2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் கும்ப ராசி
(New Year Rasi Palan 2019 Kumbha Rasi – Puthandu Rasi Palan Kumbha Rasi 2019 in Tamil)
ராகு_கேது பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Kumbha Rasi)
கும்ப ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???
2019 ஆண்டில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியை பார்த்து கொண்டு உள்ள யோகமான ஆண்டாகும்.எந்த ஒரு கிரகமும் தன் வீட்டை தானே பார்த்தால் அந்த வீடு வலுப்பெறும் என்ற விதிப்படி
உங்கள் ராசிநாதன் 11ல் இருந்து உங்கள் ராசியை பார்ப்பது யோகம்.
சனி 3, 6, 11 ல் இருக்கும் போது மட்டுமே நன்மைகளை செய்வார் .அந்த அடிப்படையில் பதினொன்றாம் பாவத்தில் இருக்கும் சனி நன்மைகளை மட்டுமே செய்வார். பதினொன்றாம் பாவத்தில் இருக்கும் சனி லாபங்களை தருவார். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நிறைய சம்பாத்யங்களை தருவார். வண்டி வாகனங்கள் வாங்க கூடிய யோகம் 2019 ல் உண்டு. இடம் பொருள் பூமி வாங்க கூடிய யோகம் உண்டாகும். பேரும் புகழும் உண்டாகக்கூடிய ஆண்டு 2019 ஆகும்.
இரும்பு தொழில் செய்பவர்களுக்கு சனியால் நன்மைகள் இருக்கும் ஆண்டு 2019.லாரி, டெம்போ, குட்டி யானை வைத்திருக்கும் கும்ப ராசி நேயர்களுக்கு நன்மைகள் உண்டாகும். பெட்ரோல்,இரும்பு, மது,கருப்பு நிற பொருட்களை வைத்து தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக 2019 நிச்சயம் இருக்க போகின்றது. அந்நிய மனிதர்களால் நன்மைகள், லாபங்கள் உண்டாகும் வருடமாக 2019 இருக்கும்.
மூன்றாவது மனிதர்கள் சப்போர்ட் கிடைக்கும். வேலைக்காரர்கள் விசுவாசத்தோடு பணிபுரிவார்கள்.
ராசிநாதன் ராசியை பார்த்து கொண்டு இருப்பதால் உங்களால் எதையும் சமாளிக்க முடியும். உங்கள் சுயஜாதகத்தில் 6,8,12 போன்ற கிரகங்களின் சாதகமற்ற தசாபுக்திகள் நடந்தால் ஒழிய, மேலே சொன்ன பலன்களை குறைக்க முடியாது..
இந்த 2019 ல் குருபகவான் பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.குரு பத்தில் வரும் போது பதவி பறிபோகும் என்ற கூற்று உள்ளது. அதன்படி சிலருக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு விரும்பிய இடங்களுக்கு பணிஇடமாற்றம் இருக்கும். குரு பத்தில் இருக்கும் போது” ஈசன் ஒரு பத்திலே தலை ஓட்டிலே இரந்துண்டதும்’என்று வரும். அதாவது பத்திலே குருவரும்போது ஈசனே பிச்சை எடுத்து சாப்பிட்டார் என்றாலும்
அந்த மாதிரியான வேலைபோகக்கூடிய அமைப்பு உங்களுக்கு இல்லை. ஏனென்றால் ராசிநாதன் உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்னைகள் வந்தாலும் நீங்கள் அதிலிருந்து மீண்டு வரமுடியும். சமாளித்து விடுவீர்கள்.
என்னதான் குரு பத்தில் இருந்தாலும் அவர் நான்காம் இடத்தை வலுத்து பார்ப்பதால் கும்ப ராசியை சேர்ந்த சிலருக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும். வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தாயாருக்கும் நன்மைகள் நடக்கும் ஆண்டாக, தாயாரால் நன்மைகள்,உதவிகள் இருக்கும் ஆண்டாக 2019 இருக்கும்.
பதினொன்றாம் இடம் என்பது நான்குக்கு எட்டாம் இடம் என்பதால்,அங்கே ஆயுள் காரகன் சனி அமரப்பெற்று இருப்பதாலும், குரு நான்கை பார்ப்பதாலும், தாயாருக்கும் ஆயுள் பலத்தை கூட்டும். தாயாருக்கு ஏதாவது உடல்நிலை தொந்தரவுகள் இருந்து வந்தாலும் அவைகள் சூரியனை கண்ட பனிபோல விலகக்கூடிய ஆண்டு 2019.
