நல்லது. நீங்கள் சிவாலயங்கள் சென்று சிவபெருமானை வழிபட நல்லது நடக்கும்.