2019 புத்தாண்டு பலன்கள் மேச ராசி – New year Rasi Palan 2019 Mesha Rasi

Puthandu rasi palan 2019 Mesha Rasi and Rasi palan 2019 in tamil

8,099

2019 புத்தாண்டு பலன்கள் மேச ராசி

(New Year Rasi Palan 2019 Mesha Rasi – Mesha Rasi puthandu rasi palan 2019 in Tamil)

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 (Rahu Ketu Payarchi Palangal 2019)
________________________________

2019 மேச ராசிக்கு எப்படி இருக்க போகின்றது.?

இந்த 2019 ல் மேச ராசிக்கு,எட்டில் குருவும், ஒன்பதாம் வீட்டில் சனியும், 6.3.2019 க்கு பிறகு மூன்றில் ராகுவும், ஒன்பதாம் இடத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

தனகாரகன்,புத்திர காரகன்,அறிவுகாரகன்,புண்ணிய காரகன் ராசிக்கு பாக்கியாதிபதியான குருபகவான் ராசிக்கு எட்டில் மறையலாமா?
குருபகவான் மறைவதால் பொருளாதார நெருக்கடி இருக்கும். கொடுக்கல் ,வாங்கல்களில் சிக்கல்கள் இருக்கும். பணம் விஷயங்களில் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்காவது பணம் வாங்கி கொடுத்தால் நீங்கள் அந்த பணத்துக்கு ,வட்டியும், அசலையும் செலுத்த வேண்டியது இருக்கும். பண விசயங்களில் மிகவும் எச்சரிக்கை யாக இருந்தால் இந்த அஷ்டமகுரு உங்களை ஒன்னும் செய்யாது.

அஷ்டம குரு என்பதால் கௌரவத்திற்கு இடைஞ்சல்கள் வரலாம். வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளோடு அனுசரித்து செல்ல வேலை செய்யும் இடத்தில் பிரச்சினை கள் வராமல் தவிர்க்க முடியும். உங்கள் முதலாளி என்ன சொன்னாலும் இந்த காதில வாங்கி இந்த காதுல விட்டுறுங்க.. சிலருக்கு விரும்பும் இடத்திற்கு இடமாற்றமும் இருக்கும்.

இருந்தாலும் குரு தான் இருக்கும் இடத்தை காட்டிலும் பார்க்கும் இடங்கள் பெருகும் என்பதால் ,அவருடைய பார்வை படும் இடங்கள் நிச்சயமாக பெருகும். வளரும். குரு பார்க்க கோடி நன்மையை தரும்.
குருபகவான் எட்டில் இருந்து பன்னிரண்டாம் வீட்டை பார்ப்பதாலும் சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் வந்து அமையும்.

ஜனன ஜாதகத்தில் அதற்கான அமைப்புகள், தசாபுக்திகள் நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். அதேபோல் குருபகவான் இரண்டாம் இடத்தை பார்வையிடுவதால் தனவரவுகளும் நன்றாக இருக்கும். குருபகவான் சுபக்கிரகம் என்பதால் வருமானத்தை கொடுத்து விரையங்களை தருவார். குருபகவான் இரண்டை பார்ப்பதால் திருமணம் ஆகாத ஆண்,பெண் இருபாலருக்கும் திருமணம் நடந்து விடும்.

அவருடைய பார்வை நாலாம் இடத்திற்கு விழுவதால் ஜனன ஜாதகத்தில் நான்காம் அதிபதி, சுக்கிரனுடைய தசாபுக்திகள் நடைமுறையில் இருந்தால் சொந்த வீடு அமைந்து விடும். தாயார் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தாயாருக்கு நன்மைகள் உண்டாகும். தாயாரின் ஆதரவுகள் கிடைக்க பெறும்.

சரி இந்த ஆங்கில புத்தாண்டில் ராகுபகவான் 6.3.2019 ல் மூன்றாம் இடத்திற்கு செல்ல இருப்பது உங்களுக்கு ராகுவால் நன்மைகள் இருக்கும். ராகுவால் பல சகாயங்கள் கிடைக்க பெறும். ராகு அந்நிய கிரகம் என்பதால் அந்நியர்களால் நன்மைகள், குறிப்பாக வேற்று மதம் வேற்று இனத்தவர்களால் நன்மைகள் நிச்சயமாக இருக்கும்.கடந்த ஒன்றே கால் வருடமாக ராகு நான்காம் இடத்தில் இருந்து கொண்டு அலைச்சல்களை கொடுத்து வந்தார்.அலைக்கழிப்புகளை கொடுத்து வந்தார்.
அதெல்லாம் இனி இருக்காது.

