துலாம் ராசி மே மாத பலன்கள் 2020
எதையும் எடை போட்டு அளந்து பேசும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பகவான் மே மாதம் இரண்டாம் தேதி வரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து இருந்தாலும் ஆட்சி பெற்றிருந்ததால் இது வரை பல நல்ல விஷயங்கள் தடைகளுடன் நிறைவேறி மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.
ஆனால் மே மாதம் மூன்றாம் தேதி ராசிக்கு ஒன்பதாம் இடமான மிதுனத்தில் சுக்கிர பகவான் இடம் பெயர்ந்து ராகுவோடு இணைந்து மற்றும் சசப்தம ஸ்தானமாகிய ஏழாமிடத்தில் இருந்து சனி +கேதுவின் பார்வை பெறுவதால் புதிதாக முயற்சி செய்யும் எந்த ஒரு விஷயத்திற்கும் இந்த மாத காலம் உகந்த காலம் அல்ல.
விதிவிலக்காக
மே மாதம் ஆறு மற்றும் ஏழாம் தேதியில் சூரியனுக்கு சமசப்தமமாக உங்கள் ராசியில் சந்திர பகவான் அமர்ந்து பௌர்ணமி யோகம் பெற்று திகழ்வதால் இந்த தருணங்களில் மட்டுமே நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம்.
ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ராகு அமர்வது ஓடு அஷ்டமாதிபதியான சுக்கிரனும் இணைந்து சனியோட பார்வை பெறுவதால் ஒரு தந்தைக்கு ஏதாவது ஆரோக்கிய குறைவு உண்டாகலாம்.
துலா ராசிக்கு தனாதிபதி மற்றும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருந்தாலும் மே 3ஆம் தேதிக்கு பிறகு கும்ப வீட்டிற்கு சென்று திரிகோண ஸ்தானத்தில் அமர்வதால் திருமண விஷயங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் தடைகள் பல சந்திப்பீர்கள்
இந்த தருணங்களில் கணவன்-மனைவிக்கிடையே நிலவிவந்த பிரச்சினைகளும் சிக்கல்களும் அதிகமாகும்.
உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சனி கேது இணைந்து ராகுவோடு பார்வையைப் பெறுவதால் சகோதரர்களிடையே பிணக்குகளும் பிரச்சினைகளும் உண்டாகும்.
பூர்வீகச் சொத்தில் பிரச்சினை இருந்து வந்த உங்களுக்கு மே மூன்றாம் தேதிக்கு பிறகு பிரச்சினை விலகி பூர்வீக சொத்து உங்களுக்கு கிட்டும்.
புத்திரகாரகன் குரு நீசம் பெற்று இருப்பதாலும் புத்திர ஸ்தானத்தில் பாவியான செவ்வாய் இருப்பதாலும் புத்திர தடை உண்டாக்கும்.
துலா ராசி அன்பர்களுக்கு மே மாதம் 22 மற்றும் 23 ஆம் தேதி சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சி, வெளியூர் செல்லுதல் மற்றும் வீண் விவாதங்களில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்த்தல் உத்தமம் வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் வழிபாடு செய்ய பிரச்சினைகள் விலகும்.
Comments are closed.