2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் கன்னி ராசி
(New Year Rasi Palan 2019 Kanni Rasi – Puthandu Rasi Palan Kanni Rasi 2019 in Tamil)
ராகு_கேது பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Kanni Rasi)
கன்னி ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???
இந்த வருடம் அதாவது 2019 ல் கன்னி ராசிக்கு மூன்றில் குருபகவானும், சனிபகவான் நான்கில் அர்த்தாஷ்டம சனியாக,நான்காம் இடத்து சனியாகவும், நாள்கண்ட சனியாகவும், ராகு ,கேதுக்களும் முறையே 10, 4 ம்மிடமான கேந்திர ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
குருபகவான் மூன்றில் இருந்து ஏழாம் வீடான தன் வீட்டை தானே பார்த்து,
திருமணமாகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணத்தை நடத்தி வைப்பார். ஒன்பதாம் இடத்தை பார்த்து பாக்கியங்களை அதிகப்படுத்துவார். தகப்பனாரால் ஆதாயம், கோவில் ,ஆன்மீக, அறநிலையத்துறை யை சார்ந்தவர்களுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டமாகும்.
குருபகவான் பதினொன்றாம் இடத்தை பார்த்து இதுவரை திருமண வழக்குகள் இருந்து , கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகளால் முறையாக பிரிந்தவர்களுக்கு , இரண்டாம் திருமணம் ,மறுமணம் நடந்து, இரண்டாவது திருமண வாழ்க்கையை மிகச்சிறப்பாக அமைத்து கொள்வார்கள்.முதலாவது திருமணத்தில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு , வாழ்க்கை பாடங்களை நிறைய கற்றுக்கொண்டு,படிப்பினைகளை பெற்று, இரண்டாம் திருமண வாழ்க்கையை நல்லபடியாக அமைத்து கொள்வார்கள்.
சனி பகவான் நான்கில் வந்தாலே ,வழக்குகள் வரும். உங்களுக்கு 2019 ல் சனி நான்காம் பாவமான அர்த்தாஷ்டமத்தில் சஞ்சரிப்பதால் ஒரு நாளை கடத்துவது ஒரு யுகத்தை கடத்துவது போல் இருக்கும். ஒரு யுகம் என்பது 4,00,000 வருடங்கள் ஆகும். தெண்டச்செலவுகள் ஏற்படும். கையில இருக்கற பொருள் விரையமாகும். குடும்பத்தில் அன்னியோன்யம் கம்மியா இருக்கும். இடம் விட்டு இடம் மாறவேண்டிய சூழ்நிலை வரும்..தொழில்ல லாபம் கம்மியா இருக்கும்…
இங்கே ஒரு சூட்சுமத்தை சொல்லி விடலாம். அது என்னன்னா?? கன்னி லக்னம் ,கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பஞ்சம ,சத்ரு ஸ்தானாதிபதியாக வருவதால் சனிதசை வரும் போது சிலருக்கு அது யோக தசையாகவும், சிலருக்கு அவர்களது மக்களால்(புத்திரர்களால்) தொல்லைகளையும் தந்து விடுகிறது. ஏன்னா சனியே புத்திர ஸ்தானாதிபதியாகவும், அவரே ருண ரோக,சத்ரு ஸ்தானாதிபதியாகவும் வருவார். இரண்டுக்குமே சனிதான் ஆதிபத்தியம் வாங்குவார்.
