2019 புத்தாண்டு பலன்கள் மீன ராசி – New year Rasi Palan 2019 Meena Rasi

Puthandu rasi palan 2019 Meena Rasi - New Year Rasi palan Meena Rasi 2019 in Tamil

11,721

2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் மீன ராசி

(New Year Rasi Palan 2019 Meena Rasi – Puthandu Rasi Palan Meena Rasi 2019 in Tamil)

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மீன ராசி (Rahu Ketu Payarchi Palangal 2019 – Meena Rasi)

மீன ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது???

 

இந்த 2019ம் ஆண்டில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்த்து கொண்டு உள்ளார். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியை பார்த்து கொண்டு இருப்பது யோகம். குரு லக்னத்தையோ ராசியை பார்ப்பது சிறப்பு.

இந்த 2019 ல் உங்கள் சுயபலம் அதிகரித்து, மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும் ஆண்டாக இருக்கப்போகின்றது. ஒன்பதாம் இடத்தில் இருக்கும் குருவால் தந்தையார் ஆதரவு,குழந்தை பாக்கியம், புத்திரர்களால் ஆதாயங்கள், நன்மைகள் ,புத்திரர்களால் பெருமை போன்ற நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். குரு ஒன்பதில் இருந்து 1,3,5 போன்ற இடங்களை பார்த்து விடுவார்.

குருவால் 1,5,9 ம் இடங்கள் வலுப்பெறுகிறது.1,5,9 ம் இடங்கள் திரிகோண ஸ்தானங்கள் ஆகும். இவைகள் லட்சுமி ஸ்தானங்கள் என்று அழைக்கப்படும். எனவே லட்சுமி கடாட்சத்தால் பொருளாதார முன்னேற்றங்கள் உள்ள ஆண்டாக 2019 இருக்கும்.

“தாமென செல்வமொடு
குதிரை உண்டாம்
தழைக்குமே குடை
தர்ம தானம் ஓங்கும்
நாமென தாய் தகப்பன்,
புதல்வராலே நன்மையுண்டாம்
அருமையோடு பெருமையும் உண்டாம்”

என்ற எளிய செய்யுளின்படி தாய், தகப்பன் உதவிகள் கிடைக்கப்பெற்று தர்ம தானங்கள் செய்யும் அளவுக்கு வருமானம் வந்து ,அருமையும்,பெருமையும் ,பேரும், புகழும் கிடைக்க பெறும் ஆண்டு 2019. புண்ணிய காரியங்களை செய்து அடுத்த பிறவிக்கு புண்ணியங்களை சேர்த்து வைத்துக்கொள்வீர்கள்.

சனிபகவான் 2019 ல் பத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு உள்ளார். பத்தில ஒரு பாவியாவது பழுதாவது இருக்கனும் என்ற விதிப்படி சனி பத்தில் இருக்கலாம். அதே போல ஒரு உபஜெய ஸ்தானாதிபதி இன்னொரு உபஜெய ஸ்தானத்தில் இருக்கலாம். லாபாதிபதி பத்தில் இருப்பது தொழிலில் லாபத்தை தரும்.

இதுவரை விலகி இருந்த ,பிரிந்திருந்த தம்பதிகள் ஒற்றுமை பலப்பட்டு ஒன்றாக இணைவார்கள்.ஓருடல் ஈருயிராக,ஈருயிர் ஓருடலாக அந்நியோன்யமாக வாழ்வார்கள்.
குருபலம் துணைநிற்கும். சனி பத்தில் இருப்பதால் தொழிலில் போட்டிகள் இருக்கும். தொழிலில் எதிரிகள் தோன்றுவார்கள்.தொழிலில் இடைஞ்சல்களை தந்தாலும் எல்லாவற்றையும் குருபலத்தால் அத்துணை பிரச்னைகளையும் வெற்றிகரமாக சமாளித்து ,தொழிலில் லாபங்களை ஈட்ட முடியும்.