மிக முக்கியமான பலனாக சனி தன்வீட்டை தானே பார்த்து வலுப்படுத்தும் அதேநேரத்தில், குருவும் தன்வீடான இரண்டாம் இடமான மீனத்தை தன்னுடைய ஐந்தாம் பார்வையால் பார்த்து தாராளமான பணவரவுகளை தர இருக்கிறார்கள்.
சனியும் பதினொன்றாம் பாவத்தில் சுபத்தன்மை பெற்று தாராள பணவரவுகளை அளித்து கொண்டு உள்ளார். 2019 நல்ல தாராளமான பணவரவுகளை தரும் ஆண்டாக இருக்க போகின்றது.
இரண்டாம் இடம், ராசி ,அதிபலம் பெற்றுள்ள நிலையில் இந்த வருடம் திருமணமாகாத கும்ப ராசிக்காரர்கள் பலருக்கும் திருமணம் நடந்து விடும்.இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பம் அமைந்துவிடும். படிக்கும் மாணவர்கள் நன்கு படித்து பரீட்சையில் தேர்ச்சி பெறுவார்கள். அதிர்ஷ்டமான ஆண்டாக 2019 இருக்கபோகின்றது. கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் கேட்ட இடத்தில் கடன்கிடைத்து வியாபாரம் அமோகமாக இருக்கும். குரு ஆறை பார்ப்பதால் பேங்க்ல லோன் கேட்டாலும் கிடைத்துவிடும். தொழிலை விரிவுபடுத்த முடியும். நேரம் சாதகமாக இருப்பதால் இந்த நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019
கும்ப ராசிக்கு இதுவரை 6,12 ல் மறைந்து சாதகமான பலன்களை கொடுத்து வந்த ராகு,கேதுக்கள் தற்போது ஐந்து, பதினொன்றுக்கு மார்ச் மாதத்திற்கு பிறகு மாற இருக்கிறார்கள். ராகு ஐந்தாம் பாவத்தில் இருப்பது சாதகமற்ற பலனை தந்தாலும் கேது பதினொன்றாம் பாவத்தில் இருந்து மிகப்பெரிய லாபங்களை தர காத்து கொண்டு உள்ளார்.
அந்நிய மனிதர்களால் நன்மைகள் இருக்கும். வேற்று மதம்,வேற்று இனம் ,வேற்று மாநிலத்தவர்களால் நன்மைகள் கிடைக்கும் ஆண்டாக 2019 இருக்கும். ஐந்தில் இருக்கும் ராகுவால் பிள்ளைகளின் கல்விக்காக விரையங்கள் இருக்கும்.
சனி மற்றும் கேதுவால் வழக்குகள் ஏதும் இருந்தால் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பூர்வ சொத்துக்களில் உள்ள வில்லங்கங்கள் முடிவுக்கு வரும். நோய் தொந்தரவுகள் விலகும். கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும்.பெரிய அளவில் வருமானங்கள் வந்து கடன்களை அடைக்க முடியும்.பெரிய மனிதர்கள் சப்போர்ட் கிடைக்கும்.
ஆன்மீகவாதிகளுக்கு,டிரஸ்ட் நடத்துபவர்களுக்கு ,கோவிலை சுற்றி கடை வைத்திருப்பவர்களுக்கு ,அறநிலையத்துறை யை சேர்ந்தவர்களுக்கு யோகமான ஆதாயங்கள் நிறைந்த ஆண்டாக 2019இருக்கும். குருபகவான் செவ்வாயின் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் மகிழ்ந்து வீற்றிருப்பதால் செங்கல் சூளை,டாக்டர், ஆயுதங்களை கொண்டு வேலைசெய்பவர்களுக்கு ,போலீஸ், ராணுவம் ,காவல்துறை யை சேர்ந்த கும்ப ராசிக்காரர்களுக்கும் யோகமான ஆண்டாக ,லாபம் மிகுந்த ஆண்டாக 2019 இருக்கப் போகின்றது.
நன்றி
வணக்கம்