அதேபோலத்தான் சிம்ம, லக்ன ,ராசிக்காரர்கள் சிலருக்கு மனைவி நல்ல முறையில் அமைவதில்லை. ஏன்னா இவர்களுக்கு ஏழாமிடத்து அதிபதியான சனியே இவர்களுக்கு வம்பு, வழக்கு, கடன் ,நோய் ,எதிரி ஸ்தானத்திற்கும் ஆதிபத்தியம் பெறுவார்.உடனே நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. அதை சுக்கிரனை கொண்டும்,ஏழாமிடத்தை கொண்டும் மனைவியால் ஆதாயங்களை பெற முடியும். இந்த அமைப்போடு சுக்கிரனும், ஏழாமிடமும்,சனியும் கெட்டு விட்டால் கண்டிப்பாக மனைவி அல்லது கணவன் எதிரியாக வந்து நிற்பார்கள். இதற்கு ஆறாமிடமும் வலுத்து இருந்தால் நிச்சயம் மனைவி வகையில் தொல்லைகள் இருந்தே தீரும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு இங்கே சனியால் தெண்டச்செலவுகள் ஏற்படும் என்று சொன்னோம். தெண்டச்செலவுகள் என்பது ஆஸ்பத்திரி செலவு ,வைத்தியச்செலவு, திருட்டு போதல், கோர்ட், கச்சேரிக்கு செலவு என்பன போன்றவை தெண்டச்செலவுகள் ஆகும்.
கல்யாணம் ,குழந்தைகள் கல்விக்காக செலவு ,வீடு கட்டறது,சொத்து வாங்கறது,
போன்ற செலவுகள் சுபச்செலவுகள்..
ஒருத்தர் ஒரு இருபது வருடமாக கொஞ்சம் கொஞ்சமாக, குருவி சேர்ப்பது போல ஒரு 20,00,000 சேர்த்து வைக்கிறார். அவருக்கு ஒரே ஒரு பொண்ணு அந்த பொண்ணுக்காக ,அந்த பெண்ணின் திருமணத்திற்காக அத்தனை பணத்தையும் மொத்தமாக எடுத்து செலவு செய்து விடுகிறார்.அது ,அந்த செலவு அவருக்கு மனவருத்தத்தை தருமா?? தராது.
அதுதான் சுபச்செலவு.
உங்களுக்கு தெண்டச்செலவுகள் ஏற்படும் என்று சொன்னாலும் கூட குருபகவானின் பார்வை பலத்தால் அத்தனை பிரச்னைகளையும் சமாளிக்கலாம். குருவுக்கு ஸ்தான பலம் இல்லை. ஆனால் குரு பார்க்கக்கூடிய 7,9,11 ம் பாவங்கள் சிறக்கும். குருபகவான் பார்க்க கூடிய இடங்கள் எல்லாம் பெருகும். வளரும். குரு வருமானத்தை கொடுத்து விடுவார்.சனி அந்த வருமானத்தை தெண்டச்செலவுகளாக மாற்றுவார்.அப்ப வருமானத்த கொடுத்து பின் விரையங்களை தரும்.
ராகு கேது பெயர்ச்சி 2019
_______________________
2019 மார்ச் மாதத்திற்கு பிறகு, ராகு கேதுக்கள் பத்து ,நான்காம் இடங்களுக்கு பெயர்ச்சி ஆகபோகின்றார்கள்.பொதுவாக பாவர்கள் கேந்திரங்களில் நிற்கலாம். அதுவும் பத்தாம் இடமான தசம கேந்திரத்தில் பாவிகள் இருப்பது சிறப்பு. பத்துல ஒரு பாவியாவது,பழுதாவது இருக்கனும். ராகு ,கேதுக்கள் கேந்திரங்களில் இருந்தால் அவர்களோடு திரிகோணாதிபதிகள் இணைவு கட்டாயம் வேண்டும். ராகு, கேதுக்கள் திரிகோணங்களில் இருந்தால் அவர்களோடு கேந்திராதிபதி இணைய வேண்டும். அப்போது தான் ராகு,கேதுக்களால் நன்மைகள் இருக்கும். ஆனாலும் முதலில் சில நன்மைகளை செய்து விட்டு பிற்பகுதியில் கொஞ்சம் கெடுக்கவே செய்கிறார்கள்.
அப்படி பார்க்கும் போது, கேது நான்கில் இருந்து ஐந்தாம் அதிபதியான சனியோடு இணைவு பெறுவது யோகம்.