2018 ல் அஷ்டம குரு ஏமாற்றங்களையும்,துரோகங்களையும்,கெட்ட பெயர்களையும் ,தொழில் நஷ்டங்களயும் ஏற்படுத்தி தந்திருக்கும். 2019 ல்ஒன்பதாம் இடத்து குரு உங்களுக்கு நல்ல பெயரையும், தொழிலில் லாபங்களையும் தரக்கடமைப்பட்டவர். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில குரு என்ற பழமொழி உண்டு.பத்தில சனியிருந்து சனிக்கு வீடுகொடுத்தவன் ராசிக்கு திரிகோணத்தில் இருந்து ராசியை பார்ப்பதால் சனிக்கு ஒரு பலம் கிடைத்துவிட்டது.சனி சுபத்தன்மை பெற்று காணப்படுவதால் சனியின் காரத்துவங்களான இரும்பு, பெட்ரோல், கருப்பு நிற பொருட்கள், குப்பையை ஏற்றிச்செல்லும் லாரி, டெம்போ, மெக்கானிக்குகள் ஆகியோர்களுக்கு யோகமான ஆண்டாக 2019 இருக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளைஞர்கள் வெளிநாடு செல்ல முடியும். மீனம் நீர் ராசி. குரு நீர் ராசியில் இருந்து நீர் ராசியை பார்த்து கொண்டு இருப்பதாலும், சனி பத்தில இருந்து பன்னிரண்டை பார்ப்பதாலும், ஒன்பதாம் இடம், பன்னிரண்டாம் இடம் வலுப்பெறுவதால் வெளிநாடு சென்று இளைஞர்கள் வேலைபார்க்க முடியும்.

இந்த வருடம் குருபலன் மிகச்சிறப்பாக இருப்பதால் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம், உறவுகள் போற்ற, இனிதே நடந்து விடும்.நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் கிட்டாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து வீட்டில் மழலைச்சத்தம் கேட்கக்கூடிய ஆண்டு 2019. காதுகுத்து, திரட்டி, வளைகாப்பு போன்ற சுபகாரியங்களும் அவர் அவர்கள் வயதுக்கு ஏற்ப நடந்தே தீரும்.

அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டு கிரகங்களின் கோள்சாரங்கள் மிகச்சிறப்பாக இருப்பதால் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும். அதனால் அதற்கான அடிப்படைகளை பவுண்டேஷனை போட்டு வைக்கும் ஆண்டாக 2019 நிச்சயமாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் இந்த வருடம் ஆரம்பித்து வரும் காலங்களில் ,சனி பதினொன்றில் வரும் காலத்தில் அசுர வளர்ச்சி இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 மீன ராசி

இதுவரை ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து வந்த ராகு தற்போது நான்காம் பாவத்திற்கு பெயர்ச்சி அடைய போகிறார். இதுவரை ஐந்தில் பகையாக இருந்த ராகு இப்போது நட்பு வீட்டுக்கு வருகிறார். இது எவ்வளவோ பரவாயில்லை. பாவர்கள் கேந்திரங்களில் இருக்கலாம். ஆனால் நான்கில் இருக்கும் ராகு அலைச்சல்களை தருவார்.

நான்காம் பாவம் மாதுர் ஸ்தானம் ஆகும். இங்கிருக்கும் ராகு தாயின் நலத்தை கெடுப்பார்.வீடு,வாகனம் வாங்கக்கூடிய முயற்சிகளில் சில தடைகளை தந்து பின்னர் வெற்றிகளை தருவார்.கடும் இழுபறிக்கு பிறகு முடியும்.பயணங்கள் அதிகளவில் ஏற்படும். தாயார் உடல்நிலையில் கவனம்தேவை.வயதான தாயாருக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

கேதுவால் நன்மைகள் இருக்கும் .கேதுவால் தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும்.சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.இந்த வருடம் மீன ராசிக்கார ஆசிரியர்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். செவ்வாயின் வீட்டில் குரு இருப்பதால் இந்த ராசியை சேர்ந்த விவசாயிகளுக்கு நன்மைகள் இருக்கும். அரசியல் வாதிகள் கடும் முயற்சிக்குபின் வெற்றி பெறுவார்கள். மக்களால் பாராட்டப்படுவார்கள்.மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படிக்க வேண்டும். மாணவர்கள் ஆடாத ஆட்டம் போட்டாலும் காரியத்தில்(படிப்பில்) கவனமாக இருக்க வேண்டும்.

தாயாருக்கு மருத்துவ செலவுகளும், வீட்டில் மராமத்து வேலைகளும், வாகனங்களுக்காக செலவுகளும், இருக்கும் ஆண்டாக, கொஞ்சம் அலைக்கழிப்புகளும் உள்ள ஆண்டாக, குருபலத்தால் அனைத்தையும் சமாளிக்க க்கூடிய ஆண்டாக, அனைத்து சுபகாரியங்களும் நடக்க கூடிய ஆண்டாக,
எதிர்காலத்துக்கான நல்ல முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கும் ஆண்டாக 2019 இருக்கும்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More