மேசத்திற்கு ராகுவால் ஆதாயங்கள் இருக்கும். ராகுவால் பணவரவுக்கு பஞ்சம் இல்லை. கொடியவரான ராகு மூன்றில் தன்னுடைய நட்பு கிரகமான புதன் வீட்டில் இருப்பது பல வெற்றிகளை தரும்.எடுத்த காரியங்களை ஈசியாக முடிப்பீர்கள். பாவக்கிரகங்கள் ,அழுக்கு கிரகங்கள் மூன்றில் இருப்பது, மூன்று உபஜெய ஸ்தானம் என்பதால் காரிய வெற்றிகளை தந்து விடும்.பொதுவாக பாவக்கிரகங்கள் 3 ,6 ,11 நன்மைகளை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகு தன்னுடன் சேரும்,பார்க்கும் கிரகங்களின் பலனை பிடுங்கி தருபவர் என்பதால் சனிபகவானின் பலன்களை எல்லாம் பிடுங்கி அவர் தருவார் என்பதால் தொழில் சிறக்கும். ராகுவாலும்,குருவாலும் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெற்று ,அடிக்கடி விமான பயணங்கள் உண்டாகும்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம்.திரைகடல் ஓடியும் திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப்பெற்று உங்கள் சமுதாய அந்தஸ்தும் ,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையும் வருடம் இந்த 2019 ஆங்கில புத்தாண்டு ஆகும்.

கேது பகவான் இந்த வருடம் மார்ச் மாதம் பத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு வருகை புரிவது சிறப்பாகும். இதுவரை பத்தில் இருந்து வேலையில் அலைச்சல்களை, அடிக்கடி தொழில் மாற்றங்களை தொழில் நஷ்டங்களை தந்து வந்த கேது,இந்த வருடம் ஒன்பதாம் பாவத்துக்கு வருவது நல்லது.

ஒன்பதாம் பாவகம் கேதுவுக்கு மிகவும் பிடித்த இடமாகும். கேது ஞானி. அவர் ஒன்பதாம் இடமான திரிகோணத்தில் இருப்பது ,பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது ஆன்மீக விஷயங்களுக்கு நல்லது.பல கோவில்களுக்கு ,புண்ணிய நதிகளுக்கு ,காசி,ராமேஸ்வரம் என்று ஆன்மீக பயணங்களை நடத்தி வைக்கும். இது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புத்தருக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டது போல இவர்களுக்கு பக்தி மார்க்கத்தில் கேது ஈடுபடுத்துவார்.

அழுக்கு கிரகம், பாவக்கிரகமான சனி ஒன்பதாம் இடத்தில் இருப்பதாலும், பாக்கியாதிபதி தன்னுடைய வீட்டுக்கு பன்னிரண்டில் மறைவதாலும் ,ராசிக்கு எட்டில் மறைவதாலும் ,போதாக்குறைக்கு கேதுவும் ஒன்பதாம் இடம் செல்வதாலும், இந்த ராசிக்காரர்களின் தகப்பனாருக்கு பீடைகள் உண்டாகும்.

மேசராசிக்காரர்கள் தாய்க்கு நன்மைகள் இருக்கும் அதே நேரத்தில் வயதான தகப்பனாரின் உடல்நிலையில் கவனம் தேவைப்படும். தகப்பனாரால் இவர்களுக்கு விரையங்கள் ஏற்படும்.பொதுவாக மேச ராசிக்காரர்களுக்கு இந்த 2019 மிகச்சிறந்த ஆண்டாக ,மகிழ்ச்சி கரமான ஆண்டாக,சகோதர ஆதாயம் உள்ள ஆண்டாக, குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும் ஆண்டாக, பயணங்கள், நிறைந்த ஆண்டாக ,வயதான தகப்பனாருக்கு தொல்லைகள் தரும் ஆண்டாக ,வருமானம் அதிகரித்து, செலவுகள் குறைந்து உபரிப்பணம் மிச்சமாகி தைரியத்துடன் ,காரிய வெற்றிகளை தரக்கூடிய நல்ல ஆண்டு இந்த 2019 என்று கூறிக்கொண்டு அடுத்த ரிஷப ராசியில் சந்திப்போம் என்று கூறி

நன்றி வணக்கம்
ஜோதிடர்

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More