இருந்தாலும் தொழிலில் அலைச்சல்கள் அதிகரிக்கும். அலைக்கழிப்பை தரும். முற்பகுதியில் வாகனங்களால் யோகமும், பிற்பகுதியில் நன்றாகவே இருக்கும்.ராகு பத்தில் இருந்து தன்னை பார்க்கும் பஞ்சமாதிபதியின் பலனை பிடுங்கி அவர் தருவார் என்பதால் ராகுவால் தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்…இரும்பு தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமாக இது இருக்க போகின்றது.
சிலருக்கு தாயார், வண்டி வாகனங்கள், மனை,பூமி போன்றவற்றில் விரையங்களை ஏற்படுத்துவார்கள் நான்காம் இடத்தோடு சம்பந்தப்பட்ட சனி+கேது+ராகு பகவான் போன்றவர்கள்…
சனி நான்காம் பாவத்தில் இருந்து ராசியை பார்ப்பதால் இந்த காலங்களில் உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். இருந்தாலும் அவர் குருவின் வீட்டில் இருப்பதாலும், கேதுவுடன் சம்பந்தப்பட்டு இருப்பதாலும், அவரே பஞ்சமாதிபதியும் ஆவதால் எதிர்காலத்தில் வெற்றி பெறுவதற்கான ,அஸ்திவாரத்தை அமைத்து தருவார். சிலருக்கு பஞ்சமாதிபதி ராசியை பார்ப்பதால் நல்ல யோகத்தை செய்வார்.போராட்ட குணங்களை சனி தருவார். எதிர்காலத்தில் வரும் பிரச்னைகள் உங்களுக்கு சர்வ சாதாரணமாக தெரியும். எதையும் தாங்கும் சக்தியை மன உறுதியை,இதயத்தை சனி இக்காலத்தில் ஏற்படுத்தி தருவார்.
பெரிய கோட்டுக்கு பக்கத்தில் இன்னொரு பெரிய கோட்டை போட்டால்
முதலில் போட்ட பெரிய கோடு சின்ன கோடு ஆகிவிடும். அதுபோல இந்த அர்த்தாஷ்டம சனிபோல ஒரு கஷ்டம் இனிமேல் வரப்போவதேயில்லை.
குழந்தைகளுக்கு மருந்து கசப்பாக கொடுத்தால் அந்த குழந்தைகள் சாப்பிடாது.அந்த குழந்தைகளை மருந்து சாப்பிட வைப்பதற்காக அந்த மருந்தில் இனிப்பு கலந்து இருக்கும். அதுபோல சனியால் வரக்கூடிய துன்பங்களை குருபகவானின் பார்வைபலம் மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் அலைச்சல்களை,அலைக்கழிப்புகளை, தரக்கூடிய ஆண்டாக, இதுவரை வீடு,நிலம் விற்கவேண்டும் என்று நினைத்து இருந்தவர்களுக்கு வீடு,நிலம் விற்றுவிடும். திருமணம் நடக்காத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம் நடக்கும் ஆண்டாக, மாணவர்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டிய ஆண்டாக,அரசியல்வாதிகளுக்கு சோதனையான ஆண்டாக, போக்குவரத்து, டிராவல்ஸ், வைத்திருப்பவர்களுக்கு அலைச்சல்களுடன் ஆதாயங்களும்,இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு யோகமான ஆண்டாகவும், இடமாற்றங்கள், தொழில் மாற்றங்களை உடைய ஆண்டாகவும் இந்த 2019 ஆங்கில புத்தாண்டு இருக்கப்போகின்றது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. என்னதான் அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும், சனி கேதுவுடன் இணைந்து தன்னுடைய பாவத்தன்மையை இழப்பதாலும், குருவின் பார்வை பலத்தாலும் நிலமையை சர்வ சாதாரணமாக சமாளிப்பீர்கள் என்று கூறி,2019 மாற்றத்திற்கான,முன்னேற்றத்திற்கான ஆண்டாக நிச்சயம் இருக்க போகின்றது.
நன்றி
வணக்கம்