விருச்சிகம் ராசி மே மாத பலன்கள் 2020
பார்ப்பதற்கு கம்பீரமாக தோன்றும் விருச்சிக ராசி அன்பர்களே! அதே நேரத்தில் கோபம் என்று வந்துவிட்டால் மற்றவர்கள் மனம் நோகும்படியாக தேள் போன்று கொல்லக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் மே மாதம் 2 வரை மகர வீட்டில் உச்சம் பெற்று நீசம் பெற்ற தன் காரகன் மற்றும் தனாதிபதியான குருவை நீசபங்கம் அடைய செய்து குரு மங்கள யோகம் பெற்று இருப்பதால் இந்த மாதத்தில் நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியே அடைவீர்கள்.
மே மாதம் மூன்றாம் தேதி ராசி நாதன் செவ்வாய் சுகஸ்தானமான நான்காம் இடத்திற்கு செல்வதுடன் சனிபகவானுடைய பார்வையை பெறுவதால் 3க்கு பிறகு செய்யும் முயற்சிகளில் தடைகள் உருவாகும்.
உங்கள் ராசிநாதனுக்கு வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்தில்
சனி+ கேது இணைந்து எட்டாமிடத்தில் மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு களத்திரகாரகன் சுக்கிரனுடன், ராகு இணைந்து இருப்பதால் திருமண முயற்சியில் ஈடுபடக் கூடிய இளைஞர்களுக்கு இந்த மாதம் உகந்த மாதமாக அமையாது. புதிதாக திருமண பந்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையே சிறு,சிறு வாதங்களும் மற்றும்மனக்கசப்பு உண்டாகும்.
ராசிக்கு ஜீவன ஸ்தானமான பத்தாம் அதிபதி சூரியன் 6 .ஆம் இடத்தில் மறைந்து உச்சம் பெற்றிருப்பதால் தொழில் விஷயங்களில் முடக்கம் உண்டாகும்.
வித்தைக்காரன் புதன் பகவான் உங்கள் இராசிக்கு 7-ஆம் இடத்திற்கு மே மாதம் நலம் தேறி வருவதாகவும் குருபகவானின் பார்வையைப் பெறுவதாலும் கல்வி விஷயத்தில் மாணவர்களுக்கு ஆரோக்கியமான முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிக ராசிக்கு மே மாதம் 25 மற்றும் 26 ஆம் தேதி சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சி, வெளியூர் செல்லுதல் மற்றும் புதிய விஷயங்களில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.
செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள முருகன் கோவில் சென்று வழிபட இன்னல்கள் விலகும்.
Comments are closed.